சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்த உலகளாவிய சாசனத்தில் இணைகிறது இலங்கை

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணையும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை மாறவுள்ளது.

சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் (Global Charter on Children’s Care Reform) இணைவதற்கான உத்தியோகபூர்வ விருப்பத்தை இலங்கை செவ்வாய்க்கிழமை (17) கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் வைத்து வெளிப்படுத்தியது.

இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், நீதித்துறை அமைச்சரும் (லோர்ட் சான்சலர்) பிரதிப் பிரதமருமான உயர் கௌரவ டேவிட் லம்மி அவர்கள் கலந்துகொண்டார். இலங்கை அரசாங்கத்தின் சார்பில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்களினால் இதற்கான உத்தியோகபூர்வ விருப்பக் கடிதம் கையளிக்கப்பட்டது.

இலங்கை நீண்டகாலமாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் பிரகடனத்தில் (UNCRC) ஒரு பங்காளியாக இருந்து வருவதுடன், சர்வதேச சட்டங்களின் கீழ் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. சிறுவர்களுக்கான மாற்றுப் பராமரிப்பு தொடர்பான 2009 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வழிகாட்டுதல்கள், பெற்றோர் பராமரிப்பு அற்ற சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான 2019 பொதுச் சபை தீர்மானம் (A/RES/74/133), 2022 நிறுவனமயமாக்கலை நீக்குதல் தொடர்பான வழிகாட்டுதல்கள் (CRPD/C/5), 2022 கிகலி (Kigali) பிரகடனம் மற்றும் 2024 சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதலாவது உலகளாவிய அமைச்சர்கள் மாநாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உலகளாவிய சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வரை உலகில் 34 நாடுகள் இந்த சாசனத்தை அங்கீகரித்துள்ளன.

தெற்காசிய பிராந்தியத்தில் இதுவரை எந்தவொரு நாடும் இந்த சாசனத்தில் இணையாத நிலையில், அதில் இணையும் முதல் தெற்காசிய நாடாக இலங்கை திகழ்கின்றது.

இலங்கையின் தேசிய சிறுவர் பராமரிப்புக் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதும், அவற்றை சர்வதேச தரத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவதும் இந்த சாசனத்தில் இணைவதன் முதன்மை நோக்கமாகும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ அமைச்சர்:

“சிறுவர்களின் நலன் என்பது வெறுமனே ஒரு வார்த்தையாக மட்டுமல்லாது, அது ஒரு நடைமுறையாக இருக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டார்.

யுனிசெப் (UNICEF) மற்றும் இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இதில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு ஆண்ட்ரூ பேட்ரிக், இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மாண்புமிகு தெரேசா ஓ மகோனி, இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திரு.மார்க் அன்ட்ரே பிரான்சே, யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி திருமதி.எம்மா பிரிகம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி.தரங்கனி விக்கிரமசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Untitled

யாழில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தைக் குழப்ப முயற்சி… – சிவயோகநாதன்

August 28, 2026

ர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக

default (51)

இதுபோன்ற தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை; ஸ்கார்பரோ சென்டர்-டான் வேலி ஈஸ்ட் தொகுதி மக்களுக்குச் சேவையாற்றும் எனது பணியிலிருந்து இது என்னை பின்வாங்கச் செய்யாது.”-சல்மா ஜாஹித்

August 28, 2026

நேற்றிரவு தனது இல்லத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கனடாவின் ஸ்கார்பரோ சென்டர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்

bea

அழகு நிலையத்தில் 7 கோடி ரூபா ஹெரோயின்: தம்பதியினர் கைது!

August 28, 2026

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய்

mark carney55

லிபரல் கட்சி எம்.பி.யைக் குறிவைத்து நடத்தப்பட்ட தீவைப்புச் சதி ஒரு ‘கோழைத்தனமான’ அச்சுறுத்தல் செயல்: கார்னி கண்டனம்

August 28, 2026

ஒட்டாவா — தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் திட்டமிட்ட தீவைப்புச் சதி நடந்திருப்பதாகக் கூறியுள்ள கனடியப் பிரதமர்

Dead

மரத்தில் இருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு

August 28, 2026

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள கிர்க்ஸ்வால் தோட்டதில் மரம் ஒன்றில் இருந்து தவறி வீழ்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். சுமார்

nap

நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 389 ஆக உயர்வு

August 28, 2026

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில மணி நேரங்களுக்கு

default (50)

லிபரல் கட்சி எம்.பி.யின் வீட்டில் கார்கள் கொளுத்தப்பட்ட சம்பவம்: தீவைப்புச் சதியா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை

August 28, 2026

ஸ்கார்பரோ சென்டர் தொகுதி எம்.பி. சல்மா ஜாஹித்தின் காரும், அருகிலிருந்த வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டதை அவரது அலுவலகம் உறுதி செய்துள்ளது. ஸ்கார்பரோ

HPgenfsb0AEZu1o

“கடந்த 6 ஆண்டுகளில் தி.மு.க.வில் நடந்ததைச் சொல்லட்டுமா?” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

August 27, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, தி.மு.க. எம்.எல்.ஏ ராஜாவின்

1200-675-27496391-thumbnail-16x9-cmvijay

சட்டப்பேரவை மரபை மாற்றிய முதலமைச்சர் விஜய்: சக அமைச்சர்களுடன் அமர்ந்து நிகழ்வுகளைக் கவனித்த சுவாரஸ்யம்!

August 27, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தனக்கென ஒதுக்கப்பட்ட பிரத்யேக இருக்கையில் அமராமல், சக அமைச்சர்களுடன்

1200-675-27498226-thumbnail-16x9-pinhole

உலகின் முதல் நுண்துளை கருவிழி சீரமைப்பு மையம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

August 27, 2026

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், உலகின் முதல் ‘பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி’ (Pinhole Pupilloplasty –

photo-collage.png

செம்மணி மனிதப் புதைகுழி; ஐ.நா விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினர்

August 27, 2026

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து சுயாதீன விசாரணைகள் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள்

rum

ஈட்டி எறிதல் தரவரிசையில் ருமேஷ் தரங்கவுக்கு மீண்டும் முதலிடம்

August 27, 2026

பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக்