பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண 2026–2027 நிதியாண்டுக்கான பட்ஜெட்

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் 2026–27 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பட்ஜெட்டில் வரிவிதிப்பு உயர்வுகள், 15,000 பொதுத்துறை பணியிடக் குறைப்புகள், மற்றும் 13 பில்லியன் டொலர் பற்றாக்குறை கணிப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியா அரசின் 2026 பட்ஜெட்டில் பல்வேறு வரி உயர்வுகள், மூலதனத் திட்டங்களில் தாமதங்கள், மற்றும் மூன்று ஆண்டுகளுக்குள் 15,000 பொதுத்துறை வேலைவாய்ப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், நீண்டகாலத்திற்கும் குறிப்பிடத்தக்க நிதிப் பற்றாக்குறைகள் தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்ஜெட் எங்களின் முந்தைய பட்ஜெட்டுகளிலிருந்து மாறுபட்டதாகும் என்று நிதி அமைச்சர் பிரெண்டா பெய்லி (Brenda Bailey) நேற்று செவ்வாய்க்கிழமை சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரையில் தெரிவித்தார்.

அவரது உரையில், அமெரிக்கா விதித்துள்ள வரிவிதிப்புகள் (tariffs) மற்றும் வீட்டு சந்தையின் மந்தநிலை போன்ற சவால்களே மாகாணத்தின் தற்போதைய பொருளாதார நிலைக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டது.

அடுத்த இரு ஆண்டுகளுக்கான பற்றாக்குறைகள் முறையே 12.1 பில்லியன் டொலர் மற்றும் 11.4 பில்லியன் டாலராக இருக்கும் என அரசு கணித்துள்ளது. இதனுடன், மாகாணத்தின் மொத்தக் கடன் அடுத்த மூன்று ஆண்டுகளில் 154 பில்லியன் டொலரிலிருந்து 235 பில்லியன் டொலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ஆழமான செலவுக் குறைப்புகளுடன் கூடிய சிக்கனப் பட்ஜெட்டை (austerity budget) நாங்கள் விரும்புகிறோம் என்று கூறுபவர்கள் உள்ளனர்,” எனக் கூறிய பேலி, மாகாணத்தின் நிகரப் பொறுப்புகளை (net liability) உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) சதவீதமாக கணக்கிட்டு, கனடாவின் பிற மாகாணங்களுடன் ஒப்பிட்டு கடன் உயர்வை நியாயப்படுத்தினார்.

அரசு அறிவித்துள்ள வரி உயர்வுகள் பெரும்பாலும் உயர்ந்த வருமானம் பெறும் குடிமக்களை பாதிக்கும் வகையில் அமையும் என்றும், இதன் மூலம் சராசரியாக ஆண்டுக்கு 76 டொலர் கூடுதல் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதிப்பீட்டில் 3 மில்லியன் டொலரை மீறும் வீடுகளுக்கான மாகாண சொத்துவரியின் (School Tax) பகுதி உயர்த்தப்படும். அதனுடன், காலியாக உள்ள அல்லது ஊக முதலீட்டிற்காக வைத்திருக்கும் சொத்துகளுக்கு விதிக்கப்படும் speculation and vacancy tax மூன்று சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

HPgenfsb0AEZu1o

“கடந்த 6 ஆண்டுகளில் தி.மு.க.வில் நடந்ததைச் சொல்லட்டுமா?” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

August 27, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, தி.மு.க. எம்.எல்.ஏ ராஜாவின்

1200-675-27496391-thumbnail-16x9-cmvijay

சட்டப்பேரவை மரபை மாற்றிய முதலமைச்சர் விஜய்: சக அமைச்சர்களுடன் அமர்ந்து நிகழ்வுகளைக் கவனித்த சுவாரஸ்யம்!

August 27, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தனக்கென ஒதுக்கப்பட்ட பிரத்யேக இருக்கையில் அமராமல், சக அமைச்சர்களுடன்

1200-675-27498226-thumbnail-16x9-pinhole

உலகின் முதல் நுண்துளை கருவிழி சீரமைப்பு மையம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

August 27, 2026

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், உலகின் முதல் ‘பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி’ (Pinhole Pupilloplasty –

photo-collage.png

செம்மணி மனிதப் புதைகுழி; ஐ.நா விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினர்

August 27, 2026

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து சுயாதீன விசாரணைகள் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள்

rum

ஈட்டி எறிதல் தரவரிசையில் ருமேஷ் தரங்கவுக்கு மீண்டும் முதலிடம்

August 27, 2026

பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக்

parliment

22ஆவது திருத்தம்: NPP எம்.பியும் மனுத்தாக்கல்

August 27, 2026

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து, தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆராச்சி உயர்

court-judge-hammer-gavel-696x398

விபத்தில் ஏழு பேர் பலி: சாரதிக்கு 13 வருட கடூழியச் சிறை உறுதி

August 27, 2026

2017ஆம் ஆண்டு சிலாபம் பகுதியில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்து ஒன்றில் 7 பேர் உயிரிழக்கக் காரணமாகவிருந்த தனியார் பேருந்து

anu

இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கு நாட்டில் இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

August 27, 2026

நாட்டில் மீண்டும் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

29

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள் எங்கே?

August 27, 2026

இறுதி யுத்தத்தின்போது பெற்றோர்களால் இலங்கை இராணுவத்திடம் உயிருடன் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை கூற முடியாத

images

தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான், கருணா மற்றும் தவ்ஹீத் ஜமாத் அமைப்புகளுடன் அசாத் மௌலானா தொடர்பிலிருந்தார் – தேசபக்தி தேசிய இயக்கம் திட்டவட்டம்

August 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான் தரப்பு, கருணா தரப்பு மற்றும் சஹ்ரானின் தவ்ஹீத் ஜமாத் ஆகிய அமைப்புகளுடன் அசாத் மௌலானா

WhatsApp Image 2026-08-27 at 21.05.58

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை உள்ளிருந்தே அவதானித்த நீதி அமைச்சர்!

August 27, 2026

ழ். மாவட்ட செயலகத்திற்கு வெளியே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் தொடர்பில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

image-3

“தேர்தல் நாள் நெருங்கும் வேளையில் பிராட்போர்ட்டை விட சவ் மிதமான முன்னிலையைத் தக்கவைத்துக் கொள்கிறார்: புதிய கருத்துக்கணிப்பு”

August 27, 2026

தேர்தல் நாளுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், கவுன்சிலர் பிராட் பிராட்போர்ட்டை (Brad Bradford) விட மேயர் ஒலிவியா