பொலிஸ் தாக்குதல்; பாதிரியார் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் கத்தோலிக்க பாதிரியார், நீர்கொழும்பு பொது வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று (25) பிற்பகல் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தம்மைத் தாக்கியதாகத் தெரிவித்து, கொடதெனியாவ பிரதேசத்தைச் சேர்ந்த மிலான் பிரியதர்ஷன என்ற கத்தோலிக்க பாதிரியார் நேற்று முன்தினம் (24) நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேற்று இரவு வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிள்களில் தம்மைப் பின்தொடர்ந்து வந்த பொலிஸ் குழுவினர் தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நீர்கொழும்பு வைத்தியசாலையின் 7ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த பாதிரியாரின் நலன் குறித்து விசாரிப்பதற்காக தேசிய கத்தோலிக்க வெகுஜன தொடர்புப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன உள்ளிட்ட குழுவினர் இன்று நீர்கொழும்பு வைத்தியசாலைக்குச் சென்றிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் ஆறு அதிகாரிகள் கம்பஹா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

குறித்த விசாரணைப் பிரிவின் மோட்டார் சைக்கிள் அதிரடிப் படையைச் சேர்ந்த மூன்று பொலிஸ் சார்ஜன்ட்களும் மூன்று பொலிஸ் கொன்ஸ்டபிள்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பொலிஸ் அதிகாரிகளும் இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

sajith 5

உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளை மறைக்காது சர்வதேச விசாரணை நடத்துங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிய சர்வதேசப் பாதுகாப்பு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் வெளிப்படையான விசாரணை

thyity

மே தின எழுச்சி மற்றும் எதிர்ப்புப் போராட்டங்களைத் தையிட்டியில் நடத்துமாறு கோரிக்கை

April 21, 2026

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி அன்று தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தாங்கள் முன்னெடுக்கும் வழமையான

ME2E3MRK3VCC5GEM6ZTXVUXPWI

கியூபெக்கில் பெண்கொலைகளைத் தடுக்கச் சட்டம் இயற்றக் கோரி பகிரங்கக் கடிதம்

April 21, 2026

கியூபெக் மாகாணத்தில் பெண்களுக்கு எதிரான கொலைகளைத் தடுப்பதற்காகப் புதிய சட்டம் மற்றும் “வலுவான” நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கியூபெக் சொலிடேர் (Québec

NTVKHXN6E5AT7HM5PROAVJNYUA (1)

பிராட்போர்ட் குடியிருப்பு பகுதியில் துப்பாக்கி ஏந்திச் சென்ற கும்பல்: பொலிஸார் விசாரணை

April 21, 2026

பிராட்போர்ட் வெஸ்ட் கிவில்லிம்பரி (Bradford West Gwillimbury) பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், சிலர் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களை ஏந்திச்

machete

ஜோர்ஜியன் மாலில் கத்தியுடன் மிரட்டிய விவகாரம்: 16 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு

April 21, 2026

ஒண்டாரியோவின் பாரி நகரில் உள்ள ஜோர்ஜியன் மாலில் கடந்த மாதம் இடம்பெற்ற மோதலின் போது, கத்தியுடன் (Machete) சிலரைத் துரத்திச்

ananda

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் விரைவில் நிறைவடையும்: அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

April 21, 2026

உயிர்த்த ஞாயிறுஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்படும் என பொது பாதுகாப்பு மற்றும்

default (3)

2 நாட்களாக மருத்துவமனையில் காத்திருந்து உயிரிழந்த பூர்வீகக்குடியை சேர்ந்த பெண்: இது ஒரு ‘கொலை’ எனத் தீர்ப்பளிக்கக் கோரும் குடும்பத்தினர்

April 21, 2026

கனடாவின் ஒண்டாரியோவில் உள்ள மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சைக்காகக் காத்திருந்து, இறுதியில் முறையான கவனிப்பின்றி உயிரிழந்த பூர்வீகக்குடியை சேர்ந்த பெண்ணான

hungary pm

நெதன்யாகு ஹங்கேரிக்கு வந்தால் கைது செய்வோம்: புதிய பிரதமர் பீட்டர் மக்யார் அதிரடி

April 21, 2026

ர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இருந்து ஹங்கேரி விலகும் முடிவை தாம் நிறுத்தப்போவதாக ஹங்கேரியின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள பீட்டர்

Screenshot

இலங்கைக்கருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை: பென்டகன் அறிவிப்பு

April 21, 2026

ஆசியக் கடற்பரப்பில் ஈரானிய எண்ணெய் கப்பல் (Oil Tanker) ஒன்றில் அமெரிக்கப் படைகள் ஏறிச் சோதனை நடத்தியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத்

tn-chief-electoral-officer-archana-patnaik-has-said-sir-forms-have-been-6-16-crore-people-in-tamil-nadu

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: உடனடியாக அமலுக்கு வந்த கெடுபிடிகள்! மீறினால் 2 ஆண்டு சிறை – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

April 21, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு

hwar

வடக்கு மாகாண ஆளுநருடன் யாழ். கட்டளை தளபதி சந்திப்பு

April 21, 2026

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, வடக்கு மாகாண ஆளுநர்

Diana

முன்னாள் அமைச்சர் டயனா கமகேயிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

April 21, 2026

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தவறான தகவல்களை வழங்கியமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை