ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்துக்கு தடை

நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியினை தொடர்ந்து ஹட்டன், கண்டி பிரதான வீதியில் பல இடங்களில் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது.

இதனை சரிசெய்யும் நடவடிக்கையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை இரானுவம்,பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து பாரிய அர்ப்பணிப்புடன் செயப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பல வீதிகளின் போக்குவரத்து வழமை நிலைக்கு திரும்பியுள்ள போதிலும், கடந்த 26 ம் திகதி தொடக்கம் ஹட்டன் – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து பாஹலகம கல்போக்குவ பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் முற்றாக தடைப்பட்டுள்ளன.

இந்த வீதியினை சீர்செய்யும் பணி இடம்பெற்று வரும் நிலையில், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தருண திசாநாயக்க நேற்று 08 ஆம் திகதி வீதியினை பார்வையிடுவதற்காக கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துசாரி ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில்,

நாவலப்பிட்டி பகுதியில் உள்ள பிரதான வீதி இதுவாகும். கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இந்த வீதி முற்றாக செயலிழந்துள்ளது.

எமது மக்களின் நிர்வாக தேவைகள் நிறைவேற்றிக்கொள்வதற்கு அதிகமான மக்கள் கண்டியினை நோக்கி தான் செல்ல வேண்டும்.இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று நீண்ட தூரம் நடந்து சென்று இருபக்கங்களிலும் உள்ள பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வீதியினை புனரமைக்க வேண்டிய தேவை மிக அதிகமாகவே காணப்படுகின்றது

எனவே நாங்கள் இரவு பகலாக இதனை முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்கி வருகிறோம். அதே நேரம் இந்த இடத்தில் எண் கண்முன்னேயே எம் உறவுகள் புதையுண்டனர். அவர்களின் சடலங்கள் கூட மீட்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், அவர்களின் ஆத்மா சாந்தியடைய அவர்களுக்கு சமய அனுட்டானங்களை அருகிலுள்ள கட்டடத்தில் செய்ய வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை ஏற்பட்டதாகவும், வீதியினை மிக விரைவில் திறக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பிரதான வீதியின் சுமார் ஒரு கிலோ மீற்றருக்கும் அதிகமான பகுதி பாரிய மண்சரிவுக்கு உட்பட்டு புகையிரத வீதி அங்கிருந்த வர்த்தக நிலையங்கள்,குடியிருப்புக்கள் ஆகிய மண்ணில் புதையுண்டன. குறித்த பகுதியில் சுமார் 18 பேர் வரை மண்ணில் புதையுண்டிருக்கலாம் என ஊகம் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறான நிலையில் நாவலப்பிட்டி ஊடாக கண்டி செல்பவர்கள் இந்த பஹலகம பகுதியில் இறங்கி,சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கும் அப்பால் சென்று உலபனை பகுதியில் பேருந்தில் ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி செல்லும் நோயாளர்கள் நடந்து செல்ல முடியாததனால் அப்புகஸ்தலாவ வீதியூடாக கம்பளை சென்று நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இந்த வீதியினை மிக விரைவில் புனரமைக்க வேண்டிய தேவை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

lav

லாவோஸில் 1000 அடி ஆழமான குகைக்குள் சிக்கியவர்களில் நால்வர் மீட்பு

May 31, 2026

லாவோஸின் மத்திய ஷைசோம்போன் மாகாணத்தில் உள்ள நிலத்தடி குகையொன்றில் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்தவர்களில் நால்வரை மீட்பதற்கு லாவோஸ் மற்றும்

dailythanthi_2026-05-31_rsoq9wd2_rupees

“காகித நோட்டுகளுக்குப் பாய்ந்தது குட்பை!” – கிழிவதைத் தடுக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி அசுர வேகத் தீவிர ஆலோசனை!

May 31, 2026

சென்னை: “இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட ஆயுள் கொண்ட அதிநவீன பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது

262-2026-05-30-17-14-21

“திமுக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா?” – எடப்பாடியை முதலமைச்சராக்க திமுக முயன்றதாகக் கூறி காதர் மொய்தீன் அசுர வேகப் பரபரப்புப் பேட்டி!

May 31, 2026

கடலூர்: “தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழலில், திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வேண்டாமா

minister-maria-wilson

“மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்!” – வேளாங்கண்ணியில் நிதி அமைச்சர் மரிய வில்சன் அசுர வேக அதிரடி அறிவிப்பு!

May 31, 2026

நாகப்பட்டினம்: “தமிழகப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உன்னதமான மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2500 ஆக உயர்த்தி வழங்குவது குறித்த

maalai-malar_2026-05-30_ingb99wd_ramesh

“தவறிழைத்த அர்ச்சகரைத் தண்டித்தால் உங்களுக்கு ஏன் கொந்தளிப்பு?” – திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அசுர வேகப் பதிலடி!

May 31, 2026

தூத்துக்குடி: “ஆன்மீகப் பூமி திருச்செந்தூர் கோயிலில் மாஸ்க் அணிந்து நடத்திய அதிரடி ஆய்வில், பக்தர்களைச் சுரண்டி லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்

leema-rose-martin-interview-admk-split-controversy-sp-velumani-group-coimbatore-2026-05-15-16-50-35

“எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா?” – தன்னை விமர்சித்த வாடகை பேச்சாளர்களை அசுர வேகத்தில் வெளுத்து வாங்கிய லீமா ரோஸ் மார்ட்டின்!

May 31, 2026

சென்னை: “அதிமுக-வுக்குள் நிலவிய உள்கட்சிப் பூசல்கள் அனைத்திற்கும் நான்தான் காரணம் என எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றிச் சொல்லிய கட்டுக்கதைகள்

Inbathurai

“ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்!” – ‘நிழல் முதல்வர்’ என அதிரடியாக கிண்டலடித்த அதிமுக எம்பி இன்பதுரை!

May 31, 2026

சென்னை: “தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அசுர வேகத் தூணாக வலம் வரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது வாழ்நாளில்

7d68301febfdc77e4fa5939a4022b2f51779584709047732_original

“டாஸ்மாக்கை கண்ணியமான துறையாக நடத்துவோம்!” – பாட்டிலுக்கு ரூ.10 வாங்குவதை ஒழிக்க அமைச்சர் விக்னேஷ் அசுர வேக அதிரடிப் பேச்சு!

May 31, 2026

கோயம்புத்தூர்: “அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவைப் போலத் தமிழ்நாட்டிலும் டாஸ்மாக் நிறுவனத்தை ஒட்டுமொத்தச் சக தொழிலாளர்களும் மதித்துப் பார்க்கும்

1200-675-26809821-thumbnail-16x9-may30

“தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்!” – மேகதாது அணைக்கு எதிராக கர்நாடகாவை முற்றுகையிட அசுர வேகத்தில் கிளம்பிய தமிழக விவசாயிகள்; பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்!

May 31, 2026

தஞ்சாவூர்: “கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட முற்பட்டால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் சுடுகாடாக மாறி, விவசாய மக்கள் அகதிகளாக

2

“வள்ளுவருக்கு மீண்டும் காவி பெயிண்டா?” – ஆளுநர் மாளிகை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யை வறுத்தெடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

May 31, 2026

சென்னை: “ஆளுநர் மாளிகையில் தமிழர்களின் ஆகச்சிறந்த அடையாளமான திருவள்ளுவருக்கு மீண்டும் காவி வண்ணம் பூசப்பட்டதற்கு எதிராக, எப்போதும் ‘மியூட்’ (Mute)

un

சுதீப் – விக்ராந்த் இணைந்து மிரட்டும் ‘அன்டர்-18’

May 31, 2026

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்- பான் இந்திய நடிகருமான கிச்சா சுதீப் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மையான வேடத்தில்

aa

புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் ஆகாஷ் முரளி

May 31, 2026

‘நேசிப்பாயா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆகாஷ் முரளி அடுத்ததாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை அறிமுக