வெள்ள அனர்த்தம்; இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணிகள்!

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணிகள்!

வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும், முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது. உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப்பணிகளும் சரியானமுறையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் இன்று (03) ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஊடாக இந்த நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இதன்முதல் கட்டமாக களுவாஞ்சிகுடி பகுதியில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட சுமார் 1,000 பேருக்கான நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தலைமையில் களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தில் போரதீவுப்பற்ற பிரதேசசiபின் தவிசாளர் வி.மதிமேனன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிவாரண வேலைத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன்,

மலையகத்திற்கு விஜயம் செய்தபோது பல பரிதாபகரமான சம்பங்கள் தொடர்பில் அறிந்துகொண்டோம். சில இடத்தில் முழு கிராமமுமே புதையுண்ட நிலை காணப்படுகின்றது. அந்தநேரத்தில் வீடுகளில் இல்லாத சிலர் தப்பி பிழைத்துள்ளனர். அங்கிருந்த ஒருவர் தனது முழுக்குடும்பமுமே புதையுண்டுள்ளதாகவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு யாரும் வரவில்லை, மூன்று நாட்களாக எப்படியாவது தமதுகுடும்பத்தினரின் உடல்களை மீட்கவேண்டும் என போராடிவருவதாக தெரிவித்தார்.

அங்கு சிலர் தமது பணத்தினைக்கொடுத்து டிசல், இயந்திரங்களை எடுத்து தேடும் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நிவாரண பணிகளில் அனைவரும் கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் ஒன்றிணையவேண்டும் என அரசாங்கமும் சொல்கின்றது நாங்களும் கூறுகின்றோம் அனைவரும் கூறுகின்றார்கள்.

ஆனால் இந்த விடயங்களில் ஏனைய கட்சிகளை புறந்தள்ளிவைப்பதில் அரசாங்கம் மும்முரமாக செயற்படுவது வெளிப்படையாக தெரிகின்றது.

நேற்று (02) கண்டி அரசாங்க அதிபரை சந்தித்தபோது கம்பளை பகுதியில் 19 பேர்தான் உயிரிழந்துள்ளதாக சொல்கின்றார். நாங்கள் சென்ற முதல் இடத்திலேயே 26 உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் 50 இற்கும் மேற்பட்டவர்கள் புதையுண்டுள்ளதாக கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு பல கிராமங்கள் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. அந்த பகுதிகளில் மக்கள் சென்று மீள வாழமுடியாத வகையில் அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளது.

நேற்று நாங்கள் சென்ற பதுளை மாவட்டம், நுவரெலியா மாவட்டங்களில் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது. அங்குள்ள மக்கள் எங்களைக்கண்டதும் கண்ணீருடன் தமது கஸ்டங்களை கூறினார்கள். அப்பகுதியில் உடனடி நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்படாதது மக்கள் மூலம் அறியமுடிந்தது.இதனை நாங்கள் கூறைகூறவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை.

அரசாங்கத்தினை குறைகூறுவதற்காக இதனை சொல்லவில்லை. மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் சென்றடையவேண்டும், மக்களின் உயிரிழப்புகள் எத்தனையென்பது தெளிவாக தெரியவேண்டும். உண்மையினை முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கமுடியாது.

நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கின்றபோது முகத்தினை இறுக்கமாக வைத்துக்கொண்டு பத்து பதினைந்துபேர்தான் உயிரிழந்துள்ளார்கள் என அரசாங்கம் பதில் சொன்னால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்தவேளையில் அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது.உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப்பணிகளும் சரியானமுறையில் நடைபெறும்.

விசேடமாக ஊடகங்களை இதனை விமர்சிப்பதை பார்க்கமிகவும் அருவறுப்பாக இருக்கின்றது.செய்தியை பிரசுரிப்பதுதான் அவர்களின் வேலையாக இருக்கவேண்டுமே தவிர செய்திகளின் பின்பக்கமான கிரிக்கட் வர்ணணை போன்று தமது விமர்சனங்களை முன்வைப்பது அருவறுக்கத்தக்க செயலாகும்.

இந்த பேரிடர் எவ்வளவு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியாமல் அவர்கள் அரசியல் செய்துகொண்டிருப்பதை காணமுடிகின்றது. இந்தநேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்துதான் மக்களை காப்பாற்றவேண்டும்.

இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என்று கூறுகின்றோம்.சுனாமி அனர்த்தம் வந்தவேளையில் அன்றைய அரசாங்கமே வடகிழக்கில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து கட்டமைப்பினை ஏற்படுத்தியது.அந்த பிரதேசங்களிலே ஆளுகை செய்தவர்கள் அவர்கள்.அந்தவேளையில் அதனை தடுப்பதற்கு நீதிமன்றபடியேறிய ஜேவிபியினருடன் இணைந்து வேலைசெய்வதற்கு நாங்கள் தாயராகயிருக்கின்றோம் என்றால் வேறு யாருடன் நாங்கள் சேர்ந்து செயற்படமாட்டோம்.அனைவருடமும் இணைந்து நாங்கள் செயற்படுவோம் என தெரிவித்தார்.

தமிழக-மக்கள்-கழகம்

விஜய்க்கு எதிராக நடிகர் அஜித் அரசியலா? “தமிழக மக்கள் கழகம்” – கள்ளக்குறிச்சியில் ரசிகர்கள் புதிய கட்சி தொடக்கம்!

September 20, 2026

கள்ளக்குறிச்சி: திரைப்படங்களிலும் கார் பந்தயங்களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, ‘தமிழக மக்கள்

Tamil_News_lrg_4088019

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: கோயம்புத்தூர் உள்பட 21 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!

September 20, 2026

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வருவதால், கோயம்புத்தூர், நீலகிரி உள்பட தமிழகத்தின் 21 மாவட்டங்களில் நாளை

RAJMOHAN3

“மு.க.ஸ்டாலின் பட்டிமன்றப் பேச்சாளரைப் போல் எதுகை மோனையில் பேசுகிறார்!” – அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம்

September 20, 2026

திருநெல்வேலி: திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ஆளும் தவெக அரசின் செயல்பாடுகளை விளக்கியதுடன்,

tn-che-08-vinayagar-script-photo-7204807_20092026210403_2009f_1789918443_215

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் அடுத்தடுத்து மோதல் மற்றும் சலசலப்பு!

September 20, 2026

சென்னை: பலத்த காவல் துறை பாதுகாப்புக்கு மத்தியில், சென்னையில் இன்று நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பட்டினப்பாக்கம்

images (12)

“அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தது டெங்குவால் அல்ல; உண்ணிக் காய்ச்சலால்!” – சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

September 20, 2026

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், அண்ணா பல்கலைக்கழக மாணவரின் உயிரிழப்பு

HH9G3vpboAECv_k

“வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை!” – அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் நாளை அவசர ஆலோசனை!

September 20, 2026

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையிலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் நாளை முதல் 21 மாவட்டங்களில்

1200-675-27675426-thumbnail-16x9-protestannouncement

“பிற மாநிலங்களுக்கு இணையான ஊதியம் தேவை!” – அக்டோபர் 5-ல் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

September 20, 2026

சென்னை: தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள், தங்களுக்குப் பிற மாநிலங்களுக்கு இணையான ஊதிய உயர்வு மற்றும் பணிப்பெயர் மாற்றம்

Tamil_News_lrg_4088019

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: கோயம்புத்தூர் உள்பட 21 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!

September 20, 2026

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வருவதால், கோயம்புத்தூர், நீலகிரி உள்பட தமிழகத்தின் 21 மாவட்டங்களில் நாளை

1200-675-26075167-thumbnail-16x9-ctrnirmal

“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தவெக அரசு அனுமதிக்காது!” – அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்

September 20, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு சட்டத்துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல்குமார்,

tamil-nadu-govt-employees

5 மாதங்களில் ரூ. 30,021 கோடி நிதிப் பற்றாக்குறை: தவெக அரசின் வரவு – செலவு கணக்கு வெளியீடு!

September 20, 2026

சென்னை: 2026-27 நிதியாண்டின் முதல் 5 மாதங்களுக்கான (ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை) தமிழ்நாடு அரசின் தற்காலிக நிதிநிலை அறிக்கையை

sivajisanthi

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி காலமானார்

September 20, 2026

சென்னை: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா தம்பதியின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி

ne7

தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரை

September 20, 2026

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில் தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரையும்