இந்தியப் பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இடையிலான தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது இலங்கையில் இடம்பெற்ற வெள்ளப் பாதிப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த மோடி, “சாகர் பந்து” நடவடிக்கையின் கீழ் தொடர்ந்த ஆதரவு இந்தியாவுக்கு வழங்கப்படுமென உறுதியளித்தார்.
இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, திங்கட்கிழமை (1) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு உரையாடினார்.
இந்த உரையாடலின்போது, இலங்கையில் நிகழ்ந்த பெரும் வெள்ளப் பேரழிவால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள், சொத்துச்சேதங்கள் மற்றும் மக்களின் துன்பங்களுக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, “ஒப்பரேஷன் சாகர் பந்து” (Operation Sagar Bandhu) என்ற பெயரில் இந்தியா ஏற்கனவே வழங்கி வரும் மனிதாபிமான மற்றும் அவசர உதவிகளை மேலும் வலுப்படுத்த இந்தியா முற்றிலும் தயாராக உள்ளதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் கீழ் இந்திய கடற்படை, வான்படை மற்றும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் இலங்கைக்கு தேவையான நிவாரணப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உணவு, குடிநீர் மற்றும் மீட்பு உபகரணங்களை இந்தியா இலங்கைக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.