நாடு முழுவதும் காற்றுடன் மழையுடனான வானிலை !

அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக இலங்கையின் தென் திசையில் தாழ் அமுக்கப் பிரதேசம் நிலைகொண்டிருந்தது.

இது அடுத்துவரும் 30 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக விருத்தியடையும். இதன் தாக்கத்தின் காரணமாக அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும்.

ஆகையினால் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 150 மில்லமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்வதுடன் நாட்டின் ஏனைய பிரராந்தியங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு , கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் அடுத்துவரும் 30 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கமாக விருத்தியடைய இருப்பதால் இன்று முதல் மறு அறிவித்தல் கிடைக்கும் வரையில் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து வட திசையை நோக்கி காற்று வீசும். காற்றின் வேகம் சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றராக அதிகரித்தும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் இருந்து மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 – 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

4

சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல! – ஜெயக்குமார் ஆவேசப் பதிவு!

June 24, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திமுக-வை நையாண்டி செய்து பேசிய குட்டிக்கதை, எதிர்க்கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

3

பட்டியலின மக்களுக்கு மறுக்கப்பட்ட ஆலயப் பிரவேசம்; அதிரடி காட்டிய தமிழக அரசு!

June 24, 2026

கரூர் மாவட்டம்: கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம், புஞ்சை கடம்பன்குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் அருள்மிகு

sajith 2026

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்தி, மாகாண சபைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

June 24, 2026

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நாட்டின் உச்சக்கட்ட சட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதால் அது பாதுகாக்கப்பட வேண்டும். எனினும், அதனைப்

2

இன்னும் நடிகராகவே செயல்படுகிறார் முதலமைச்சர் விஜய்! – சிவசங்கர் அதிரடிப் பேட்டி!

June 24, 2026

சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திமுக மீது முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர், அண்ணா

729115779_1015905364372317_7450818906267864328_n

வடக்கு மாகாணத்தில் ‘வெளிப்படுத்தல் உறுதி’ ஊடாக இடம்பெறும் மிகப் பெரிய காணி மோசடிகள் -பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன்

June 24, 2026

வடக்கு மாகாணத்தில் ‘வெளிப்படுத்தல் உறுதி’ ஊடாக இடம்பெறும் மிகப் பெரிய காணி மோசடிகளைத் தடுக்கும் வகையில், நொத்தாரிசு சட்டத்தில் மேற்கொள்ளப்பட

vikatan_2026-05-22_za0m24b3_ramesh

குன்னூர் ரூ.15 கோடி கார் பார்க்கிங் பணி ரத்து – அறநிலையத்துறை அதிரடி!

June 24, 2026

சென்னை: குன்னூர் விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான நிதியிலிருந்து சுமார் ரூ. 15 கோடியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கும்

MediaFile_20260624_064746_697

தெல்தெனிய பெண் கொலை வழக்கு: பிரதான சந்தேக நபருக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் ஓட்டுநர் கைது

June 24, 2026

தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றினுள் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபருக்கு உதவினார் மற்றும்

Screenshot_20260624_132345_Editor-Lite

இலங்கையின் கனிம வளங்களால் பயன்பெறுவது யார்? நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

June 24, 2026

அரசாங்கத்தின் தேசிய கனிமக் கொள்கை (National Mineral Policy) மற்றும் கனிம அகழ்வாராய்ச்சி, சுரங்க அகழ்வுக்கான உரிமங்கள் (Licences) வழங்கப்படுவது

suresh11

சலே நடமாடுகிறார், அவராகவே ஆடை அணிகிறார்: அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல்

June 24, 2026

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே, மோசமாக

MediaFile_20260624_064746_697

தெல்தெனிய பெண் கொலை : பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் கைது

June 24, 2026

நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றினுள் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது

myan

ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிறை?

June 24, 2026

தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள மியான்மார் பகுதிகளில் இயங்கி வரும் ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் இன்னும் 5,300க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக

Nada

யாழ்.பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலை பிரதிஷ்டை?

June 24, 2026

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்