இலங்கைக்கு அனர்த்த அவசர முன்னெச்சரிக்கை – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் இன்று இரவு ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றம் பெறும்.

இது நாளைய தினம்(26.11.2025) இலங்கையின் தென்பகுதியூடாக ( அம்பாந்தோட்டைக்கு அண்மையாக) வடக்கு திசை நோக்கி நகரத் தொடங்கும்.

இந்த தாழமுக்கம் எதிர்வரும் 27.11.2025 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று அன்றைய தினம் அல்லது 28.11.2025 அன்று புயலாக மாற்றம் பெறும்.

இலங்கையின் காலநிலை வரலாற்றில் இரண்டு காற்றுச் சுழற்சிகள் ஒன்றாகி தென் பகுதியூடாக ஊடறுத்து கிழக்கு மற்றும் வடக்கு மாகாணத்தை நோக்கி வருவது இதுவே முதல் முறையாகும்.

வங்காள விரிகுடாவின் வரலாற்றிலும் மேற்கு நோக்கி நகர்ந்த காற்றுச் சுழற்சி மீண்டும் கிழக்கு நோக்கி நகர்ந்து இன்னுமொரு காற்றுச் சுழற்சியுடன் இணைந்து பலமடைவதும் இதுவே முதல் முறை.

இதனால் நாடு முழுவதும் மிகக் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. இந்தக் காற்றுச் சுழற்சியின் செல்வாக்கினுள் இலங்கை முழுவதும் உள்ளடங்கியுள்ளது.

ஒரு தாழ்வுநிலை/தாழமுக்கம்/ காற்றழுத்த தாழ்வு நிலை/ தாழ்வு மண்டலம்/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்/ புயல்/ சூறாவளி/ சூப்பர் சூறாவளி எந்த திசை நோக்கி நகர்கின்றதோ அந்த பகுதியே அதன் காற்றுக் குவிப்பு மையமும் மழை வலயமும் ஆகும்.

அந்த வகையில் இந்த தாழமுக்கம் நகரும் போது இந்த காற்றுக் குவிப்பு மற்றும் மழை வலயத்தினுள் தென் மாகாணம், ஊவா மாகாணம்,

மிக முக்கியமாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் அடங்குகின்றன.

எனவே நாளை முதல் (26.11.2025)கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு கனமழை கிடைக்கத் தொடங்கும்.

எதிர்வரும் 27.11.2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மிகக் கனமழையும், வேகமான காற்று வீசுகையும் நிகழும்.

இந்த நிலைமை எதிர்வரும் 29.11.2025 வரை தொடரும்.

இந்த நாட்களில் அதாவது எதிர்வரும் 28.11.2025 முதல் 29.11.2025 வரை பல பகுதிகளில் திரட்டிய மழைவீழ்ச்சியாக 350 மி.மீ. க்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே இன்று கிடைத்துக் கொண்டிருக்கும் மழையினால் கிழக்கு மாகாணத்தின் கணிசமான பகுதிகள் வெள்ள பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

எனவே எதிர்வரும் நாட்களில் கிடைக்கும் கன மழையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் தீவிரமான வெள்ள நிகழ்வுகளை ஏற்படுத்தும்.

எதிர்வரும் நாட்கள் வானிலை ரீதியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மிக நெருக்கடியான நாட்களாகும்.

ஆகவே பொதுமக்கள் இந்த எச்சரிக்கையை புறந்தள்ளாமல், போதுமான தயார்ப்படுத்தல் மற்றும் முன்னேற்பாடுகளை மேற் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கணிசமான அளவு தவிர்க்கலாம்.

புயல்/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல காற்று வீசும்போது…

1. சகல இலத்திரனியல் பொருட்களினதும் மின் இணைப்பைத் துண்டித்து தகவல்களை அறிய தொலைபேசியை மட்டும் பயன்படுத்தி தகவல்களை அறிய வேண்டும்.

2. பாதுகாப்பான உறைவிடத்தின் உள்ளே இருக்கவும்.

3. பாதுகாப்பான இடம் தூரத்தில் உள்ளதாயின் முன்னரே சென்று போக்குவரத்து நெரிசல், வெள்ள அனர்த்தம், காற்றுப் பாதிப்பு என்பவற்றை தவிர்த்துக் கொள்ளவும்.

4. வீடு அல்லது குடிசை உடைய அல்லது சரிய ஆரம்பித்தால் மெத்தைகள் மற்றும் போர்வைகளுடன் உறுதியான கட்டில் அல்லது மேசைக்கு கீழே சென்று உங்களைப் பாதுகாக்கவும்.

5. புயலின் அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் கண்பகுதி தொடர்பாக அவதானத்துடன் இருத்தல் வேண்டும். காற்று வீழ்ச்சியடைந்ததும் சூறாவளி முடிவடைந்தது என முடிவெடுக்க வேண்டாம். வலிமையான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய காற்று வேறு திசையில் இருந்து வீசலாம். உத்தியோக பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கவும்.

6. வாகனம் செலுத்திக் கொண்டிருந்தால் வாகனத்தை நிறுத்தும்போது கடலுக்கு தூரமாகவும் மரங்கள், மின்கம்பங்கள், மின் கம்பிகள் இல்லாத இடத்தில் நிறுத்தவும் வாகனத்துள்ளே இருக்கலாம்.

புயல்/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல காற்று வீசிய பின்…

1. பாதுகாப்பானது என அறிவிக்கும் வரை வெளியே செல்ல வேண்டாம்.

2. சமையல் வாயு வெளியேற்றத்தினைச் சரிபார்க்கவும். ஈரமாக இருப்பின் மின்சார சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்.

3. ஆலோசனைக்காகவும், எச்சரிக்கைக்காகவும் புதிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்

4. சேதமடைந்த மின்சார இணைப்புக்கள், பாலங்கள், கட்டிடங்கள், மரங்கள், தொடர்பாக அவதானத்துடன் இருங்கள். வெள்ளநீர்ப்பகுதிக்குள் செல்ல வேண்டாம்.

5. தேவையற்ற தொலைபேசி அழைப்புக்களைத் தவிருங்கள்.

வெள்ளப்பெருக்கு நிகழ்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய தயார்ப்படுத்தல் முறைகள்.

1. வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய இடங்களை அறிந்து வைத்திருத்தல்.

2. வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலப்பகுதிகளில் பாதுகாப்பாக தங்குவதற்குரிய இடங்களை அறிந்து வைத்திருத்தல்.

3. முடிந்தால் உங்கள் பிரதேசங்களில் நாளை மாலைக்குள் இயற்கையான மற்றும் செயற்கையான வடிகால்களைத் துப்புரவாக்குதல்.

4. வெள்ளப்பாதிப்பின் அபாய அறிவிப்புக்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளல்.

5. வெள்ளப்பாதிப்புக் காலங்களில் பாதுகாப்பாக தங்கலாம் என்று அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்கு வெள்ளம் குறைவாக இருக்கும் போது சென்றடைதல் வேண்டும்.

6. அவசரகால பொதியை எடுப்பதுடன் மிக முக்கியமான ஆவணங்களை வெள்ளத்தினின்றும் பாதுகாத்தல்.

7. வெள்ள அமைத்துள்ள பகுதிகளில் உள்ள மக்கள் சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளை மிக விரைவாக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லல்.

8. மின்சார, தெலைத் தொடர்பு இணைப்புக்களை துண்டித்தல்.

9. இடம்பெயர்ந்தோர் முறையான அறிவிப்பு வரும் வரை வீடுகளுக்கு திரும்பாமை.

10.தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதனால் சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடித்தல்.

3. வெள்ள நீர்ப்பகுதிகளுக்கு செல்லாது இருத்தல்.

மேற்குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, வரவிருக்கும் அனர்த்தத்தினால் எமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்ப்போம்.

குறிப்பு: மாதிரிகளின் அடிப்படையிலேயே இந்த முன்னறிவிப்பு வழங்கப்படுகின்றது. தீவிர வானிலை தொடர்பான இந்த முன்னறிவிப்புக்களில் சில மாற்றங்கள் நிகழலாம் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி

நாகமுத்து பிரதீபராஜா  – புவியியல் பேராசிரியர் யாழ்.பல்கலைக்கழகம்


				
east 20261

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள்-ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த நாளின் வலி இன்னும் ஆறவில்லை.-.உண்மை நீதியை நிலைநாட்டவேண்டும் – ஐநாவின் பிரதிநிதி

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அந்த நாளின் வடுவை நாடு இன்னும் சுமந்து

easter

உண்மை கண்டறியப்பட்ட பின்னரே மன்னிப்பு சாத்தியம்: வத்திக்கான் தூதுவர் வலியுறுத்தல்

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள உண்மை நிலைநாட்டப்பட்ட பின்னரே, அத்தாக்குதல்களை நடத்தியவர்களை மன்னிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என இலங்கைக்கான

675177459_1497864805036429_5112534639948039167_n

“பிரேமலதா நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்!” – எடப்பாடியில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!

April 21, 2026

சேலம், சேலம் மாவட்டம் எடப்பாடியில் 2-வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

fa

நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு; விவசாயிகளுக்கு 1,200 மில்லியன் ரூபா இழப்பீடு!

April 21, 2026

மாத்தறை மாவட்டத்தில் குடிநீருடன் கடல் நீர் கலப்பதைத் தடுப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் 2019ஆம் ஆண்டு

japp

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும்?

April 21, 2026

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத்

prema

பிரேமலால் ஜயசேகர எம்.பி. கைது

April 21, 2026

‘சொக்கா மல்லி’ என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

G_Q4Ze7WQAAHCyq

தீயசக்தி திமுக.. பாசிச பாஜக.. அக்குவேறாக பிரித்து எறிவோம்! “விசில்” சின்னத்திற்கு வாக்களிக்க விஜய் உருக்கமான வேண்டுகோள்!

April 21, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக மக்களுக்கு மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான

Malcolm-Cardinal-Ranjith

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; முட்டுக்கட்டைகள் குறித்து கர்தினால் ரஞ்சித் எச்சரிக்கை

April 21, 2026

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றமடைந்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால்

Mid photos new.00_01_08_07.Still034_

சரித்திரத்தில் சத்தியம் தோற்றதாக செய்தியில்லை! “மாற்றத்திற்கு ஒரே வழி நாம் தான்” – சீமான் உருக்கம்

April 21, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்டப் பரப்பை எட்டியுள்ளது. 234

IRAN ARMY111

போர்க்களத்தில் ‘புதிய வியூகங்களை’ (New Cards) வெளிப்படுத்தத் தயாராகிறது ஈரான்

April 21, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்கு இன்னும் சில நேரங்களே உள்ள நிலையில், மேலதிக

pak16

இஸ்லாமாபாத்தில் தயார்நிலைகள்: பேச்சுவார்த்தைகள் நடக்குமா என்பதில் தொடரும் நிச்சயமற்ற தன்மை

April 21, 2026

இன்று காலை இஸ்லாமாபாத்தில் சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கான முன்னேற்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. தலைநகர் வழியாகப் பயணம் செய்யும் போது, பாதுகாப்புச்

ele co

தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் தாமதம்: தேர்தல் ஆணைக்குழு அதிருப்தி

April 21, 2026

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தேர்தல் சட்டச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசாங்கமும் எதிர்க்கட்சியும் நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது என தேர்தல்