948 ட்ரோன்களால் 24 மணித்தியாலங்களில் உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரேன் மீதான போர் ஆரம்பமாகி நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 948 ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு உக்ரேனின் இவானோ-பிராங்க்விஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

நகரின் முக்கிய மகப்பேற்று வைத்தியசாலை மற்றும் மகப்பேற்று நிலையம் பலத்த சேதமடைந்துள்ளன. தாக்குதலின் போது இரு பெண்கள் நிலத்தடி அறையில் குழந்தையைப் பெற்றெடுத்த போதிலும், அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி தப்பியுள்ளனர்.

இப்பகுதியில் தந்தை ஒருவர் மற்றும் அவரது மகள் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், 06 வயது சிறுவன் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

லிவிவ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெர்னார்டைன் மடாலயம் இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.

யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமான இந்தப் பகுதியின் அருகே அமைந்துள்ள குடியிருப்பு கட்டடமொன்று ட்ரோன் மோதியதில் தீப்பற்றியுள்ளது. இதில் லிவிவ் நகரில் மாத்திரம் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 948 ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன. இதில் 556 ட்ரோன்கள் நேற்று பகல் வேளையில் மாத்திரம் ஏவப்பட்டுள்ளன.

உக்ரேனியப் படைகள் சுமார் 906 ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ள போதிலும், 15 இடங்களில் நேரடித் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

வின்னிட்சியா நகரில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். செர்னிஹிவ், சுமியின் வடக்குப் பகுதியூடாக ட்ரோன்கள் “வரிசை வரிசையாக” உக்ரைன் வான்பரப்பிற்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி,

“ரஷ்யாவிற்கு இந்தப் போரை நிறுத்தும் எண்ணம் சிறிதும் இல்லை என்பதை இந்தத் தாக்குதலின் அளவு தெளிவாகக் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

pa

யாழில் 570 மீட்டர் வீதி புனரமைக்க 76 நாட்கள்?

March 25, 2026

வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம், தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வீதி புனரமைப்பு தொடர்பில்

velnu

யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளை தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவோம் – துணைவேந்தர் வேல்நம்பி

March 25, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக உத்தியோகபூர்வமாகப் பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் தி. வேல்நம்பி, பட்டதாரிகளின் எதிர்காலம்

Veda

வடக்கு மாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு!

March 25, 2026

டக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று புதன்கிழமை காலை (25.03.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. விவசாயத் திணைக்களத்தின்

Nan

மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியிலும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் குறையவில்லை – மத்திய வங்கி ஆளுநர்

March 25, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் மோதல்களுக்கு மத்தியிலும், இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் (Remittances) குறையவில்லை என

h

அமைச்சரவை உபகுழு இரண்டாவது முறையாகக் கூடியது

March 25, 2026

அரச சேவையை சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில்

sambath athu

நாட்டின் பொது திறைசேரியை சூறையாடி தமது அரசியல் தலைமையகத்தை நிரப்புகிறது அரசாங்கம்

March 25, 2026

தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொது திறைசேரியை சூறையாடிக்கொண்டு, தமது அரசியல் தலைமையகமான பெலவத்தையின் கணக்குகளை நிரப்பி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற

suresh sal

தடுப்புக் காவலில் இருந்த சுரேஷ் சாலே வைத்தியசாலையில் அனுமதி

March 25, 2026

இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

sun

சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய 29 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது

March 25, 2026

நாட்டுக்குள் சட்டவிரோத போதைப்பொருட்களை கடத்தி வந்த சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய 29 முக்கிய போதைப்பொருள் குற்றவாளிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது

rus

948 ட்ரோன்களால் 24 மணித்தியாலங்களில் உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல்

March 25, 2026

உக்ரேன் மீதான போர் ஆரம்பமாகி நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 948 ட்ரோன்களைப்

uni

சிறுவர்களை இலக்கு வைத்து ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு கடிதம்!

March 25, 2026

இஸ்ரேலிய பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்களை இலக்கு வைத்து ஈரான் நடத்தி வரும் கண்மூடித்தனமான ஏவுகணைத் தாக்குதல்களைப் பகிரங்கமாகக் கண்டிக்குமாறு ஐக்கிய

Baby death

தனியார் காணியொன்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு

March 25, 2026

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத்

ci

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

March 25, 2026

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, வரி செலுத்தாமல் விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற சுமார் 15 மில்லியன்