8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின் டிரேட்டன் சந்தியில் நேற்று (03) மாலை 5.00 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தோட்டத்தில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

“10 கிலோ கொழுந்துக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில்லை”, “ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்றரை நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும்”, “10 கிலோவுக்கு 6 கிலோ கழிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்”, “வேலை நேரம் முறையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு, “உரிமை கிடைக்கும் வரை போராடுவோம்” என அவர்கள் முழக்கமிட்டனர்.

இது குறித்துத் தொழிலாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்:

“அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகள் எதுவும் எமக்கு முறையாக வழங்கப்படுவதில்லை. இது குறித்து நியாயம் கேட்டால், நாம் சத்தமிட்டுப் பேசுவதாகக் கூறி நிர்வாகம் எமது வேலையை நிறுத்துகிறது. தொழிலாளர்களுக்குரிய எந்தச் சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. இதுவரை குளவி கொட்டுக்கு இலக்காகி இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையிலும், தொழிலாளர்கள் சுகயீனமுற்றால் வாகன வசதிகளோ அல்லது வேறு அவசரத் தேவைகளோ நிர்வாகத்தால் செய்து தரப்படுவதில்லை. சம்பளம் உரிய நேரத்திற்கு வழங்கப்படுவதில்லை; நாம் அடிமைகளாகவே நடத்தப்படுகிறோம்” எனத் தெரிவித்தனர்.

தமது உரிமைகளைப் புறக்கணிக்கும் தற்போதைய தோட்ட நிர்வாகத்தை உடனடியாக மாற்ற வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்