24 மாடுகளுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகன வழக்கு

இறைச்சிக்காக 24 மாடுகளைக் குறுகிய இடவசதியில் சித்திரவதைக்குள்ளாகும் வகையில் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் தொடர்பான வழக்கினை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதிக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (மார்ச் 12) இரவு, மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியிலிருந்து அம்பாறை – நிந்தவூர் பகுதிக்கு 24 மாடுகளுடன் பயணித்த கனரக வாகனம் ஒன்றைக் கல்முனை தலைமையக பொலிஸார் சோதனையிட்டனர். இதன்போது, முறையான அனுமதிப்பத்திரம் இருந்தபோதிலும், வாகனத்தில் மாடுகள் மிகவும் நெருக்கமாகவும், மிருகவதை சட்டத்திற்குப் புறம்பாகவும் ஏற்றி வரப்பட்டமை கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், பொலிஸாரால் மிருகவதை சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 13) கல்முனை நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதவான், வாகனத்தைப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வழக்கை ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த வாகனத்தில் இருந்த மாடுகளில், இடநெருக்கடி காரணமாக இரண்டு மாடுகள் உயிரிழந்தன. உயிரிழந்த மாடுகள் கல்முனை மாநகர சபையின் உதவியுடன் அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் வழிகாட்டலில், அம்பாறை மாவட்டத்தின் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

bee

பெருமளவிலான பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றல்!

March 15, 2026

துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்பும்கொட கடற்கரைப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. துங்கல்பிட்டிய

566

யாத்திரை சென்ற கார் விபத்து: சாரதி போதைப்பொருள் உட்கொண்டமை உறுதி!

March 15, 2026

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுவிட்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, நோர்வூட் – ரோக்வுட் பகுதியில் 15 அடி பள்ளத்தில்

dea

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

March 15, 2026

கம்பஹா – தொம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொம்பே – பூகொட வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை

i

தகுதிகாண் போட்டி: மெக்சிகோ பயணத்தைத் தள்ளிப்போடுமாறு ஈராக் கோரிக்கை

March 15, 2026

உலகக் கிண்ணக் கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டியில் விளையாடுவதற்காக, ஈராக் தேசிய கால்பந்து அணி தனிப்பட்ட விமானம் மூலம் மெக்சிகோவிற்குப்

ran

அசோக ரன்வலவுக்கு நீதிமன்றம் பிடியாணை

March 15, 2026

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிடியாணை பிறப்பித்துள்ளது. சப்புகஸ்கந்த

ma

24 மாடுகளுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகன வழக்கு

March 15, 2026

இறைச்சிக்காக 24 மாடுகளைக் குறுகிய இடவசதியில் சித்திரவதைக்குள்ளாகும் வகையில் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் தொடர்பான வழக்கினை, எதிர்வரும் ஏப்ரல்

irakk

43,000 கட்டடங்கள் ஈரானில் சிதைவு

March 15, 2026

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களில், சுமார் 43,000 பொதுமக்கள் குடியிருப்புகள்

3

யாழ்.பல்கலைக்கழகத்தில் மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

March 15, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் மற்றும் பல்துறைக் கற்கைகள் ஆகிய துறைகளின் தலைவர்கள் உட்பட மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி

56

யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட மறுசீரமைப்பு

March 15, 2026

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கட்சியைப் பலப்படுத்தும் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், விசேட பயிற்சிப் பட்டறையொன்று வெள்ளிக்கிழமை (13) யாழ்ப்பாணத்தில்

katt

விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடர்

March 15, 2026

எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி

mack

நடனப் புயல் – இசைப் புயல் பாடல் மாமல்லபுரத்தின் சிற்பங்களின் பின்னணியில்…

March 15, 2026

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து பாடும் ‘மாக்கரீனா..’ எனத் தொடங்கும் பாடலும், அதற்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா

si

சிறை படத்தின் 75 ஆவது நிறைவு நாள் கொண்டாட்டம்

March 15, 2026

‘புதுமுக நடிகருக்கு ரசிகர்கள் எம்மை ஏற்றுக் கொள்வார்களா!? என்ற பயம் எப்போதும் இருக்கும். ஆனால் எம்முடைய முதல் படத்திலேயே நல்ல