ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரின் பிணை தொடர்பான தீர்மானமும் அன்றயை தினமே அறிவிக்கப்படும் என நீதவான் தெரிவித்துள்ளார்.
தற்போது தடுப்புக்காவில் உள்ள நாமல் ராஜபக்ச நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சார்பில் ஆஜரான பிரதிசொலிசிட்டர் ஜெனரல் ஜனகபண்டார நாமல் ராஜபக்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனில்சில்வா ஆகியோர் உள்ளிட்ட ஏனைய சட்டத்தரணிகளின் சமர்ப்பிப்புகளை ஆராய்ந்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.