2028–2030 காலப்பகுதி வேலைத்திட்டங்களுக்கு IFAD-இன் ஆதரவைப் பெறக் கலந்துரையாடல்

2028–2030 காலப்பகுதியில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச விவசாய அபிவிருத்தி நிதியத்தின் (IFAD) ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் நடைபெற்றது.

இதன்போது இலங்கையின் விவசாய மற்றும் கிராமிய அபிவிருத்திக்காக முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய துறைகள் குறித்தும், சிறிய அளவில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல், விவசாய உற்பத்தி திறனை மேம்படுத்துதல், கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தைச் செயற்படுத்துவதில், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “சமூக சக்தி” வேலைத்திட்டத்துடன் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதியின் செயலாளர் இங்கு வலியுறுத்தினார்.

மேலும், 2028–2030 காலப்பகுதியில் இலங்கையின் அபிவிருத்தித் தேவைகளுக்கு ஏற்ப IFAD இன் ஆதரவைப் பெறுவதற்காக அரசாங்கத்தின் முன்னுரிமைகளைக் கண்டறிவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

அதன்படி, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கும் IFAD க்கும் இடையிலான ஒருங்கிணைப்பினை வலுப்படுத்தி, எதிர்காலத்தில் செயற்படுத்தக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களைக் கண்டறிந்து அவற்றைச் செயற்படுத்துவதற்கு அவசியமான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Ronal

சர்வதேச போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!

November 6, 2026

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார். தனது இந்த ஓய்வு முடிவை

gor

ஜோர்தானில் இலங்கை தூதரகம் முன்பாக கூரிய ஆயுத தாக்குதல்

November 6, 2026

ஜோர்தானில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. அம்மான் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின்

Parliament

இலங்கை விமான படைக்கான மேலதிக ஒதுக்கம் நிறைவேற்றம்

November 6, 2026

இலங்கை விமானப் படைக்கு 4,261 மில்லியன் ரூபாயை வழங்குவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க குறைநிரப்பு

ara

அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

November 6, 2026

அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு திருத்தங்கள் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய, 1917 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க

anu

குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் தடுப்பு காவல் உத்தரவு காலத்தை திருத்தம் செய்ய ஜனாதிபதி தயார்?

November 6, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலத்தை 72 மணித்தியாலத்திலிருந்து 48 மணித்தியாலமாகக் குறைப்பதற்குத் தாம்

dsaf

ஆழ்கடலில் பிடிப்பட்ட போதைப்பொருள்

November 5, 2026

இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட மீன்பிடிப் படகில் காணப்பட்ட போதைப்பொருளின் அளவு 189 கிலோ கிராமிற்கும்

ci

காகிதங்கள் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட பாரியளவான சிகரெட் தொகை பறிமுதல்

November 5, 2026

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 792 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன்

bus

இலங்கை போக்குவரத்து சபையில் இயங்கக்கூடிய நிலையில் 5,000 மட்டுமே!

November 5, 2026

இலங்கை போக்குவரத்து சபையில் 7,130 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ran

Los Angeles நகர மேயராகும் தமிழ் பெண்!

November 5, 2026

அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த

7

“அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானுக்கு ஆதரவு கிடையாது!” – டி.கே.எஸ்.இளங்கோவன்!

November 5, 2026

சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக ஒருபோதும் ஆதரவு அளிக்காது என்று

6

“மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் வழக்கை 9 மாதத்தில் முடிக்க மதுரை ஐகோர்ட் கெடு!”

November 5, 2026

மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை ஒன்பது மாதத்தில் முடிக்க வேண்டும்

5

“விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப் போகிறார் முதல்-அமைச்சர்?” – உதயநிதி கேள்வி!

November 5, 2026

சென்னை: விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் விஜய் எப்போது அறிவிக்கப் போகிறார் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்