ரொறன்ரோ டி.டி.சி (TTC) பேருந்தில் இடம்பெற்ற கத்திக்குத்து கொலை: சந்தேகநபர் பொலிஸில் சரண்

ரொறன்ரோ, நவம்பர் 28, 2026 கனடாவின் ரொறன்ரோ நகரிலுள்ள ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் டி.டி.சி (TTC) பேருந்தொன்றில் 34 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதான நிக்கோலஸ் குரோஃபோர்ட் (Nicholas Crawford) என்பவர் வெள்ளிக்கிழமை மாலை ரொறன்ரோ பொலிஸாரின் 41 ஆவது பிரிவில் (41 Division) தானாக முன்வந்து சரணடைந்ததைத் தொடர்ந்து, அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு (Second-degree murder) […]
மிகப் பெரும் இன வன்முறையான 1983 கறுப்பு ஜூலை பற்றி விசாரணை நடத்த நாடாளுமன்ற தெரிவு குழு அமைப்பு?

இலங்கையின் வரலாற்றில் மிகப் பெரும் இன வன் முறை சம்பவங்களில் ஒன்றாக கருதப்படும் 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை நிகழ்வுகள் தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற தெரிவு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் Saroja Paulraj தலைமையிலான இந்த தெரிவு குழுவின் நியமனத்தை சபாநாயகர் Dr. Jagath Wickramaratne, இன்று (நவம்பர் 28) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அரசாங்கம் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் அடங்கிய இக்குழு, 1983 ஜூலை […]
மூன்றாவது தடவையாக இலங்கையில் இதய மாற்று சத்திரசிகிச்சை

இலங்கையில் வைத்தியசாலையொன்றில் மூன்றாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட இதய மாற்று சத்திரசிகிச்சை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் விசேட வைத்திய நிபுணர் அனில் அபேவிக்ரமவின் தலைமையிலான விசேட வைத்தியக் குழுவினரால் இந்த இதய மாற்றுச் சத்திரசிகிச்சை நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 14 வயதுடைய சிறுவன் ஒருவருக்கே இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரின் இதயம் மிகவும் […]
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்…
நீரிழிவு நோயைத் தடுப்போம்! ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்!

நீரிழிவு நோய் (சலரோகம்) தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று (28.11.2026) யாழ்ப்பாணத்தில் 5 கிலோமீற்றர் விழிப்புணர்வு நடைப்பயணம் சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண அகஞ்சுரப்பியல் பிரிவு, யாழ். நீரிழிவு மையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணத் தாதியர் பயிற்சிக் கல்லூரி சமூகத்தினர் இந்நிகழ்வில் ஆர்வத்துடன் பங்குபற்றினர். பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, ஆசிரியர் குணசீலன் மற்றும் ஆசிரியர் லலிசன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இன்று உலகளவில் சுமார் 59 கோடி […]
சம்பளப் போராட்டங்களுக்குப் பின்னால் திட்டமிட்ட சதி: ஜனாதிபதி

நாட்டை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் நோக்கில் அரச துறைப் போராட்டங்களுக்குப் பின்னால் திட்டமிட்ட சதியொன்று முன்னெடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அரச நிதியில் மேலதிக சுமையை ஏற்படுத்தும் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், 2028 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக 150 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். ‘வரவு செலவுத் திட்டமும் உழைக்கும் […]
புற்றுநோய் சிகிச்சையின் போது சுயநினைவை இழந்து மீண்ட தருணத்தை வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்

லண்டன், நவம்பர் 28, 2026 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பாரிய வயிற்றுப் பகுதி சத்திரசிகிச்சைக்குப் பின்னர் வைத்தியசாலையில் சுயநினைவை இழந்து மீண்டும் நினைவு திரும்பிய தருணத்தை வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் (Princess Kate) முதல்முறையாகப் பகிர்ந்துள்ளார். ‘ஹீல்’ (Heal) எனும் 30 நிமிட ஆவணப்படத்தில் தனது வைத்தியசாலை அனுபவங்கள் குறித்துப் பேசியுள்ள இளவரசி, அந்த அனுபவத்தை “மிகவும் பயங்கரமானது” மற்றும் “குழப்பமானது” என விவரித்துள்ளார். நாளை (நவம்பர் 29) ஞாயிற்றுக்கிழமை பி.பி.சி ஒன் (BBC […]
வீரத்தின் அடையாளமாய் தியாகத்தின் வரலாறாய் வாழும் மாவீரர்கள்! Behind Me Media தலைமை அலுவலக நிகழ்வுகள்…

2026 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் நவம்பர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை முதல் 2284 Argentia Road, Unit 16, Mississauga, Ontario வில் அமைந்துள்ள Behind Me Media தலைமை அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மாவீரர் வாரமான நவம்பர் 21 ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் இங்கே செய்யப்பட்டிருந்தன […]
பிரித்தானியா Oxford உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் மாவீரர்தினம்

எம் தேசத்தின் விடுதலைக் கனவுக்காகத் தங்கள் உயிரையே அர்ப்பணித்த மாவீரர்களை, ஆழ்ந்த மரியாதையுடனும் நெஞ்சம் நிறைந்த நினைவுகளுடனும் தலைவணங்குகின்றோம் என்ற மகுட வாசகத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்தவர்கள், செயற்பாட்டாளர்கள் தமிழ் மக்கள் மற்றும் குறிப்பாக மாவீரர்களின் குடும்ப உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உணர்வுபூர்வமாக வீரவணக்கம் செலுத்தினர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த வலியையும், அவர்களின் நினைவுகளைச் சுமந்த வாழ்வையும் நெஞ்சில் ஏந்தி, மாவீரர்களின் குடும்ப உறவினர்கள் பங்கேற்றமை இந்நிகழ்வுக்கு ஆழமான உணர்வையும் நெகிழ்ச்சியையும் […]
சுவிட்சர்லாந்தில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

சுவிட்சர்லாந்து – சூரிச் நகரில் மாவீரர்கள் அனைவரையும் நினைவுகூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வானது, நேற்று (27.11.2026) போராளிகள் கட்டமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 12.30 மணிக்குத் தொடங்கிய இந்த நிகழ்வின் முதல் நிகழ்வாகப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரை திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உரை முடிவில் ஒரு நிமிடம் ஒலி […]