AFP Forum – பிரான்ஸ் செய்தி நிறுவனம் மீது சைபர் தாக்குதல்!

பிரான்ஸைத் தளமாகக் கொண்ட சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, செய்தி மற்றும் உள்ளடக்கங்களை வாடிக்கையாளர்கள் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்யும் AFP Forum தளம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நேரப்படி நேற்றுமுன்தினம்(26.11.2026) அதிகாலை 1.30 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தளம் முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு மாற்று சேவைகளை வழங்க AFP நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, […]
நயினாதீவில்_மாவீரர்களுக்கு_அஞ்சலி!
மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின அஞ்சலி…
திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் துயிலும் இல்லம்
பொலிஸ் நிலையங்களுக்குள் கைபேசி கொண்டு செல்வதற்குத் தடை?

பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைத் தாராளமாகக் கொண்டு செல்லலாம் எனவும், அதனைத் தடுக்கும் வகையில் எவ்விதச் சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க இது தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “பொலிஸ் […]
விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நினைவஞ்சலி!…
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது சபையின் 18 உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், நான்கு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. இதன்போது 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, 18 உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பாதீடு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன், […]
பருத்தித்துறை இறங்குதுறையில் விரிசல்

பருத்தித்துறை இறங்குதுறையில் ஏற்பட்டுள்ள விரிசல் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழுமையான புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பருத்தித்துறை நகரசபை உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை அமைப்பாளருமான ம. அனல்றெஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி 2027ஆம் ஆண்டுக்காக வடமாகாணத்தின் கடற்றொழில் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்டுள்ள 5,000 மில்லியன் ரூபா நிதியிலிருந்து பருத்தித்துறை இறங்குதுறையையும் உள்ளடக்கி நவீன முறையில் மீள்புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்விடயம் தொடர்பில் […]
கடன் மதிப்பீடு குறித்து நிதி அமைச்சு தகவல்

இலங்கையின் நீண்டகால இறையாண்மைக் கடன் மதிப்பீட்டை ‘CCC+’ இலிருந்து ‘B−’ ஆக உயர்த்தியுள்ள S&P Global Ratings நிறுவனத்தின் தீர்மானத்தை நிதி அமைச்சு வரவேற்றுள்ளது. இதுதொடர்பில் நிதி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை தனது கடன் பொறுப்புகளை நிறைவேற்றும் திறன் அதிகரித்துள்ளதை இந்தத் தரமுயர்வு பிரதிபலிக்கின்றது. வெளிநாட்டு நிதி வசதிகள் தொடர்பான பாதகமான சூழ்நிலைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்துள்ளன. அரசாங்கத்தின் வரி மற்றும் வருமானச் சேகரிப்பில் ஏற்பட்டுள்ள வலுவான வளர்ச்சி இந்தத் தரமுயர்வுக்கு முக்கிய காரணமாக […]