சீரற்ற வானிலையால் இலங்கையில் 3966 குடும்பங்கள் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 3,966 குடும்பங்களைச் சேர்ந்த 14,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மோசமான வானிலையால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். 2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 312 வீடுகள் பகுதிளவில் சேதமடைந்துள்ளன. இரத்தினபுரி, கொழும்பு, மன்னார் மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 தற்காலிக நிவாரண முகாம்களில் 181 குடும்பங்களைச் சேர்ந்த 554 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் கொழும்பு […]
முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் சீற்றம் அதிகரிப்பு!

முல்லைத்தீவு, அம்பலவன் பொக்கணை கடற்பரப்பில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், கடல் நீர் கரையை நோக்கி வந்துள்ளதால் கடற்றொழிலாளர்கள் தமது படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி வருகின்றனர். இதேவேளை நேற்றையதினம் (26.10.2026) காலை கடற்றொழிலுக்கு சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. கடற்படையின் இரண்டு விசேட படகுகள் தேடுதல் நடவடிக்கைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,. மேலும், திருகோணமலையிலிருந்து மற்றுமொரு விசேட படகும் கோரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தப் படகு தற்போது […]
யாழில் திடீரென வெளியேறிய சிறப்பு அதிரடிப்படையினர்…!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு நடுக் குடத்தனை பகுதியில் பொதுநோக்கு மண்டபத்தில் அமைந்திருந்த சிறப்பு அதிரடிப்படையினருடைய முகாம் திடீரென அகற்றப்பட்டு அங்கிருந்து சிறப்பு அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டிருந்த குறித்த முகாமிலிருந்து சிறப்பு அடிப்படையினர் வெளியேறிச் சென்றுள்ளனர். முகாம் அமைந்திருந்த வேளையில் கூட நாளாந்தம் நான்குக்கு மேற்பட்ட டிப்பர் வாகனங்கள் சட்ட விரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்வது இடம் பெற்றுக் கொண்டிருந்தது. இந்தநிலையில் தற்போது சிறப்பு […]
செம்மணி அறிக்கை!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை குறித்து, நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைக் கூறினார். அமைச்சர் மேலும், “பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கை கடந்த 19ஆம் […]
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷிரந்தி!

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தற்போது சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஷிரந்தி ராஜபக்ச உயிராபத்தான நிலையில் உள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு அவ்வப்போது ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகிய நோய்கள் தீவிரமடைந்ததன் காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்காக இன்று பிணை கோரப்பட்ட வாதங்களை […]
தமிழர் பகுதியில் பெண் செய்த தகாத செயல் அம்பலம்!

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவில் விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய, உப்புவெளி பொலிஸார் குறித்த பெண்ணைக் கைது இதன்போது, சந்தேகநபரிடமிருந்து இரண்டு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணமும், 150 போதைப்பொருள் மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, அவரை ஒரு வார காலம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த […]