புதிய பயங்கரவாத தடைச்சட்டம் – செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் விவாதம்

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் புதிய வாசிப்பிற்காக செவ்வாய்கிழமை  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. செவ்வாய்கிழமை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் வேளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் இந்த சட்டமூலத்தினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார். அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள இந்த சட்டமூலம் தொடர்பான விவாதம் ஆறாம் திகதி முதல்ஒன்பதாம் திகதி முதல் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் இடம்பெறும் . இலங்கைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ இடம்பெறும் பயங்கரவாத செயல்கள்,பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றங்கள் மற்றும் பயங்கரவாதமாக வரையறுக்கப்படும் செயல்களில் இருந்து […]

அவுஸ்திரேலியாவில் ரக்பி ரசிகர்கள் மத்தியில் காரை செலுத்திய இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞர்- பத்து பேர் காயம்

அவுஸ்திரேலியாவின் நியுகாசிலில் ரக்பி லீக் ரசிகர்கள் மத்தியில் காரை செலுத்தி 3 சிறுவர்கள் உட்பட பத்துபேரை காயப்படுத்திய இலங்கையை பூர்வீகமாக கொண்ட 18 .இளைஞனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர் இந்திக பம்பரிக் சமரசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். நியுகாஸில் அணியை வழியனுப்பிவைப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நியுகாஸில் லிங் திரண்டிருந்தவேளை  .இந்த இளைஞன் செலுத்திய கார் கட்டுப்பாட்டை இழந்து ரசிகர்கள் மீது மோதியுள்ளது. கார் மோதியதன்  காரணமாக இரண்டு முதல் 67 வயதுடைய 10 பேர் காயங்களுடன் […]

பிள்ளையார் கோவில் அமைந்துள்ள பகுதியில் பௌத்த வழிபாடு?

வவுனியா சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில் இருக்கும் பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிபாடுகளை நடத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வெடுக்குநாறி மலைய மையப்படுத்தி 260 ஏக்கர் பிரதேசம் தொல் பொருளியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வவுனியா மாவட்டத்தின் சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில் அமைந்துள்ள பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிபாடுகளை எதிர்வரும் காலத்தில் முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த பகுதியானது அநுராதபுர காலத்தைச் சேர்ந்த பண்டைய பௌத்த […]

தியாகதீபம் திலீபனின் சிலை யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது

நல்லூரில் இருந்து அகற்றப்பட்ட தியாகதீபம் திலீபனின் சிலை இன்று (05) பொலிஸாரால் யாழ். நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது. நல்லூரில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்ட திலிபனின் சிலை கடந்த 27 ஆம் திகதி பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு, பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், சிலையை நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான அனுமதி கோரப்பட்ட போதும் அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்க மறுத்திருந்தது. குறிப்பாக சிலை வழக்கில் எந்த ஒரு சந்தேக […]

இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே ஈரான் கப்பல்கள் – அமெரிக்கா கரிசனை வெளியிட்டதா? தூதரகம் தெரிவித்துள்ளது என்ன?

இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே ஈரானிய கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளமை குறித்து அமெரிக்க கரிசனை வெளியிட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரி இராஜதந்திர பேச்சுக்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அமெரிக்க தூதரக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளதாவது ஈரான் சட்டவிரோத வழிமுறைகள் ஊடாக வருமானம் உழைப்பதை தடுக்கவும்,ஈரானிய அரசுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதில் உள்ள சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,அமெரிக்கா தனது நட்புநாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. அமெரிக்கா தடை செய்துள்ள கப்பல்கள் […]

சிறை செல்கிறார் ஞானசார தேரர்!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்றையீட்டு நீதிமன்றம் இன்று (5) உத்தரவிட்டுள்ளது. கைதுசெய்யப்படுவதற்காகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று மேன்றையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியைச் சிறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு […]

வட மாகாண சுற்றுலாத்துறையில் முதலீடு செய்ய நடிகை நமீதா ஆர்வம்

இந்திய திரைப்பட நடிகர்களான வீரேந்திர சவுத்திரி – நமீதா தம்பதிகள், வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கு வருகை வந்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தில் நேற்று (04) நண்பகலில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெ. விவேகானந்தன்,இந்திய திரைப்பட நடிகை நமீதா, இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான வீரேந்திர சவுத்திரி, வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணியாளர்கள் எனப் பலரும் […]

Brand Bradford இன் வரவு செலவுத்திட்டப் பார்வை

டொராண்டோவின் அடுத்த மேயருக்காக வாக்காளர்கள் வாக்களிக்க ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், பிராட் பிராட்ஃபோர்ட் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பல நிதி வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அனைத்து வீடுகளுக்கும் முதல் $1.1 மில்லியனுக்கான நில மாற்று வரியைக் குறைப்பதற்கான உறுதிமொழி, நகரத்தின் குடிநீர் சேவைகளை ஒரு புதிய நிறுவனமாக மாற்றுவது மற்றும் கடனை அதிகம் நம்பியிருக்கும் திட்டம் ஆகியவை கடந்த வாரம் முக்கிய இடத்தைப் பிடித்தன. அதே வேளையில், மேயர் வேட்பாளர் நிதியாதாரமற்ற வாக்குறுதிகளை […]

பாரிஷ் மற்றும் குரோம்பி: மிஸ்ஸிசாகாவின் தேர்தலை வடிவமைக்கும் கடுமையான மறுபோட்டி

பெரும்பாலான முனிசிபல் தேர்தல்களில் தற்போது பதவியிலிருப்பவர் புதிய வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடுவதைக் காணலாம், ஆனால் தற்போதைய மேயருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பதவியிலிருந்து விலகியவருக்கும் இடையிலான ஒரு போட்டியை நீங்கள் எவ்வளவு அடிக்கடி பார்க்கிறீர்கள்? அதுதான் மிஸ்ஸிசாகாவில் நடக்கிறது, அங்கு தற்போதைய மேயர் கரோலின் பாரிஷ் முன்னாள் மேயர் போனி குரோம்பியை எதிர்கொள்கிறார். அதிக வாக்குகளைப் பெற்ற கவுன்சிலர்களான ஆல்வின் டெட்ஜோ மற்றும் தீபிகா தமர்லா ஆகியோரும், மேலும் 10 வேட்பாளர்களுடன் சேர்ந்து நகரத்தின் உயர்பதவிக்காகப் […]

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; இறுதி முடிவு இன்று!

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (05) கூடவுள்ள எதிர்க்கட்சிக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிப்பது குறித்து பாராளுமன்ற எதிர்க்கட்சியிலுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துரையாடி வருகின்றனர். தற்போது நாங்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை […]