இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு ஞானசார தேரர்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (5) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட அவரை, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நேற்று (4) பிற்பகல் உத்தரவிட்டார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு 2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்றத்தின் […]

அமெரிக்காவால் இலங்கைக்கு எவ்வித அழுத்தங்களும் இல்லை​ – அமைச்சர் விஜித ஹேரத்

நாட்டின் இறையாண்மை மற்றும் அடையாளத்தைப் பாதுகாத்தே இலங்கை அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கின்றது என்றும், எந்தவொரு மனிதநேயத் தேவையின் போதும் பொருத்தமான முறையில் தலையிட அரசாங்கம் தயார் என்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டின் கடற்பரப்பிற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் வெளியாகும் தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் போதே, நேற்று(4) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாகக் கப்பல் போக்குவரத்து சிக்கலாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய […]

அனோஜன் சார்பாக சவூதி அரேபியாவுக்குச் செல்லும் இலங்கைத் தூதுக்குழுs

மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராச அனோஜனை விடுவிப்பதற்காக, அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் செயல்முறையை ஆய்வு செய்வதற்காக, ஒரு இலங்கைத் தூதுக்குழு அடுத்த செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியாவுக்குப் புறப்பட உள்ளது. இதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஃபைசர் முஸ்தபா, ஜனாதிபதி சட்ட ஆலோசகர் உபுல் குமாரப்பெரும மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி உட்பட 5 பேர் கொண்ட குழு புறப்பட உள்ளது. அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்போது சிவராச அனோஜனுக்கு மரண […]