இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே ஈரானிய கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளமை குறித்து அமெரிக்க கரிசனை வெளியிட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரி இராஜதந்திர பேச்சுக்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அமெரிக்க தூதரக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளதாவது
ஈரான் சட்டவிரோத வழிமுறைகள் ஊடாக வருமானம் உழைப்பதை தடுக்கவும்,ஈரானிய அரசுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதில் உள்ள சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,அமெரிக்கா தனது நட்புநாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.
அமெரிக்கா தடை செய்துள்ள கப்பல்கள் குறித்த விபரங்கள் அந்த நாட்டின் திறைசேரியின் இணையத்தளத்தில் உள்ளதால் எவரும் அதனை பார்வையிடலாம்.
தடைவிதிக்கப்பட்ட கப்பல்களுக்கு எரிபொருள் உணவு அல்லது பிறதேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்க சிலில் அல்லது குற்றவியல் தண்டனைகள் விதிக்கப்படலாம்.
அமெரிக்கா ஏற்கனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்