யாழ். பல்கலைக்கழக 41ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 8ஆம் திகதி வியாழக்கிழமை வரையான மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வகள், ஒன்பது அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 5ஆவது வேந்தர் தகைசால் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் பட்டமளிப்பு விழாவைத் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார். இந்தப் பட்டமளிப்பு விழாவில், […]

‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு நிறைவு

டந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் வெளியான முதல் பாகம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெற்றிப் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, 9 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் […]

நவ.20-ல் தனுஷின் ‘ஓம்’ படம் ரிலீஸ்

தனுஷ் – மம்முட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓம்’ படம் நவம்பர் 20-ம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒண்​டர்​பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் தனுஷின் 55-வது படம் ‘ஓம்: சாப்டர் 1’. இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். எழிலரசு ஒளிப்​ப​திவு செய்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில், தனுஷ், மம்முட்டியுடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் […]

மீண்​டும் தமிழ்ப் படத்தில் வித்யா பாலன்

இந்தி நடிகை​யான வித்யா பாலன், தமிழில் ‘நேர்​கொண்ட பார்​வை’ படத்​தில் நடித்​திருந்​தார். இப்​போது ‘ஜெ​யிலர் 2’ படத்​தில் நடித்து வரு​கிறார். இதையடுத்து அவர் ஆர்​.​பால்கி இயக்​கும் தமிழ்ப் படத்​தில் நாயகி​யாக நடிக்​கிறார். சுமார் 17 ஆண்​டு​களுக்​குப் பிறகு பால்​கி​யுடன் அவர் மீண்​டும் இணைந்​துள்​ளார். முன்​ன​தாக கடந்த 2009-ம் ஆண்டு வெளி​யான ‘பா’ படத்​தில் இரு​வரும் பணி​யாற்றி இருந்​தனர். இந்​தப் புதிய படத்​தின் படப்​பிடிப்பு தொடங்​கி​யுள்​ள​தாகப் புகைப்​படத்​துடன் வித்யா பாலன் தெரி​வித்​துள்​ளார். இப்​படத்​துக்கு இளை​ய​ராஜா இசை அமைக்​கிறார். இது […]

துருவ் விக்ரமுக்கு மூன்றாவது படத்தில் விருது!

அறிமுகப் படம், அப்பாவுடன் நடித்த இரண்டாவது படம் ஆகியவற்றில் கிடைக்காத பெயர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘பைசன் காளமாடன்’ மூலம் துருவ் விக்ரமுக்குக் கிடைத்தது. துணிவும் போராட்டக் குணமும் கொண்ட ஒரு கபடி விளையாட்டு வீரன் கதாபாத்திரத்தில் அட்டகாசமாகப் பொருந்தியிருந்தார். கதாபாத்திரத்துக்கு ஏற்ற தோற்றம், தொடர்ந்து ஒடுக்கப்படும் ஒருவனின் உடல்மொழி, வெற்றிக்கான ஓட்டத்தில் சளைக்காமல் போராடும் குணம் என நடிப்பில் அவர் காட்டிய பரிமாணங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. ‘நடிப்பில் குட்டி விக்ரம்’ என்றும் புகழ்ந்தார்கள். […]

இணையத்தை அதிரவைக்கும் ரஜினியின் ஜெயிலர் – 2 ‘பிந்தாஸ்’பாடல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. ஜெயிலர் -2 திரைப்படத்தின் பிந்தாஸ் பாடல் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் ஏராளமாக பகிரப்பட்டு வருகிறது. பாடலின் தலைப்பான ‘பிந்தாஸ்’ வார்த்தைகள் அதன் பொருளுக்கு ஏற்ப கொண்டாட்ட மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது. இந்த பாடலை ரஜினிகாந்த் ரசிகர்களை கவரும் வகையில் சூப்பர் சுப்பு எழுதி […]

யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகியிருந்த டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேகநபர் கைது

க்கோயா இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டிக்கோயா நகரில் வயோதிப தம்பதியினர் இருவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டிருந்த 37 வயதுடைய சந்தேக நபர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் சிறைச்சாலை பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றிருந்தார். பதுளை – தெமோதரையைச் சேர்ந்த மனோஜ் அல்லது மனோஹரன் என அழைக்கப்படும் குறித்த சந்தேக நபர், முன்னதாக பொகவந்தலாவை பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டிருந்தார். […]

திலீபனின் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து பிரித்தானியாவில் மாபெரும் கண்டனப் போராட்டம்

தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்தும், சிலையை மீளவும் அதே இடத்தில் நிறுவக் கோரியும் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றது. குறித்த போராட்டமானது நேற்றையதினம் (03.10.2026) முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானிய பிரதமரின் காரியாலயத்திற்கு முன்பாக 3 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம், வெளிவிவகார அமைச்சகம் வரை சென்று முடிவடைந்திருந்தது. தியாக தீபம் திலீபனின் நினைவை அவமதிக்கும் வகையிலான நடவடிக்கைகளைக் கண்டித்தும், தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நீதிக்கான கோரிக்கைகளை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையிலும் […]

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்!

கொழும்பு நகரைச் சுற்றியுள்ள 24 அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதிகளின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பேணுவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு அமைவாக, கொழும்பு பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தலைமையில் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் இயங்கும் இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களைப் […]

மதுபானம் அருந்திய பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்!

வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது பற்றி தெரியவருவதாவது குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பொலிஸ் கொஸ்தாப்பர் ஒருவர் சம்பவ தினமான கடந்த 29 திகதி செவ்வாய்க்கிழமை இரவு கன்னங்குடா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய கு.ஜனுஷன், 36 வயதுடைய அ.யோகேஸ்வரன் ஆகிய இருவருடன் இணைந்து மதுபானம் அருந்தி கொண்டனர். இந்த நிலையில் கு.ஜனுஷன் மற்;றும் அ.யோகேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் […]