“இலங்கையில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!” – பொதுமக்களுக்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அவசர அறிவுறுத்தல்!

கொழும்பு: இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களுக்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அவசர மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை நேற்று (செப்.27) உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான மற்றும் சரிவான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரண்டாம் நிலை எச்சரிக்கை: இதற்கமைய, காலி […]
“சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் விவகாரம்!” – அவசரமாக சவூதி அரேபியா செல்லும் அரசியல் பிரதிநிதிகள் குழு!

கொழும்பு: சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்க, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று விரைவில் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது. ஜனாதிபதியின் மேன்முறையீடு: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் மேன்முறையீட்டுக் கடிதம் ஒன்றினைச் சவூதி அரேபிய மன்னரிடம் சமர்ப்பிக்கும் நோக்கில் இந்தக் குழு பயணிக்கவுள்ளது. இந்த மேன்முறையீடு எதிர்வரும் ஒக்டோபர் 17-ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், இது மனிதநேய அடிப்படையில் […]
ஈகச்சுடர் திலீபன் சிலை அகற்றம்: சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது

ஈழமண்ணில் ஈகச்சுடர் திலீபனின் திருவுருவச் சிலையை சிங்கள -பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் இன்று (செப்டம்பர் 27) அகற்றியுள்ளனர். யாழ்ப்பாணம், நல்லூரில் சில நாள்களுக்கு முன்பு பொதுமக்களால் நிறுவப்பட்ட அச்சிலையை, தமது ஆதிக்கவெறியை வெளிப்படுத்தும் வகையில் சிங்களக் காவல்துறையினர் அப்புறப்படுத்தியுள்ளனர். அதிபர் அனுர திசநாயக அரசின் இந்த ஒடுக்குமுறை நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். 1987 ஆம் ஆண்டு செப்டர் 26 அன்று ஈகச்சுடர் திலீபனின் இன்னுயிர் மூச்சு அடங்கியது. இந்திய ஒன்றிய […]
அச்சுவேலி சிறுவர் சீர்திருத்த பாடசாலை சம்பவம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

அச்சுவேலி பகுதியில் இயங்கிவரும் சிறுவர் சீர்திருத்தப் பாடசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடூரமான சம்பவம் தொடர்பான காணொளியொன்று கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கடந்த 24ஆம் திகதி நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தாக்குதல் காட்சிகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த சீர்திருத்தப் பாடசாலையில் உள்ள மாணவர்களை, கொடூரமான முறையில் தாக்கும் காட்சிகள் சமூக […]
வடக்கு லண்டனில் இலங்கை வம்சாளி சிறுமி விபத்தில் பலி

வடக்கு லண்டனில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடக்கு லண்டனில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த பொழுது கார் ஒன்று மோதியதில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த சிறுமி, மெலிசா பிரேமரத்னே என பிரிட்டிஷ் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஹைகேட் பாடசாலையில் 12 ஆம் வகுப்பு மாணவி என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர். காலையில் பாடசாலைக்கு செல்லும் […]
ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டனிலிருந்து இந்தியா வரை மனிதநேய நடைப்பயணம்!

ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி, பிரித்தானியாவின் லண்டனிலிருந்து இந்தியா வரை முன்னெடுக்கப்படவுள்ள மனிதநேய நடைப்பயணத்தின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நடைபெற்றது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலுடன் கூடிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும், மனிதப் புதைகுழிகள் தொடர்பில் பொறுப்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடைப்பயணம் முன்னெடுக்கப்படவுள்ளது. புலம்பெயர் தமிழ் உணர்வாளரான […]
அனோஜனுக்கு மனிதநேய அடிப்படையில் மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்!

சவூதி அரேபியாவில் கைதியாக சிறைபிடிக்கப்பட்ட இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராஜா அனோஜனை மனிதநேய அடிப்படையில் மரண தண்டனையிலிருந்து அவருக்கு மன்னிப்பு அளிக்கப் பட வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொது செயலாளர் சி.கா.செந்திவேல் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், மதத்தை அவதூறாக பேசினார் என்பதற்காக ஒரு மனிதனின் அதுவும் மற்றொரு நாட்டைச் சேர்ந்த ஒருவரின் உயிரைப் […]