வலுவடைந்தது தாழமுக்கம்!

நாட்டிற்கு வடகிழக்காக வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலவிய தாழமுக்கமானது ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது. இத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏதும் இருக்காது என்றாலும், இத் தொகுதியை நோக்கிய காற்று வீசுகை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் […]
இலங்கையில் குழந்தைகளுக்குரிய ஆசனப் பட்டி விதிமுறைகளில் மாற்றம்?

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் ஆசனப் பட்டி அணிய வேண்டும் என்ற விதிமுறையிலிருந்து சில பிரிவினருக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். சிறு குழந்தைகள் மற்றும் நான்கரை அடிக்கும் குறைவான உயரம் உள்ள பயணிகளுக்கு ஆசனப் பட்டி விதி பொருந்தாது என அவர் குறிப்பிட்டார். மேலும், மருத்துவ காரணங்களால் ஆசனப் பட்டி அணிய வேண்டாம் என மருத்துவ ரீதியாக அறிவுறுத்தப்பட்டுள்ள பயணிகளுக்கும் இந்த […]
வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக அவதூறு: அர்ச்சுனா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்கு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஹிஜாப் பிரச்சனை தொடர்பாகப் பதிவிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட 6 பேருக்கும் மற்றும் யூடியூப், முகநூல் தளங்களுக்கும் எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு, நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளையைப் பெறுவதா இல்லையா என்ற தீர்மானத்தை எடுப்பதற்காக எதிர்வரும் 28ஆம் திகதிக்கு நீதவானால் ஒத்திவைக்கப்பட்டது. […]
தமிழ்க்கனேடிய நடிகைக்கு ஆதரவாக CTC அறிக்கை!

விருது பெற்ற தமிழ்க்கனேடிய நடிகை மைத்ரேயி இராமகிருஷ்ணனுக்கு எதிராக இணையத்தில் திட்டமிட்டு நடத்தப்படுவதாகக் கூறப்படும் தாக்குதல்களை கனேடிய தமிழர் பேரவை (CTC) வன்மையாகக் கண்டித்துள்ளது. தங்களது முகநூல் பதிவில், ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களின் அடையாளத்தை தாங்களே தேர்ந்தெடுத்து வெளிப்படுத்தும் அடிப்படை உரிமை இருப்பதாக CTC வலியுறுத்தியுள்ளது. மைத்ரேயி இராமகிருஷ்ணனை குறிவைத்து நடைபெறும் ஒருங்கிணைந்த இணையத் தாக்குதல்கள் வெறும் கருத்து வேறுபாடு அல்ல; அவருடைய தனிப்பட்ட அடையாளத்தையும் தன்னுரிமையையும் கட்டுப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் […]
தமிழ் – முஸ்லிம் உறவில் அனோஜனின் நிலை விரிசலை ஏற்படுத்தலாம்!

”சொந்த நாட்டிலும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள், வேலைவாய்ப்புக்காகச் சென்ற நாட்டிலும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கான உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்படும் வரை, எங்கு சென்றாலும் நசுக்கப்படும் இனமாகவே நாம் வாழ வேண்டிய நிலை தொடருகின்றது” என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கரைச்சி பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரத்தின் இறுதிநாள் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய அவர், சைவ சமயத்தின் […]
மண்டைதீவு புதைகுழி வழக்கு ஒத்தி வைப்பு

1990 களில் இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் நவம்பர் 10 ஆம் திகதியிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று (22) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தமது சான்றுகளை சமர்ப்பித்ததுடன், மேலதிக சாட்சியங்கள் மற்றும் தடயங்களைத் திரட்டுவதற்கு மேலும் கால அவகாசம் கோரினர். இதேநேரம் கடந்த ஜூலை 28 ஆம் திகதி […]
பாதாள உலக குற்றவாளிகள் ‘ஹரக் கட்டா’ -‘கெஹெல்பத்தர பத்மே’ மோதல்

நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்ற ‘ஹரக் கட்டா’ மற்றும் மந்தினு பத்மசிறி பெரேரா என்ற ‘கெஹெல்பத்தர பத்மே’ ஆகியோர் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அவர்களுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன்போது ‘கெஹெல்பத்தர பத்மே’ லேசான காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்த இலங்கை அணி, இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் வில் ஜேக்ஸின் சுழலில் சிக்கி 37 ஓவர்களில் 176 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் 265 ஓட்டங்களுக்கு […]
சந்நிதியான் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் இளைப்பாறும் நிழற்குடை இடித்தழிப்பு

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை பகுதியில் வீதியில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த சட்டவிரோத கட்டடம் இடித்து அகற்றப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட செல்வ சந்நிதி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீதியில் , வீட்டின் வெளியே அனுமதியின்றி நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. குறித்த நிழற்குடையின் கீழ் ஆலயத்திற்கு செல்வோர் இளைப்பாறி சென்றனர். இந்நிலையில் குறித்த நிழற்குடை நகர சபையின் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகவும் , அதனை அகற்றுமாறு உரிமையாளருக்கு நகர சபையினால் கால அவகாசம் கொடுத்து அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. அவற்றை அகற்ற […]