“தமிழக வரலாற்றிலேயே இப்படியொரு கேடுகெட்ட சட்டப்பேரவையைப் பார்த்ததில்லை!” – சீறும் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: வேலப்பஞ்சாவடியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளையும், ஆளும் தவெக அரசின் கூட்டணி பலத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார். உதயநிதி முன்வைத்த முக்கியக் குற்றச்சாட்டுகள்: பதிலளிக்காத முதலமைச்சர்: சட்டப்பேரவையில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு குறித்து 38 நிமிடங்களில் 16 கேள்விகளைத் தான் எழுப்பிய நிலையில், அதற்குப் பதிலளிக்காமல் முதலமைச்சர் விஜய் அவையை விட்டு வெளியேறினார். மூன்று நாள்கள் கழித்து வந்தபோதும் கேள்விகளுக்குப் பதில் […]

சிவகங்கை இரட்டைக் கொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தற்காலிக அரசுப் பணி ஆணை வழக்கம்!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, சுகாதாரத் துறையில் ‘டெங்கு மஸ்தூர்’ பணிக்கான தற்காலிக அரசுப் பணி ஆணைகள் நேற்று (செப். 20, ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்பட்டன. முக்கிய விவரங்கள்: பணி ஆணை: மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின்பேரில், உயிரிழந்த பூப்பாண்டியின் சகோதரி பூமணி மற்றும் தெய்வேந்திரனின் சகோதரர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் வருவாய் கோட்டாட்சியர் ஜெ.பி. கிரேசியா இந்த தற்காலிகப் பணி ஆணைகளை வழங்கினார். பிரேதப் […]

“வங்கக்கடலில் இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகிறது!” – 21 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!

சென்னை: கிழக்கு – மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து, இன்று (செப். 21, திங்கட்கிழமை) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் முக்கியத் தகவல்கள் புயல் சின்னத்தின் நகர்வு: மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த வானிலை அமைப்பு, இன்று கிழக்கு – மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நாளை (செப். 22) மேற்கு […]

பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்வு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகப் பிரதான ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, களனி கங்கையின் க்ளென்கோர்ஸ் (Glencourse) பகுதியிலும், நில்வளா ஆற்றின் பாணடுகம பகுதியிலும் தற்போது சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேல்நில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, பின்வரும் பகுதிகளிலுள்ள ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தில் காணப்படுகின்றது: களனி கங்கை: ஹங்வெல்ல, நோர்வுட் கெசல்கமு ஓயா மற்றும் குருகொட ஓயா களு கங்கை: […]

பல பகுதிகளில் 100 மி.மீக்கு அதிகளவான மழை

வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏதும் இருக்காது என்றாலும், இத் தொகுதியை நோக்கிய காற்று வீசுகை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் […]

அனோஜனை மீட்க அரசு முழு அளவில் செயற்படும் – பிமல்

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை செலுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த விடயம் தொடர்பில் அதிகபட்ச தலையீட்டை மேற்கொண்டு வருகிறோம் எனக் குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சரும் வெளிவிவகார அமைச்சும் இதில் தலையிட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதேபோன்று ஜனாதிபதி செயலகமும் இதில் தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. […]

ஊவாவில் மலை வெடித்தது

ஊவாபரணகம, யாலகமுவ, தபகொல்ல மலை வெடித்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தபகொல்ல மலையின் தற்போது 700 மீட்டர் அளவிலான பகுதி வெடித்துள்ளது. அந்தப் பிளவுகள் 10 முதல் 12 அங்குல அளவில் காணப்படுவதுடன், சில இடங்களில் பூமி 7 முதல் 8 அடி வரை ஆழத்திற்குத் தாழ்ந்து போயுள்ளதாகவும் ஊவாபரணகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த நாட்களில் நிலவிய கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக காட்டை யாரோ தீயிட்டு எரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் மழையுடன் […]

சிவலிங்கத்தை அவமதித்தவர் வீட்டிலிருக்கையில் அனோஜனுக்கு தலை துண்டிப்பு தண்டனை – சிறீதரன் ஆவேசம்!

சிவலிங்கத்தை கீழ்த்தரமாக எழுதியவர் வீட்டில் இருக்கப் போகிறார், அல்லாஹ்வை கீழ்த்தரமாக பதில் எழுதிய அனோஜனுக்கு தலை துண்டிக்கப்பட போகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வும், பரிசளிப்பு விழாவும்  கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கும் போது அனோஜனுடைய […]

‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் பணத்துடன் ஒருவர் கைது!

நீண்ட காலமாகப் பொலிஸாரினிடமிருந்து தப்பித்து வந்த சந்தேக நபர் ஒருவர், வேன் ஒன்றில் பெருந்தொகையான ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் பணத்தைக் கடத்திச் சென்றபோது சம்மாந்துறை பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரே, அல் முனீர் வீதியில் வைத்து அவர் பயணித்த வேனுடன் பொலிஸாரினால் வளைத்துப் பிடிக்கப்பட்டார். கைது […]

இலங்கையில் நடந்த சோகம்.. மின்னல் தாக்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு.!

அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட பிரதேசத்தில் வீடொன்றின் அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்த 15 வயது பாடசாலை மாணவன் மீது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர், அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட முகவரியில் வசிக்கும் அகலவத்தை மிஹிந்து மகா வித்யாலயாவில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஹசித பிரதீப் குமார (வயது-15) என பொலிஸார் தெரிவித்தனர். வீட்டு அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்புப் படுகையில் (Plug Point) பாய்ந்த மின்னல் தாக்குதல் […]