சிவலிங்கத்தை அவமதித்தவர் வீட்டிலிருக்கையில் அனோஜனுக்கு தலை துண்டிப்பு தண்டனை – சிறீதரன் ஆவேசம்!

சிவலிங்கத்தை கீழ்த்தரமாக எழுதியவர் வீட்டில் இருக்கப் போகிறார், அல்லாஹ்வை கீழ்த்தரமாக பதில் எழுதிய அனோஜனுக்கு தலை துண்டிக்கப்பட போகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கும் போது அனோஜனுடைய […]
‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் பணத்துடன் ஒருவர் கைது!

நீண்ட காலமாகப் பொலிஸாரினிடமிருந்து தப்பித்து வந்த சந்தேக நபர் ஒருவர், வேன் ஒன்றில் பெருந்தொகையான ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் பணத்தைக் கடத்திச் சென்றபோது சம்மாந்துறை பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரே, அல் முனீர் வீதியில் வைத்து அவர் பயணித்த வேனுடன் பொலிஸாரினால் வளைத்துப் பிடிக்கப்பட்டார். கைது […]
இலங்கையில் நடந்த சோகம்.. மின்னல் தாக்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு.!

அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட பிரதேசத்தில் வீடொன்றின் அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்த 15 வயது பாடசாலை மாணவன் மீது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர், அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட முகவரியில் வசிக்கும் அகலவத்தை மிஹிந்து மகா வித்யாலயாவில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஹசித பிரதீப் குமார (வயது-15) என பொலிஸார் தெரிவித்தனர். வீட்டு அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்புப் படுகையில் (Plug Point) பாய்ந்த மின்னல் தாக்குதல் […]
திருகோணமலை கடற்கரை பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி இன்று (20) திருகோணமலை கடற்கரை பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலையில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் இளைஞர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறும் இரு நிமிட மௌன அஞ்சலியுன் சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இலங்கை அரசாங்கம் குறித்த விடயத்தில் தலையிட்டு, சவூதி அரேபிய […]