“முதல்வரின் லண்டன் பயணத்தைக் கிண்டல் செய்வதா?” – எதிர்க்கட்சிகளுக்கு நிதியமைச்சர் மரிய வில்சன் பதிலடி!

சென்னை: தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத வெளிப்படையான ஆட்சி நடைபெற்று வருவதால் அரசின் சொந்த வருவாய் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். அத்துடன், முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நிதியமைச்சரின் விளக்கங்கள்: பத்திரப்பதிவில் வருவாய் உயர்வு: தவெக ஆட்சியில் லஞ்சம் மற்றும் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டதால், பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றிப் பத்திரப்பதிவு செய்ய வருகின்றனர். இதன் மூலம் அத்துறையின் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. கடன் சுமை குறைப்பு: கடந்த […]

“வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை!” – தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் இன்று அவசர ஆலோசனை!

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து வருவதுடன், தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (செப். 21, திங்கட்கிழமை) நண்பகல் 12 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இன்றைய ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய அம்சங்கள் கூட்டம் & நேரடிப் […]

யூடியூபர் இர்பானின் சொகுசு கார் மோதி பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 30.69 லட்சம் இழப்பீடு: தீர்ப்பாயம் உத்தரவு!

சென்னை: கடந்த ஆண்டு யூடியூபர் இர்பானுக்குச் சொந்தமான சொகுசு கார் மோதி தனியார் கல்லூரி காவலாளி உயிரிழந்த வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு ரூ. 30.69 லட்சம் இழப்பீடு வழங்கச் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு மற்றும் தீர்ப்பின் முக்கிய விவரங்கள்: விபத்தின் பின்னணி: கடந்த 2023 மே 25-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஜிஎஸ்டி சாலையில் சாலையைக் கடக்க முயன்ற பத்மாவதி என்ற பெண் மீது, யூடியூபர் இர்பானின் சொகுசு […]

“முதலமைச்சருக்குத் தெரியாது என்பதா?” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக கண்டனம்!

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் விஜய் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என மதுராந்தகம் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு, திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும், மதுராந்தகம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளருமான இ.பரந்தாமன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இ.பரந்தாமன் அறிக்கையின் முக்கியக் குற்றச்சாட்டுகள் மக்களை ஏமாற்றும் தந்திரம்: “பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவை முதலமைச்சர் விஜய் இன்னும் எடுக்கவில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா […]

மதுராந்தகத்தில் 8 இடங்களில் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரசாரம்: அதிமுக தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இரண்டு நாள்கள் மொத்தம் 8 இடங்களில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஈபிஎஸ் பிரசாரப் பயணத் திட்டம் தேதி நேரம் பிரசாரம் செய்யும் இடங்கள் செப். 24 (புதன்கிழமை) பிற்பகல் 3:00 மாலை 4:30 மாலை 6:00 இரவு 7:00 மாமண்டூர் பூதூர் தேவத்தூர் சரவம்பாக்கம் செப். 26 (வெள்ளிக்கிழமை) […]

“தமிழக வரலாற்றிலேயே இப்படியொரு கேடுகெட்ட சட்டப்பேரவையைப் பார்த்ததில்லை!” – சீறும் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: வேலப்பஞ்சாவடியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளையும், ஆளும் தவெக அரசின் கூட்டணி பலத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார். உதயநிதி முன்வைத்த முக்கியக் குற்றச்சாட்டுகள்: பதிலளிக்காத முதலமைச்சர்: சட்டப்பேரவையில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு குறித்து 38 நிமிடங்களில் 16 கேள்விகளைத் தான் எழுப்பிய நிலையில், அதற்குப் பதிலளிக்காமல் முதலமைச்சர் விஜய் அவையை விட்டு வெளியேறினார். மூன்று நாள்கள் கழித்து வந்தபோதும் கேள்விகளுக்குப் பதில் […]

சிவகங்கை இரட்டைக் கொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தற்காலிக அரசுப் பணி ஆணை வழக்கம்!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, சுகாதாரத் துறையில் ‘டெங்கு மஸ்தூர்’ பணிக்கான தற்காலிக அரசுப் பணி ஆணைகள் நேற்று (செப். 20, ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்பட்டன. முக்கிய விவரங்கள்: பணி ஆணை: மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின்பேரில், உயிரிழந்த பூப்பாண்டியின் சகோதரி பூமணி மற்றும் தெய்வேந்திரனின் சகோதரர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் வருவாய் கோட்டாட்சியர் ஜெ.பி. கிரேசியா இந்த தற்காலிகப் பணி ஆணைகளை வழங்கினார். பிரேதப் […]

“வங்கக்கடலில் இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகிறது!” – 21 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!

சென்னை: கிழக்கு – மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து, இன்று (செப். 21, திங்கட்கிழமை) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் முக்கியத் தகவல்கள் புயல் சின்னத்தின் நகர்வு: மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த வானிலை அமைப்பு, இன்று கிழக்கு – மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நாளை (செப். 22) மேற்கு […]

பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்வு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகப் பிரதான ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, களனி கங்கையின் க்ளென்கோர்ஸ் (Glencourse) பகுதியிலும், நில்வளா ஆற்றின் பாணடுகம பகுதியிலும் தற்போது சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேல்நில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, பின்வரும் பகுதிகளிலுள்ள ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தில் காணப்படுகின்றது: களனி கங்கை: ஹங்வெல்ல, நோர்வுட் கெசல்கமு ஓயா மற்றும் குருகொட ஓயா களு கங்கை: […]

பல பகுதிகளில் 100 மி.மீக்கு அதிகளவான மழை

வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏதும் இருக்காது என்றாலும், இத் தொகுதியை நோக்கிய காற்று வீசுகை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் […]