அண்ணாமலையார் கோயிலில் விரைவான தரிசனம் மற்றும் ‘ரீல்ஸ்’ மோகத்துக்குக் கட்டுப்பாடு: அமைச்சர் ரமேஷின் அதிரடி ஆய்வும் அறிவிப்பும்!
திருவண்ணாமலை: உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் விரைவான தரிசனம் குறித்து அவர் முக்கிய ஆலோசனைகளை நடத்தினார். இதன் முக்கிய விவரங்கள் பின்வருமாறு: பொதுமக்களோடு வரிசையில் நின்று நேரடி ஆய்வு வி.ஐ.பி சலுகை தவிர்ப்பு: வழக்கமான வி.ஐ.பி அல்லது சிறப்பு தரிசனப் பாதைகளைத் தவிர்த்துவிட்டு, பொதுமக்களோடு இணைந்து பொது தரிசன வரிசையில் நின்றபடி அமைச்சர் ரமேஷ் தனது ஆய்வை […]
3 தமிழர்கள் படுகொலை விவகாரம்: முதலமைச்சர் விஜய்க்குச் சீமான் சரமாரிக் கேள்வியும் கடும் கண்டனமும்!

சென்னை: கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், த.வெ.க. அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய விவரங்கள் பின்வருமாறு: திட்டமிட்ட படுகொலையும் அரசின் மௌனமும் சுடப்பட்ட மூன்று தமிழர்களும் 10 அடிக்கும் குறைவான தூரத்தில் இருந்து சுடப்பட்டுள்ளனர். குறிப்பாக ஜான்ரோஸ் பீட்டரின் உடலில் 25 செ.மீ. நீளத்திற்கு ஆழமான காயம் உள்ளது. இது ஒரு திட்டமிட்ட […]
18 மலைகள் காணாமல் போன விவகாரம்: புதிய சட்டம் இயற்றிக் கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

கோயம்புத்தூர்: தமிழகத்தில் 18 மலைகள் வெட்டி எடுக்கப்பட்டுக் காணாமல் போன விவகாரம் தொடர்பாகப் புதிய சட்டம் இயற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். காணாமல் போன மலைகளும் பினாமி விசாரணையும் புதிய சட்டம்: சட்டப்பேரவையில் அமைச்சர் பிரபு 18 மலைகள் காணாமல் போனது குறித்துப் பேசியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த செங்கோட்டையன், இது […]
டெல்டா பாசனத்திற்காக செப்டம்பர் 1-ல் மேட்டூர் அணை திறப்பு: முதலமைச்சர் விஜய் நேரில் திறந்து வைக்கிறார்!

சென்னை: காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசனத் தேவைக்காக வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று அணையைத் திறந்து வைக்கவுள்ளார் எனத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அணை திறப்பு குறித்த முக்கியத் தகவல்கள் 45 நாட்களுக்கு நீர் திறப்பு: வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அடுத்த 45 நாட்களுக்கு, மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்துத் தண்ணீர் திறந்துவிடப்பட […]
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனே உயர்த்த வேண்டும்: தமிழக அரசுக்குத் தொழிற்சங்கங்கள் இறுதி எச்சரிக்கை!

சென்னை: தமிழகச் சட்டப்பேரவையில் நடைபெறும் போக்குவரத்து மானியக் கோரிக்கையின் போது, ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகாவிட்டால் மாநில அளவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய தொழிற்சங்க மையத்தின் (CITU) மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, ஒருங்கிணைப்பாளர் எஸ். பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மீட்டர் கட்டணம் நீண்ட காலப் புறக்கணிப்பு: கடந்த […]
கடுமையான வெள்ளப்பெருக்கு; நேபாளத்திற்கு உதவ களமிறங்கிய ஐ.நா

நேபாளம் மற்றும் சீனாவில் பல உயிர்களைப் காவு கொண்டதுடன், பலரைக் காணாமல் ஆக்கி, பரவலான பேரழிவையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் தாம் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையத் தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அனைவருடனும் நான் துணை நிற்கிறேன் என்று கூறியுள்ள அவர், நேபாள அரசாங்கத்தின் தலைமையிலான மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா. […]
ஹார்முஸ் ஒப்பந்தம்: ஈரான் – ஓமன் தொடா்ந்து பேச்சு

ஹார்முஸ் நீரிணை விவகாரம் தொடா்பாக ஈரானுக்கும், ஓமனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்து தொடா்ந்து பேச்சு நடைபெற்று வருவதாக ஈரானின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளார். உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு கப்பல் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கை கையாளும் இந்த நீரிணைக்கான போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஈரான், ஓமன் ஆகிய அப்பகுதியின் இரு எல்லை நாடுகளும் பல வாரங்களாக பேச்சு நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஐ.ஆா்.ஜி.சி. செய்தித் தொடா்பாளா் ஹொசைன் மொஹெப்பி […]
முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் விற்கப்படும் பெண்களின் புகைப்படங்கள்?

பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும் வாங்கும் இணைய மோசடி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலைமை தொடர்பில் அமைச்சின் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான துரித தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்த […]
யாழ் மாவட்ட செயலக பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் மீதான பலப்பிரயோகத்துக்கு தமிழ்த்தலைமைகள் கண்டனம்!

தமக்கு நீதிவேண்டிப் யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகப் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தாய்மார் பொலிஸாரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையையும், அவற்றை உள்ளே இருந்தவாறு கையடக்கத்தொலைபேசி ஊடாகப் பார்த்துக்கொண்டிருந்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் செயலையும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் செவ்வாய்க்கிழமை (25) யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வலிந்து […]
நாட்டில் இன்றும் சில இடங்களில் 50 மி.மீ மழை!

நாட்டில் இன்றும் (27) சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் […]