“2031-ல் பாமக தலைமையில் உறுதியாக ஆட்சி அமையும்!” – சேலத்தில் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்!

சேலம் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும் 2031 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த முக்கியக் கருத்துகள்: 2031-ல் பாமக ஆட்சி: “கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிய அரசியல் களம் உருவாகியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக ஆண்ட கட்சிகளையும் எதிர்க்கட்சிகளையும் தாண்டித் தனி ஒரு கட்சி ஆட்சியில் […]
ஆண்டுக்கு 3 சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்; பரந்தூர் விமான நிலையம் ரத்து – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

சென்னை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று விதி எண் 110-ன் கீழ் பொதுமக்களுக்குப் பயன்தரும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அதிரடியாக வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்: ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டம் – 3 சிலிண்டர்கள் இலவசம்: போர்ச் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால், பொதுமக்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில் ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டம் வரும் பொங்கல் […]
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் சடலம் மீட்பு: காவற்துறையினர் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம், காரைநகர் வேரப்பிட்டி கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: காரைநகர் வேரப்பிட்டி கடற்கரையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கிக் கிடப்பதை அவதானித்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக ஊர்காவற்துறை காவல் நிலையத்திற்குத் தகவல் வழங்கினர். தகவலறிந்த காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். நடவடிக்கை & மருத்துவப் பரிசோதனை: மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாரென அடையாளம் காணப்படவில்லை. உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் மேலதிக […]
சுரேஸ்சாலேயின் தாயாரும் அனுரவிற்கு கடிதம் எழுதினார்-

தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ்சாலேயின் தடுப்;;புக்காவல் உத்தரவை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க நீடிக்க கூடாது என சாலேயின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள சுரேஸ்சாலேயின் தாயார் மேலும் தெரிவித்துள்ளதாவது எனது மகன் இராணுவத்தில் 37 வருடங்கள் பணியாற்றியுள்ளதுடன்இளமை காலங்களையும் பெறுமதியான வாழ்க்கையையும் குடும்பத்துடன் செலவிடமாமல் நாட்டிற்காக செலவிட்டுள்ளார். நான் எனது மகனிற்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறு கோரவில்லைஅவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால் ஆதாரங்களை ஆராய்ந்து உண்மையை நிலைநாட்டுங்கள். அதேவேளை […]
சுரேஸ் சாலேக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு – தேசிய அமைப்புகளின் ஒன்றியம்

தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ்சாலேக்கு எதிராக மூன்றாவது தடுப்புக்காவல் உத்தரவை பிறப்பிப்பதை ஜனாதிபதி தவிர்க்கவேண்டும் அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவேண்டும் என தேசிய அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது சுரேஸ்சாலே தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்கவேண்டும். சுரேஸ் சாலேயை மேலும் தாமதிக்காமல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவேண்டும் என […]
ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்க இராணுவம் முயற்சி: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவிப்பு..!

பலாலி பகுதியில், இராணுவம் தொடர்ந்து கையகப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுற்றி நடைபெறும் போராட்டத்தில் இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டார். பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ”ஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து வைத்துள்ள தொடர் நடவடிக்கைகளுக்கு எதிராகவே மக்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் குடியேற இந்த அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது புலனாய்வுத் துறையினரும் […]
50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு. ஆனால், பெய்ஜிங் நகரில் எதிர்பாராதவிதமாக மிகவும் பரபரப்பான ஒரு நிஜ சம்பவமாக இது பதிவாகியுள்ளது. பெய்ஜிங்கைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் விளையாட்டிற்காக வீச்சாக சுமார் 4 சென்டிமீட்டர் நீளமும், 50 கிராம் எடையும் கொண்ட திடமான தங்கக்கட்டி ஒன்றை விழுங்கியுள்ளார். இந்தத் தங்கக்கட்டி சிறுமியின் வயிற்றில் 6 மணி நேரத்திற்கும் மேலாகத் தங்கியிருந்ததால், […]
தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையினால், பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்தச் சிக்கல் குறித்து ஏற்கனவே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை […]
கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இரு மோட்டார்ச் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் நடந்துள்ளது. பளையில் வசித்து வந்த வடமராட்சி வட அல்வாய் நக்கீரன் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் சகீன் (வயது- 18) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர். எந்தவொரு அதிகாரியினதும் கவனம் ஈர்க்கப்படாத நிலையில், கிராம மக்கள் தமக்குள்ள ஒரே ஒரு கிணற்று நீரை எத்தகைய சுத்திகரிப்புமின்றிப் பருகி வருகின்றனர். சுமார் 500 குடும்பங்கள் வாழும் இக்கிராமத்திற்கு, பல ஆண்டுகளுக்கு முன்பு தொண்டு நிறுவனம் ஒன்றினால் குழாய்க் கிணற்றுடன் கூடிய நீர்தாங்கி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. எனினும், அதிலிருந்து வெளிவரும் நீருடன் கற்கூளங்களும் (கற்பொடிகளும்) […]