மொனராகலையில் டிப்பர் – டிராக்டர் மோதி கொடூர விபத்து: 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

மொனராகலை, ஆகஸ்ட் 21: மொனராகலை, கும்புக்கன் பகுதியில் இன்று (21) அதிகாலை வேளையில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளவாயா – மொனராகலை வீதியின் களு பாலத்திற்கு அருகில், வெள்ளவாயா திசையை நோக்கிப் பயணித்த டிப்பர் லொறியொன்றும், எதிர் திசையில் வந்த டிராக்டரொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் டிராக்டரின் பெட்டியில் (Trailer) 10 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோதலின் […]
இன்று பாராளுமன்றுக்கு நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு பிரேரணை
2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவுக்காக தேவையான 7,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (21) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் நேற்று (20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தக் குறைநிரப்பு பிரேரணையை அங்கீகரித்துக்கொள்வதற்கான விவாதம் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு 2026 […]
மக்கள் பணத்தை வீணடிக்கும் வகையில் நாம் எவ்வித சலுகைகளையும் பெறவில்லை

“சலுகை மற்றும் சுகபோகங்கள் இல்லாத, மக்களுக்கான அரசியலை முன்னெடுத்ததாலேயே மக்கள் எமக்கு ஆணையளித்தனர். அதற்கமையவே நாம் தற்போது செயல்பட்டு வருகிறோம். மக்கள் பணத்தை வீணடிக்கும் வகையில் நாம் எவ்வித சலுகைகளையும் பெறவில்லை,” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 15 மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களுக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள 112 கடற்றொழில் […]