மக்கள் பணத்தை வீணடிக்கும் வகையில் நாம் எவ்வித சலுகைகளையும் பெறவில்லை

“சலுகை மற்றும் சுகபோகங்கள் இல்லாத, மக்களுக்கான அரசியலை முன்னெடுத்ததாலேயே மக்கள் எமக்கு ஆணையளித்தனர். அதற்கமையவே நாம் தற்போது செயல்பட்டு வருகிறோம். மக்கள் பணத்தை வீணடிக்கும் வகையில் நாம் எவ்வித சலுகைகளையும் பெறவில்லை,” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 15 மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களுக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள 112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இன்று நியமனம் பெற்றுள்ள எவரும் எங்களைத் தொடர்புகொண்டு கோரிக்கை வைக்கவில்லை. அரசியல் சிபாரிசுகளின் அடிப்படையில் ஆள்தேர்வு செய்யப்படுவதும் இல்லை. அனைத்து நியமன நடைமுறைகளும் முறைப்படியே பின்பற்றப்படுகின்றன. இதில் எந்தவிதக் கட்சிப் பாகுபாடும் காட்டப்படவில்லை, திறமையானவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று பதவி நியமனம் பெறும் நீங்கள் இதே நிலையிலேயே நீடிக்கப் போவதில்லை. எதிர்காலத்தில் உங்களுக்குப் பதவி உயர்வுகளும் சம்பள உயர்வுகளும் கிடைக்கப்பெறும்.

டிஜிட்டல் துறை குறித்த அனுபவமும் தொழில்நுட்ப அறிவும் உங்களுக்கு உண்டு. உங்களுக்குத் தேவையான வசதிகளை நாம் செய்து தருவோம். அவற்றைப் பயன்படுத்தி, எமது கடற்றொழிலாளர்களுக்கும் டிஜிட்டல் மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த அறிவை வழங்கும் வேலைத்திட்டங்களை நீங்கள் முன்னெடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் அனைத்துக் கடற்றொழில் அதிகாரிகளுக்கும் மின்சார மோட்டார் சைக்கிள் (Electric Motorcycle) ஒன்றை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதற்காக எமது அமைச்சின் செயலாளர் பெரிதும் முயன்றுள்ளார்.

எனவே, நீங்கள் உங்களின் சேவையை மக்களுக்குச் சிறப்பாக வழங்க வேண்டும்.

அதேவேளை, சலுகைகளுக்காகவோ சுகபோகங்களுக்காகவோ நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. எமது அணியின் அரசியலே அதுதான். இதனால்தான் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக ஆணையளித்தனர்.

அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் சலுகைகளை நாம் நிராகரித்துள்ளோம். ஜனாதிபதியும் பிரதமரும் கூட வீண் விரயங்களைச் செய்யாமல், மக்களின் பணத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தி வருகின்றனர். அமைச்சர்களுக்குரிய உத்தியோகபூர்வ மாளிகைகளை நாங்கள் பெறவில்லை, கூடுதல் பாதுகாப்பையும் கோரவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

image_0b1598bfd8

மன்னார் வளைகுடா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு: சர்வதேச நிறுவனங்களுக்கு இலங்கை அழைப்பு

August 25, 2026

இலங்கை தனது மன்னார் வளைகுடாப் பகுதியில் உள்ள சுமார் 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவை பெட்ரோலிய ஆய்வுகளுக்காகச் சர்வதேச எரிசக்தி

easter bomb

உயிர்த்தஞாயிறு தாக்குதல் வழக்கு – செப்டம்பர் 22 திகதி தீர்ப்பு

August 25, 2026

2019ம் ஆண்டு உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22

gr

ஜெர்மன் விமான நிலையத்தை தகர்க்க முயற்சி

August 25, 2026

விளாடிமிர் புட்டின் ஆதரவுடன் ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தை செம்டெக்ஸ் (Semtex) வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் (Drone)

arr

திருட்டுக்களுடன் தொடர்புடைய மூவர் யாழில் கைது!

August 25, 2026

யாழ்ப்பாண குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி

acc

நுவரெலியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்து

August 25, 2026

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியிலிருந்து நுவரெலியாவிற்கு

Sale

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

August 25, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம்

sss

சுடுகாட்டுக்கு ஏற்பாடு; உயிருடன் வந்த கைதி!

August 25, 2026

நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர்

water cut

களனி ஆற்றில் இரசாயன கழிவுகள் – தனியார் நிறுவனத்தின் அத்துமீறல் – கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது

August 25, 2026

தனியார் தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட இரசாயனகழிவுகள் சுற்றுசூழலில் கலந்ததை தொடர்ந்து களனி ஆற்றின் நீர் தரத்தில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதன்

Jail-1-550x344

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க பொலிஸாரிடம் யோசனை கோரல்

August 25, 2026

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்க

suresh11

சுரேஸ் சாலேக்கு மேலும் 90 நாள் தடுப்புக்காவல்

August 25, 2026

2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற

canada11

எங்களால் தொழிலை நடத்த முடியவில்லை’: அமெரிக்க வரி- கனடிய நிறுவனங்கள் கவலை

August 25, 2026

னடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, புதிய அமெரிக்க இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்துள்ளதால், கனடிய

f066efba-3700-4f05-b1b4-98f7f0f69090

வரிகளால் ‘பாதிப்பு ஏற்படும்’, ஆனால் டொராண்டோ மீண்டுவரும்: மேயர் ஆலிவியா சௌ தெரிவிப்பு

August 25, 2026

கனடா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் “பாதிப்பை ஏற்படுத்தும்” என்று டொராண்டோ மேயர் ஆலிவியா சௌ (Olivia Chow) தெரிவித்துள்ளார்,