நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் நடத்தவுள்ள தெளிவுபடுத்தல் கூட்டம் – அரசாங்கம் ஏன் பயந்து நடுங்குகின்றது – மனோ கேள்வி

அரசியலமைப்பிற்கான 22வது திருத்தம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த முயல்வது குறித்து அரசாங்கம் ஏன் அச்சமடைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார் சமூக ஊடக பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டம் குறித்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழமைக்கு மாறாக கலக்கமடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அவர்களின் எதிர்வினை ஒரு குற்றவுணர்ச்சி மனப்பான்மை என்ற எண்ணத்தை உருவாக்ககூடும். இலங்கை சட்டத்தரணிகள் […]
பளையில் விடுதலைப்புலிகளின் முகாம் என தகவல் பரப்பிய நபர் – சமூகங்களிடையே பதற்றத்தை உருவாக்க முயன்றார் – நாடாளுமன்றில் தகவல்

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் இயங்குவதாக உண்மைக்கு புறம்பாக தகவல்களை வெளியிட்ட நபர் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் பல விடயங்களை தெளிவுபடுத்தினார் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது பளையில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் இயங்குகின்றது என்ற தகவலை பரப்பியவர் பொரலஸ்கமுவையை சேர்ந்த சங்கீத் ஜயசேகர. சங்கீத் ஜயசேகரவிடமிருந்து இரண்டு போலி அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன,அவர் ஏழு முகவரிகளை பயன்படுத்தியுள்ளார். அவருக்கு எதிராக ஏற்கனவே மோசடி உட்பட மூன்று குற்றவியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. சந்தேகநபர் […]
நகராட்சி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாகக் கூறிய கவுன்சிலர் ஊதியத்தை இழக்கும் வாய்ப்பு?

இந்த அக்டோபர் மாதம் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் சில ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய விரும்புவதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்த கருத்துக்களுக்காக, கிழக்கு ஒன்ராறியோவில் உள்ள எலிசபெத்தவுன்-கிட்டிலி (Elizabethtown-Kitley) நகரியத்தின் கவுன்சிலரான ராப் ஸ்மித் (Rob Smith) 30 நாட்கள் ஊதியத்தை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். இந்த இலையுதிர் காலத்தில் மேயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் சில ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாகக் கூறியதைத் தொடர்ந்து, எலிசபெத்தவுன்-கிட்டிலியில் மேயர் பதவிக்குப் போட்டியிடும் கவுன்சிலர் ஒருவர் ஒரு மாத ஊதியத்தை இழக்க நேரிடலாம். […]
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22வது திருத்தத்திற்கு எதிராக மேலும் ஒரு மனு

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி சிவில் சமூக அமைப்பான ‘பஹுஜன பலய’ உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தத்தின் விதிகள் அரசியலமைப்பிற்கு அமைவாக உள்ளனவா என்பதையும், அதில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களுக்குத் தேவையான பாராளுமன்ற பெரும்பான்மைக்கு மேலதிகமாகத் மக்கள் வாக்கெடுப்பு மூலம் மக்களின் அனுமதி பெறப்பட வேண்டுமா என்பதையும் தீர்மானிக்குமாறு அந்த அமைப்பு கோரியுள்ளது. கொள்கையளவில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைத் தமது அமைப்பு ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள ‘பஹுஜன பலய’ அமைப்பு, ஆனால் […]
செம்மணி; இலங்கை வரலாற்றின் பாரிய மனிதப் பேரவலம் வெளிச்சத்துக்கு வர வேண்டும்

செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழியில் தொடர்ச்சியாக எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கண்டெடுக்கப்பட்டு வருவதன் மூலம் நாட்டின் வரலாற்றில் பாரிய மனிதப் பேரவலமொன்று வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருப்பதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்தார். மக்கள் போராட்ட இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று (19) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 572க்கும் மேற்பட்ட உடற்பாகங்கள் […]
22 வது திருத்தம் – சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வது நம்பிக்கையை ஏற்படுத்தும்

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது, நீதிமன்றத்தின் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என பெல்லன்வில ரஜமஹா விகாராதிபதி, சிங்கப்பூரின் தலைமைச் சங்கநாயக கலாநிதி பெல்லன்வில தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புத் திருத்தம் குறித்துத் தேரருக்குத் தெளிவுபடுத்துவதற்காக ‘சுயாதீன இயக்க மையத்தின்’ பிரதிநிதிகள் குழுவினர் இன்று (19) பெல்லன்வில ரஜமஹா விகாரையில் அவரைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், மகாநாயக்க தேரர்களால் அனுப்பப்பட்ட […]
கோட்டையின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க புதிய திட்டம்

கொழும்பு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைப் பகுதியை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் திட்டம் குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. உலக வங்கியின் கடன் மற்றும் நிதியுதவியின் கீழ், மேல் மாகாண சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியன இணைந்து கொழும்பு கோட்டைப் பகுதியை சர்வதேச தரத்திலான சுற்றுலா மையமாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளன. இதன் கீழ் 8 […]
கல்கிசை துப்பாக்கிச் சூடு – பிரதான சந்தேகநபர் கைது
கல்கிசை, ஹுளுதாகொட வீதிப் பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) மாலையில் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடுதியொன்றில் தங்கியிருந்தபோதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, இதுவரை இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று ஆண் சந்தேகநபர்களும் ஒரு பெண் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 15 ஆம் திகதி கல்கிசை பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் […]
வங்கி முகாமையாளர்கள் விவகாரம்: 89 கணக்குகளில் 10,151 பணப் பரிமாற்றங்கள்

கைது செய்யப்பட்டுள்ள நான்கு தனியார் வங்கி முகாமையாளர்கள், 89 வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி 10,151 சந்தர்ப்பங்களில் சட்டவிரோதமாகப் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 2026 ஜனவரி மாதம் சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் […]
பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் […]