பளை பகுதியில் தமீழீழ விடுதலைப் புலிகள்? வௌிவந்த உண்மை

பளை பகுதியில் தமீழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட வதந்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்த விடயங்களை பொலிஸார் அறிக்கை ஒன்றின் ஊடாக வௌிப்படுத்தியுள்ளனர். அதன்படி, குறித்த காணொளிக்கு அமைய, அந்த இடமானது கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான கண்ணகிபுரம் மேற்கு, முக்கொம்பன் பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. பளை பகுதியில் உள்ள […]

அமைச்சர் விக்டர் ஃபெடேலியுடன் ஷெரீஃப் சபவா – மிசிசாக்கா நகரப் பிரதிநிதிகள் சந்திப்பு

ஒன்ராறியோ மாகாண சபை உறுப்பினர் (MPP) ஷெரீஃப் சபவாச் (Sheref Sabawy), AMO (Association of Municipalities of Ontario) மாநாட்டின் போது, அமைச்சர் விக்டர் ஃபெடேலியுடன் (Victor Fedeli) இணைந்து மிசிசாக்கா நகரப் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் மிசிசாக்கா நகரத்தின் முக்கிய முன்னுரிமைகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மிசிசாக்காவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் பொருளாதார வலிமைக்கும் ஆதரவளிக்கும் வகையில், மாகாண மற்றும் நகராட்சி அரசாங்கங்கள் இணைந்து பணியாற்றுவதற்கு இதுபோன்ற உரையாடல்கள் […]

மிசிசாக்கா மற்றும் ஒன்ராறியோ அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

மிசிசாக்கா மற்றும் ஒன்ராறியோ முழுவதும் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு குடியிருப்பாளர்கள் தீவிரமான கவலைகளை எழுப்பி வருகின்றனர். வாழ்நாள் முழுவதும் உழைத்து சொந்தமாக வீடு வாங்கிய மக்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கவுன்சிலர் தீபிகா தமர்லா கரிசனை கொள்வதாக செய்மிகள் வெளியாகியுள்ளன. அடுக்குமாடி குடியிருப்பு வாரியங்களின் மிரட்டல் மற்றும் துன்புறுத்தல், சிறிய தகராறுகள் காரணமாக சட்டரீதியான அச்சுறுத்தல்கள் மற்றும் அதிக செலவை ஏற்படுத்தும் கட்டணத் தள்ளுபடிகள், அடுக்குமாடி குடியிருப்பு வாரியங்கள் சட்டச் செலவுகளுக்காகப் பொதுவான நிதியைப் பயன்படுத்த […]

சொத்து வரிகள் – வாழ்க்கைச் செலவுகள் குறித்து… மேயர் கரோலின் பாரிஷ்

மிசிசாக்கா நகரத்தில் அதிகரித்து வரும் சொத்து வரிகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளால் வீட்டு உரிமையாளர்கள், குடும்பங்கள் மற்றும் முதியவர்கள் சந்தித்து வரும் சவால்களுக்குத் தீர்வாக டொராண்டோ மேயர் கரோலின் பாரிஷ் (Carolyn Parrish) தற்போது ஒரு நேர்காணலில் சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். நாங்கள் ஏற்கனவே முதியவர்களுக்கு இலவசப் போக்குவரத்து மற்றும் இலவசச் சமூக மையங்கள் மூலம் உதவியுள்ளோம். எங்களிடம் ஒரு பல் மருத்துவத் திட்டம் இருந்தது, அதற்கு ஆரம்பத்தில் பிராந்தியம் நிதியளித்தது, ஆனால் இப்போது கூட்டாட்சி அரசாங்கம் […]

கனடிய தூதுக்குழு செம்மணியைப் பார்வையிட அனுமதி மறுப்பு!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட கனடா நாட்டின் தூதுக்குழுவிற்கு அரசாங்கம் அனுமதி வழங்காமையால் தூதுக்குழு செம்மணி பகுதிக்கு விஜயம் செய்து திரும்பிச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றது. நேற்று மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நேற்று கனடா தூதுவராலய குழு இந்த களத்தைப் பார்வையிடுவதற்கு விஜயம் செய்தது. ஆனால் அவர்களுக்கான அனுமதி அரசாங்கத்தினால் வழங்கப்படாததினால், திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அகழ்வுப்பணி நடைபெறுகின்ற இடத்திற்கு வருவதாக இருந்தால், இலங்கை அரசாங்கத்தின் […]

கோப்பாயில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு: வயதுமுதிர்ந்த பெற்றோர் அதிகளவில் வருகை!

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால் நேற்று (19)வாக்குமூலம் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகளவில் பங்கேற்ற இந்த நிகழ்ச்சித் திட்டத்தில், நான்கு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வயது, காணாமல் போன காலப்பகுதி, சம்பவம் இடம்பெற்ற விதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர்களது உறவினர்களிடம் விசாரணைகளை […]