யாழில் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இளைஞர் கைது!
யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து, கத்தி முனையை காட்டி பெண்ணொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது வீட்டினுள் 14ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்து, கத்தி முனையில் தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய இளைஞன் ஒருவர் முயன்றதாக பெண்ணொருவர் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கமெராக்களின் உதவியுடன் முன்னெடுத்த […]
இலஞ்சம் பெற்ற இரு பொலிஸார் கைது

இலஞ்சம் பெற்ற குற் பாறுக் ஷிஹான் அண்மையில் கைதான போதைப்பொருள் சந்தேகநபர் ஒருவரை சட்ட நடவடிக்கைகளில் இருந்து விடுவிப்பதற்கு உதவ நடவடிக்கை எடுப்பதாகக் கூறி 20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவரும், சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி தற்போது பெரிய நீலாவணை […]
22ஆவது திருத்தச் சட்டமூலம் சர்ச்சைகளுக்கு மத்தியில் சமர்ப்பிப்பு

பரபரப்புகளின் மையமாக உள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) சமர்ப்பிக்கப்பட்டது. இது நிறைவேற்றப்பட்டால், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வூதிய வயது 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வூதிய வயது 65 ஆகவும் நீடிக்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சட்டமூலத்தின் மூலம் பிரதம நீதியரசரின் ஓய்வூதியக் காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. “பிரதம நீதியரசரின் ஓய்வூதியக் காலம் என்பது அவர் அறுபத்தேழு வயதை எட்டும் திகதியாகும் அல்லது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து ஆறு […]
முப்படையினரை ஒன்றிணைத்து தேசிய மையத்தை நிறுவுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

தற்போது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் கீழ் இயங்கும் அனைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் ஒன்றிணைத்து தேசிய மையமொன்றை நிறுவுவதன் மூலம், அந்தப் பணிகளின் செயல்திறனையும் பயனுள்ள தன்மையையும் அதிகரிப்பதன் ஊடாக எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு அமைச்சு தொடர்பான 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் நேற்று (17) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் […]
மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் , இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால்கைது செய்யப்பட்டுள்ளார். மீன்பிடி கூட்டுத்தாபனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தி, ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபடுத்தியமை தொடர்பிலேயே முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டின் சட்டங்களை திருத்துவதற்கு அரசாங்கத்திற்கு இறைமையுள்ளது -நீதியமைச்சர்

மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப நாட்டின் சட்டங்களை திருத்துவதற்கான இறைமை அரசாங்கத்திற்குள்ளது என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.அவர்மேலும் குறிப்பிட்டதாவது நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் 22வது திருத்தம் குறித்து எந்த சர்வதேச அமைப்பும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை. புதிய சட்டமூலம் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஐநாவின் பிரதிநிதிக்கு விரைவில் விளக்கமளிப்பார் என அமைச்சர் தெரிவித்தார்.
சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திஹ காரியவசம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். புதிய தலைவராக சுரன்ஜித் வேவவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக, புதிய ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை’ (Protecting the State from Terrorism Bill) அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புத் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் உள்ள தற்போதைய சட்டக் கட்டமைப்பை மாற்றுவதற்கும், அதில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் இந்த புதிய சட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்திற்கான […]
நீதிமன்றம் எனக்கு சிறைத்தண்டனை விதிக்கும் என்பது அமைச்சர்களுக்கு எப்படி தெரியும் – நாமல் கேள்வி

நீதிமன்றம் தீர்ப்பைவழங்குவதற்கு முன்னரே எனக்கு சிறைத்தண்டனை கிடைக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுபபினர்கள் எவ்வாறு எதிர்வுகூறுகின்றனர் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கையுள்ளது நீதிமன்றத்தின் எந்த தீர்ப்பையும் நான் மதிப்பேன் ஏற்றுக்கொள்வேன். நீதிபதிகள் வழக்கை விசாரணை செய்யவேண்டும் ஆதாரங்களை ஆராயவேண்டும் தீர்ப்பை வழங்கவேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பு இவ்வாறுதான் அமையும் என அமைச்சர்கள் முன்கூட்டியே தெரிவித்தால் அதனால்நீதித்துறை மீது மக்களிற்கு […]
கெஹலிய கைது; அகிலவுக்குப் பிணை

விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய வழக்கில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுல் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் இருவரும் கொழும்பு நீதவான் அஸங்க எஸ். போதரகமவினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சந்தேகநபரும் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்படுமாறு நீதவான் […]