டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்களாதேஷ் மாபெரும் வெற்றி

ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், பங்களாதேஷ் அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த அபார வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி 66.67 சதவீத புள்ளிகளுடன் (PCT) WTC பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டார்வினில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறியது. […]

மெஸ்ஸி கால்பந்து பயணத்தைத் தொடர்வது குறித்து…

தனது தந்தை காலமானதைத் தொடர்ந்து, தனது கால்பந்து பயணத்தைத் தொடர்வது குறித்துப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக ஆர்ஜென்டீனா நட்சத்திர வீரர் லியனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். “நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை; எப்படி முன்னோக்கிச் செல்வது என்றும் புரியவில்லை. நான் கால்பந்து மட்டுமே விளையாடினேன், இப்போது இன்னும் எவ்வளவு காலம் அதைத் தொடர்ந்து செய்வேன் என்பதில் பல சந்தேகங்கள் உள்ளன” என்று 39 வயதான மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் அஞ்சலிப் பதிவில் உருக்கமாக […]

ஷிரான் பேசிக் கைது: கொழும்பு சொத்துக்கள் குறித்து பல முனை விசாரணை!

துபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டதைத் தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தல் மன்னனான ஷிரான் பேசிக்கின் உள்நாட்டுச் சொத்துக்கள் மற்றும் குற்றவியல் தொடர்புகள் குறித்து இலங்கை பொலிஸார் பல வழிகளில் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். தெஹிவளை, களுபோவிலையைச் சேர்ந்த 48 வயதான பேசிக், இன்டர்போல் (Interpol) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவராவார். சமீபத்திய ஈரான்-அமெரிக்க மோதலின் போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ஈரானிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள்/வீடியோக்கள் இவரது தொலைபேசியில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஐக்கிய அரபு […]

தேசத்தின் மனநிலை: அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50 சதவீதமாக வீழ்ச்சி!

வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நிறுவனம் நடாத்திய Gallup பாணியிலான தேசத்தின் மனநிலை (Mood of the Nation) பற்றிய ஒட்டுமொத்த ஜூலை 2026 கருத்துக்கணிப்பில், அரசாங்கத்தின் மீதான மக்களின் அங்கீகாரம் (Government approval rating) 50% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த பிப்ரவரி 2026 இல் பெறப்பட்ட தேர்தல் வெற்றிக்கு பின்னரான உச்ச நிலையான 65% உடன் ஒப்பிடுகையில் ஒரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.கருத்துக்கணிப்பு பங்குதாரராக வான்கார்ட் சர்வே (பிரைவேட்) லிமிடெட் (Vanguard Survey (Pvt) Ltd.) […]

ஒன்டாரியோ ‘தரவு மைய வழிகாட்டி சட்டத்தை’ (Data Centre Playbook) அறிமுகப்படுத்துகிறது

. குயல்ஃப் (GUELPH) — ஒன்டாரியோ அரசு  தனது ‘டேட்டா சென்டர் பிளேபுக்’ (Data Centre Playbook) சட்டத்திற்கான கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. இது பொருளாதார வளர்ச்சியை தூண்டும் வகையில் மிகச்சிறந்த தரவு மைய (Data Centre) முதலீடுகளை ஈர்க்கவும், கனடாவாசிகளின் தரவுகள் கனடாவிற்குள்ளேயே இருப்பதை உறுதிசெய்யவும், உள்ளூர் சமூகங்களுக்கு குறிப்பிடத்தக்க மற்றும் அர்த்தமுள்ள நன்மைகளை வழங்கவும் மாகாணத்திற்கு உதவும். அரசாங்கம் முதலீடுகளை ஈர்ப்பதற்கு நிதியல்லாத உதவிகளை மட்டுமே வழங்கும் வேளையில், தரவு மையங்கள் மின்சாரத்தின் முழுச் செலவையும் […]

“அடுத்த 5 ஆண்டுகளில் முதன்மை மாநிலமாகும் தமிழ்நாடு!” – அமைச்சர் ரமேஷ் உறுதி; இபிஎஸ் விமர்சனத்திற்கு ஆவேசப் பதிலடி!

திருச்சி இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் 75-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உருவெடுப்பது உறுதி எனத் தெரிவித்துள்ளார். “100 நாட்களில் லஞ்சம், ஊழல் பெருமளவில் குறைப்பு”: திருச்சியில் நடைபெற்ற விழாவிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “தவெக ஆட்சியில் கடந்த 100 நாட்களில் அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, அனைத்து அரசுத் துறைகளிலும் லஞ்சம் […]

“கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை!” – வனத்துறையினரின் கொடூரச் செயலுக்கு முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் வனப்பகுதியில் 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர சம்பவத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வனப்பகுதியில் நடந்த கொடூரம்: கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா மரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அதிகாலை காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதிக்குள் சென்றிருந்தனர். அவர்களை வேட்டையாட வந்தவர்கள் […]

“தமிழ்நாட்டில் அரிசி தட்டுப்பாட்டுக்கே இடமில்லை!” – 5% ஜி.எஸ்.டி-யை ரத்து செய்ய நெல் அரிசி வணிகர்கள் சங்கம் அதிரடி கோரிக்கை!

தேனி தமிழ்நாட்டில் அரிசி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் தலைவர் துளசிங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 5% ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்: தேனியில் நடைபெற்ற சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதலமைச்சர் விஜய் வேளாண் சார்ந்த தொழில்களுக்குப் பல சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். தற்போது 26 கிலோவிற்கு கீழ் உள்ள அரிசி விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள […]

“இன்று தொடங்குகிறது மானியக் கோரிக்கை விவாதம்!” – சட்டப்பேரவையில் 3 முக்கிய துறைகள் மீது அனல் பறக்கும் விவாதம்!

சென்னை தமிழ்நாடு சட்டப்பேரவையில் 4 நாட்கள் சுதந்திர தின விடுமுறைக்குப் பிறகு, இன்று (திங்கட்கிழமை) முதல் துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் தொடங்குகின்றன. முதல் நாளான இன்று 3 முக்கிய துறைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் பின்னணி: தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, கடந்த 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் 2026-2027 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து, இரு பட்ஜெட்டுகள் […]

இரண்டு தலை, எட்டு கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!

இந்தியாவில் இரண்டு தலை, எட்டு கால்களுடன் அதிசய கன்றுக்குட்டியொன்று பிறந்துள்ளமை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டத்தின் எருகலப்புடியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனை ஆசிரமத்தில் வளர்க்கப்படும் ஒரு பசுவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக நிர்வாகத்தினர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த மருத்துவர்கள், பிரசவத்தை முடிப்பதற்கு சுமார் ஐந்து மணிநேரம் கடுமையாக உழைத்தனர். இருப்பினும், கருப்பையிலிருந்து வெளிவந்த கன்றைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டனர். அந்தக் கன்று, இரண்டு தலை […]