விகாரை மரத்தில் தொங்கிய நிலையில் வெளிநாட்டவரின் சடலம்

திக்கோவிட்ட விகாரையில் 54 வயது ஸ்காட்லாந்து நாட்டவரின் சடலம் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மாத்தறை, திக்கோவிட்ட பலோல்பிட்டியாவில் உள்ள ஒரு விசாரையில், 54 வயதான ஸ்காட்லாந்து நாட்டவர் ஒருவர் வேப்பமரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு அருகில் ஒரு ஜோடி காலணிகள், ஒரு மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மற்றும் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளன. ஹம்பாந்தோட்டைக்கு புறப்படுவதற்கு முன்பு, அந்த நபர் வெலிகம, மிடிகமவில் உள்ள ஒரு சுற்றுலா […]

வியட்நாம் மங்கள விமானம் தரையிறங்கியது

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்துச் சேவைகளை ஆரம்பிக்கும் விதமாக, அந்நாட்டின் தேசிய விமான சேவையான “வியட்நாம் ஏர்லைன்ஸ்” (Vietnam Airlines) நிறுவனத்தின் முதலாவது மங்கள விமானம் (Inaugural Flight) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஓகஸ்ட் 16ஆம் திகதி இரவு வந்தடைந்தது. இவ்விமான சேவைக்காக ஏர்பஸ் ஏ-320 (Airbus A320) வகையைச் சேர்ந்த விமானம் பயன்படுத்தப்பட்டிருந்ததுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவ்விமானத்திற்கு நீராதார வரவேற்பு (Water Salute) வழங்கப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. […]

வறண்ட வானிலை; பட்டம் விடுவதால் ஆபத்து அதிகம்

லவும் வறண்ட வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலம் காரணமாக, தற்காலத்தில் குழந்தைகள் மத்தியில் பட்டம் விடும் வழக்கம் பிரபலமான பொழுதுபோக்காக மாறியுள்ளது. இதனால் அத்துடன் தொடர்புடைய அவசர விபத்துகளும் பெருமளவில் பதிவாகி வருவதால் பட்டம் விடும்போது முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதில் விசேட கவனம் செலுத்துமாறு லேடி ரிஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் (Lady Ridgeway Hospital) பதில் பணிப்பாளர், விசேட மருத்துவர் பிரதீப் ரத்நாயக்க வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார். பட்டம் விடுவது கேளிக்கையான ஒரு செயற்பாடாக […]

இத்தாலியில் 770 கோடி பெறுமதியான 4 ஓவியங்கள் கொள்ளை

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் கடந்த ஞாயிறு அன்று திருடப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தில் பாதுகாவலர்கள் இருந்தபோதும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அலார அமைப்புகளை முறியடித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பாதுகாக்கப்பட்ட கண்ணாடி பெட்டியை உடைத்து குறித்த 4 ஓவியங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தப்பியோடும் அவசரத்தில் 2 ஓவியங்களை அங்கேயே போட்டு விட்டுச் சென்றுள்ளனர். இந்த ஓவியங்களின் […]

கல்முனை ஆதார வைத்தியசாலை உடை சர்ச்சை; கவன ஈர்ப்புப் போராட்டம்!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உடை விவகாரத்தினை பூதாகரமாக்கி வைத்தியசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இனரீதியான பிரசாரத்தினை கண்டித்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் கவனஈர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில், சிற்றூழியர்களின் சீருடை அணியாமல் மதசார்பு ஆடை அணிந்து வருகை தரும் புதிய நியமனம் பெற்ற 9 பேரின் சீருடை அவமதிப்பை எதிர்த்து இன்று (17) இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கை 6 தொழில் சங்கங்களின் ஆதரவுடன் அமைதியாக சிற்றூழியர்களின் சங்கத்தினரால் நடாத்தப்பட்டுள்ளது. […]

பொருட்கள் இறக்குமதி இன்றி 1 பில்லியன் டொலர் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது!

இலங்கைக்கு எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல், கொழும்பு கோட்டையைச் சேர்ந்த பணமாற்று முகவர் ஒருவர் மூலம் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் 4 தனியார் வர்த்தக வங்கிகளின் முகாமையாளர்கள் 4 பேர் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நான்கு வங்கி முகாமையாளர்களும் அவரவர் பணிபுரிந்த தனியார் வங்கிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இவ்வாறானதொரு சம்பவத்திற்காக வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது […]

ஐரோப்பாவின் மிக உயரமான புனித மரியாள் சிலை போலந்தில் திறப்பு

ஐரோப்பாவிலேயே மிக உயரமானது எனக் கருதப்படும் புனித கன்னி மரியாவின் Virgin Mary பிரம்மாண்ட சிலை ஒன்று, போலந்தின் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்புத் தலைவரான லேக் வலேசா (Lech Walesa) முன்னிலையில் சனிக்கிழமையன்று ஒரு சிறிய போலந்து கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. மத்திய போலந்தில் அமைந்துள்ள, 150-க்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட கோனோடோபி (Konotopie) கிராமத்தில், 55.6 மீட்டர் (182 அடி) உயரத்தில் கம்பீரமாக நிற்கும் இந்த நினைவிடத்தின் புனிதப்படுத்தும் விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

மிலனிடம் தோற்ற யுனைட்டெட்

போலந்தில் சனிக்கிழமை நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனுடனான சிநேகபூர்வ போட்டியில் 2-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது. யுனைட்டெட் சார்பாக ஹரி மக்குவாயா, பற்றிக் டோர்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மிலன் சார்பாக சாமுவேல் சுக்வுஸேம், அல்பஜோ சிஸே, கொன்கலோ றாமோஸ், ருபென் லொஃப்டஸ்-சீக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற ஜேர்மனிய புண்டெஸ்லிகா கழகமான […]

பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் படுகொலை: பிள்ளையானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் இரவீந்திரநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட நால்வருக்கு எதிராக சட்டமா அதிபரினால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பிள்ளையானைத் தவிர கதிர்காத்தம்பி ஜெயகிஷன் (ஜெயந்தன்), நிமால் தேவ்சுகன் (ஜெயகாந்தன்) மற்றும் நடராசா நாகுலேந்திரன் (சிம்பு அல்லது நாகுலன்) ஆகியோரே ஏனைய பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் […]

ஸ்பென்ஸைக் கைச்சாத்திட்ட இன்டர்

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரிலிருந்து 2031ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி வரையிலான ஒப்பந்தமொன்றில் பின்களவீரரான ஜெட் ஸ்பென்ஸை இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் கைச்சாத்திட்டுள்ளதாக இன்டர் சனிக்கிழமை (15) அறிவித்துள்ளது. டொட்டென்ஹாமுக்கு 26 வயதான ஸ்பென்ஸுக்காக 30 மில்லியன் யூரோக்களை இன்டர் செலுத்தியதாகக் கூறப்படுகின்றது.