போலந்தில் சனிக்கிழமை நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனுடனான சிநேகபூர்வ போட்டியில் 2-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது.
யுனைட்டெட் சார்பாக ஹரி மக்குவாயா, பற்றிக் டோர்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மிலன் சார்பாக சாமுவேல் சுக்வுஸேம், அல்பஜோ சிஸே, கொன்கலோ றாமோஸ், ருபென் லொஃப்டஸ்-சீக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற ஜேர்மனிய புண்டெஸ்லிகா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்குடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பயேர்ண் மியூனிச் வென்றது.