அமெரிக்கா – தென் கொரியா போர்ப் பயிற்சி வட கொரியா பதிலடி!

1953-ஆம் ஆண்டு கொரியப் போருக்குப் பின் தென் கொரியா, வட கொரியாவில் துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்திருக்கலாம். ஆனால், இன்னும் மோதல் முடியவில்லை. கடந்த 75 ஆண்டுகளாகத் தணியாத அந்தப் பகை நெருப்பின் புதிய அத்தியாயமாகவே, அமெரிக்கா – தென் கொரியக் கூட்டுப் பயிற்சிக்கு முன் வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியுள்ளது. பொருளாதாரத் தடைகள், உலக நாடுகளின் தனிமைப்படுத்தல், ஐ.நா-வின் தடைகள், கடும் உணவுத் தட்டுப்பாடு… இவை எதுவுமே வட கொரியாவின் ஏவுகணைச் சோதனைகளை தடுத்து நிறுத்தவில்லை. […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்துகளில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தனித்தனி மோட்டார் சைக்கிள் விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காலி, அம்பலன்வத்தை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் துவிச்சக்கர வண்டி ஓட்டுநரும் படுகாயமடைந்த நிலையில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், தீவிர சிகிச்சை பலனின்றி துவிச்சக்கர வண்டி ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அம்பலன்வத்தை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். […]
அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து வீழ்ந்த சிறுவன் பலி
கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 12 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த சிறுவன் 14 மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் இணைந்து சுற்றியுள்ள காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு கீழே விழுந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக […]
பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும். அதேநேரம் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோமீற்றர் […]