சிலாபத்தில் கரையொதுங்கிய இந்தியப் படகு?

இந்தியாவிற்குச் சொந்தமானது எனச் சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகையொன்று இன்று (15) அதிகாலை சிலாபம் இரணைவில பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த படகு பாறைகளில் மோதாமல் கரை ஒதுங்கியுள்ளதால், அதிலிருந்து யாராவது வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர். இலங்கை கடற்படையினர் இந்தப் படகு தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தற்போது அதற்குப் பாதுகாப்பும் அளித்துள்ளனர்.

தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த மறுத்த பெக்கோ சமன்!

வெலிசறை அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க, தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்துவதை மறுத்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை. இவரது தாய் கடந்த 12 ஆம் திகதி இரவு மித்தெனிய பகுதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரியொருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கரந்தெனிய சுத்த என்பவரால் இந்தக்கொலை வழிநடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவதுடன், கணேமுல்ல சஞ்சீ​வவின் கொலைக்குப் பழிவாங்கும் செயலாகவே இது நடந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின. […]

உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக இந்த ஆண்டில் 100க்கும் மேற்பட்ட வருமானம் ஈட்டும் திட்டங்கள்!

இந்த ஆண்டில் நாடு முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வருமானம் ஈட்டும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சச்சு தெரிவித்துள்ளது. இதற்கான தொடக்க விழாக்கள் நேற்று(14) நாடு முழுவதும் இடம்பெற்றதாக அவ்வமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, புத்தளம் மாவட்ட தொடக்க விழா பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில் நடைபெற்றது. ஹம்பாந்தோட்டை திட்டத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி […]

“டாஸ்மாக் முறைகேடு வழக்கு!” – ரமேஷ் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை ஐகோர்ட் அதிரடி!

சென்னை டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில், ரமேஷ் என்பவர் மீதான விசாரணைக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு மற்றும் ரமேஷ் கைது: டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது மற்றும் மதுபானங்களைக் கொண்டு செல்ல போக்குவரத்து டெண்டர் விட்டதில் மாபெரும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப் பதிவு […]

“லஞ்சம், ஊழலில் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றுவதே மிகப்பெரிய சுதந்திரம்!” – கோட்டையில் முதன்முறையாக கொடியேற்றி முதல்வர் விஜய் முழக்கம்!

சென்னை இந்தியத் திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், தனது வாழ்நாளில் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பிரம்மாண்டமான சிறப்புரையாற்றினார். **கோட்டையில் முதல்வர் குடும்பத்தினர் மற்றும் த்ரிஷா:** சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காலை 7:45 மணியளவில் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய், காவல்துறையின் பிரம்மாண்ட மோட்டார் சைக்கிள் அணிவகுப்புடன் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். […]

8 இலட்சம் பெறுமதியான பாடநூல்கள் பழைய காகிதக் கடைக்கு விற்பனை: இருவர் கைது!

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வழங்கி வைக்கப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பாடநூல் தொகுதியை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி, அந்தப் புத்தகங்களை பழைய காகிதக் கடைக்காரர் ஒருவருக்கு விற்று 47,000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக தலங்கம பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கிழக்கு மாகாண மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வெளியிடப்பட்ட 19,892 பாடநூல்களை கொண்டு செல்வதற்காக கல்வி […]

மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் வீதியில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்தமையினால் அவ்வீதியூடான வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சாரதிகளை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம்…

டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபருடன் சேர்ந்து மேலும் இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களும் விசாரணைக்காக அந்தப் பணியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (14) இரவு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தெஹிவளை, களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக் சர்வதேச பொலிஸாரினால் […]

இன்று இலங்கை – இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி

சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி இன்று காலை 10.00 மணிக்கு காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் தனஞ்சயடி சில்வா தலைமையிலான இலங்கை அணியும், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும் மோதவுள்ளன. இந்த தொடர் உலக டெஸ்ட் செம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 48.15 […]

பாரசீக வளைகுடாவில் பெரும் எண்ணெய்க் கசிவு?

பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீடித்து வரும் மோதல்கள் காரணமாகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கடலில் பெரும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது. ஈரானின் கெஷ்ம் மற்றும் சிரி தீவுகளுக்கு அருகே செயற்கைக்கோள் படங்களின் மூலம் இரு பெரிய எண்ணெய் படலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. லைபீரியக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதே கெஷ்ம் தீவு அருகே ஏற்பட்ட எண்ணெய்க் கசிவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. மற்றொருபுறம் ஓமன் கடற்பகுதியில் ரஷ்ய […]