பொலிஸ் அதிகாரி ஒருவர் அடித்துக் கொலை

பொல்லினால் நடத்தப்பட்ட தாக்குதலால் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 25ஆம் திகதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த குறித்த அதிகாரி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில்  உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வெல்லவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 54 வயதுடைய அதிகாரி என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சிகரெட்டுகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக தமிழகம் தங்கச்சிமடத்துக்கு கொண்டு வரப்பட்ட 10 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான 40 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக மதுரையிலிருந்து 200 பெட்டிகளில் தங்கச்சிமடத்துக்கு அனுப்பப்பட்ட 40 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்க நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (14) பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் இராமேஸ்வரம் சுங்கத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பறிமுதல் […]

இணக்க சபைகளால் ஆண்டுதோறும் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் தீர்வு

வருடாந்தம் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் இணக்க சபைகளால் தீர்த்து வைக்கப்படுவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய இணக்க தின விழா நிகழ்வில் நேற்று (14) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டை இணக்க செயலாக்கத்திற்கு ஒரு விசேட ஆண்டாகக் குறிப்பிட முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இணக்க சபை ஆணைக்குழுவிற்காக 800 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான […]

இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல தொடர் நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று (15) அதிகாலை 3.28 மணியளவில் ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரிக்டர் அளவில் 5.9, […]

ஆகஸ்ட் 30: சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழில் மாநாடு!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் பொதுக் கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது. எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், மாநாட்டுக்கான பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள், […]

“அடுத்த ஓராண்டுக்குள் BSNL 5G சேவை!” – வெறும் ரூ.1க்கு புதிய ரீசார்ஜ் திட்டத்துடன் அதிரடி அறிவிப்பு!

சென்னை தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் பி.எஸ்.என்.எல். 5ஜி (BSNL 5G) சேவை அறிமுகப்படுத்தப்படும் என சென்னை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் சுதாகரராவ் அதிரடியாக அறிவித்துள்ளார். வெறும் 1 ரூபாய்க்கு ப்ரீபெய்டு சேவை: 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் வெறும் ரூ.1-க்கு புதிய ப்ரீபெய்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் புதிய இலவச சிம் கார்டுடன், 24 நாட்கள் வேலிடிட்டி, வரம்பற்ற அழைப்புகள், 1 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 SMS ஆகியவை […]

“கோட்டையில் முதலமைச்சர் விஜய் கொடியேற்றம்!” – சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சல்யூட் அடித்த த்ரிஷா!

சென்னை நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தவெக அரசின் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் அவரது பெற்றோர் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். கோலாகல வரவேற்பும் கொடியேற்றமும்: இன்று காலை சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய்க்கு, மெரீனா உழைப்பாளர் சிலை அருகே காவல்துறையினரின் பிரம்மாண்ட மோட்டார் […]

“10,000 பேருக்கு இலவச சிகிச்சை!” – சுதந்திர தின விழாவில் ஏ.பி.ஜே அப்துல் கலாம் விருது பெற்ற டாக்டர் வி.மோகன்! முதல்வர் விஜய் வழங்கி கௌரவிப்பு!

சென்னை இந்தியத் திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சர்க்கரை நோயியல் துறை சிறப்பு நிபுணர் டாக்டர் வி.மோகனுக்கு ‘டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்’ விருதை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வழங்கி கௌரவித்தார். சுதந்திர தின விருதுகள் – முழு விவரம்: கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக் கொடியேற்றி உரையாற்றிய முதலமைச்சர் விஜய், […]

தமிழர் இனப்படுகொலையின் தீவிரத்தை செம்மணி அகழ்வுகள் உலகிற்கு உணர்த்தும்!

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகள் இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் தீவிரத்தை சர்வதேச சமூகத்திற்கு உணர்த்துவதுடன், தமிழர் தாயக மக்களை அரசியல் நீதிக்கான மக்கள் சக்தியாக உருவெடுக்கச் செய்துள்ளதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை (15) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் சமூக புதைகுழி வரலாற்றில் செம்மணி […]

பொதுப் பேருந்து நிறுத்தங்களை மறித்து வாகனங்களை நிறுத்தினால் சட்ட நடவடிக்கை

பொதுப் போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தும் இடங்களை மறைக்கும் வகையில் ஏனைய வாகனங்களை நிறுத்துவதற்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து நிறுத்தங்களில் ஏனைய வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகளை வீதியின் நடுவே நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுவதுடன், இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையும் உருவாவதாக பொலிஸார் கூறுகின்றனர். அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பொலிஸார், தற்போது மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகள் மூலம் பயணம் செய்யக்கூடிய பேருந்து சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், […]