இலங்கைக்கு சுனாமி ஆபத்து?

இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று அதிகாலை (15) 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரிக்டர் அளவில் 5.9, 5.6 மற்றும் 6.1 ஆகிய அளவுகளில் 3 தொடர் நில நடுக்கங்களும் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அந்நாட்டின் தேசிய புவியியல் நிலையம் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது. சுனாமி எச்சரிக்கை அறிவிப்பின் மூலம், கடலோரப் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைகளை விட்டு […]
இலங்கைக்கு மீண்டும் ஏற்பட்டுள்ள நெருக்கடி
நடுத்தர காலத்தில் பொருளாதார கண்ணோட்டத்தில் அதிக நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புவிசார் அரசியல் போக்குகளின் தாக்கம், மாறிவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சூழல்கள், அத்துடன் காலநிலை அபாயங்கள் ஆகியவையே இந்த அதிக நிச்சயமற்ற தன்மைக்குக் காரணங்கள் என்றும் மத்திய வங்கி கூறுகின்றது. வியாழக்கிழமை இரவு இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட சமீபத்திய நாணயக்கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் நெருக்கடிகள், உலகளாவிய எரிசக்தி சந்தைகள், […]
திருகோணமலை மீனவர்களுக்கு 19 மீன்பிடிப் படகுகள் வழங்கி வைப்பு!

கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், 1.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் 19 மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இயந்திர மீன்பிடிப் படகுகள் வழங்கி வைத்தார். […]
கோர விபத்தில் பாட்டியும் பேரனும் உயிரிழப்பு

வெயங்கொடை, மகலேகொட – நைவல வீதியில் வேன் ஒன்று மின்கம்பத்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் வேனின் சாரதியாக செயற்பட்ட வெயங்கொடை, ஹீந்தெனிய பகுதியைச் சேர்ந்த நவோத் சதுரங்க என்ற 21 வயதுடைய இளைஞரும், அவரது 80 வயதுடைய பாட்டியுமாவர். மூத்த சகோதரியின் திருமண விழா முடிந்து வெயங்கொடை, ஹீந்தெனிய பகுதியில் அமைந்துள்ள தங்களது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது. மணப்பெண்ணின் சகோதரர் வேனை ஓட்டிச் சென்றுள்ளதுடன், அதில் தாய், தந்தை […]
சிறுமியை பாழடைந்த இடத்தில் கைவிட்டுச் சென்ற சந்தேகநபர்கள் கைது

கொடூரமாகத் தாக்கப்பட்டு, பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது சிறுமியின் சம்பவத்துடன் தொடர்புடைய ஆண் சந்தேகநபர் ஒருவரையும் பெண் சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (14) முற்பகல் ஹாலிஎல பகுதியில் வைத்து வத்தேகம பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண் சந்தேகநபர், குறித்த சிறுமியின் தாய் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். வத்தேகம யடிராவண வீதியிலுள்ள பாழடைந்த பகுதியொன்றில் சிறுமி இருந்த நிலையில், அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த […]
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் கங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது அதிகரிக்கக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிப்பதுடன், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீன்பிடி மற்றும் […]
“நீதியின் ஓலம் – 2”

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டி, “நீதியின் ஓலம் – 2” நிகழ்வுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வை தாயகச் செயலணி ஏற்பாடு செய்துள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும், தமிழ் இனவழிப்பை வெளிப்படுத்தும் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் ஒழுங்கமைக்கப்பட்டு, தாயகச் செயலணி உறுப்பினர்களால் இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.