“100 நாளில் 1 லட்சம் கோடி முதலீடு!” – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

சென்னை சென்னையில் இன்று நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு 2026’ முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 மாபெரும் தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் 1,06,998 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. 100 நாட்களில் 1 லட்சம் கோடி சாதனை: தவெக அரசு பொறுப்பேற்று 96 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடியைத் தாண்டியுள்ளது. இதன் […]
“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்!” – நடிகர் தனுஷ் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் சம்பத்குமார் அதிரடி!

கோவை நடிகர் தனுஷ் ரசிகர் மன்றத்தினர் தொகுதி வாரியாக உறுப்பினர்களைச் சேர்த்து வரும் நிலையில், அவரது அரசியல் பயணம் குறித்த கேள்விக்குத் தமிழ்நாட்டின் அமைச்சரும், கோவை வடக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ.வுமான சம்பத்குமார் அதிரடியாகப் பதிலளித்துள்ளார். தனுஷின் அரசியல் பயணம் குறித்துக் கேள்வி: கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சம்பத்குமாரிடம், “கோவை மாவட்டத்தில் நடிகர் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் தொகுதி வாரியாக உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் விஜய் அவர்களின் […]
முதல்வர் விஜய்க்கு ரூ.5 கோடியில் புதிய அதிநவீன அலுவலகம்! 50 ஆண்டுகால வரலாற்றை மாற்றிய அதிரடி முடிவு!

சென்னை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்குப் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் புதிய அதிநவீன அலுவலகம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்காகத் தமிழக அரசு ரூ.5.54 கோடிக்கு டெண்டர் கோரியுள்ளது. 50 ஆண்டுகால வரலாறு மாற்றம்: புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள பாரம்பரியத் தலைமைச் செயலகக் கட்டிடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, […]
கவாஸ்கர் இந்திய அணிக்கு எச்சரிக்கை!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறவுள்ள தீர்மானமிக்க இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இலங்கை அணியைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சொந்த மண்ணில் இலங்கை அணி மிகவும் பலமிக்க எதிரணியாக விளங்குவதால் இந்தத் தொடர் இலகுவானதாக இருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஓகஸ்ட் 15 ஆம் திகதி தொடங்கவுள்ள இந்தத் தொடர், உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் […]
இரட்டைக் குழந்தைகளின் எலும்புக் கூட்டுத் தொகுதி அடையாளம்!

ம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 51 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று வியாழக்கிழமை (13.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது இரட்டைக் குழந்தைகளின் எலும்புக் கூட்டுத் தொகுதிகள் உட்பட எட்டு மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

2026 ஜூலை மாதத்திற்கான பெறப்பட்ட பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரி செலுத்தத் தவறுதல் அல்லது தாமதித்து செலுத்துதலுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்தத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. காசோலை (Cheque), வங்கி வரைவோலை (Bank draft) அல்லது கொடுப்பனவு உத்தரவு (Payment order) மூலம் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவு குறிப்பிட்ட திகதிக்குப் பின்னர் கிடைப்பதும் தாமதமான கொடுப்பனவாகவே கருதப்படும். அத்துடன், ஜூலை […]
மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குபட்ட மஞ்சநாதொடுவாய் வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மஞ்சந்தொடுவாய் மஜீத் வீதியிலுள்ள வீடொன்றில் தூங்கிக்கொண்டிருந்த 49 வயதுடைய திருமணமாகாத ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த இடத்திற்கு விஜயம் செய்த பதில் திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர்.மகேந்திரன் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார். குறித்த சடலத்தின் அருகே தூக்கு கயிறு காணப்பட்டதுடன், சடலத்தின் கழுத்தில் குறித்த […]
அல்லைப்பிட்டி தேவாலய படுகொலைகளின் 20 வருட நினைவு நாள்

2006 ஆகஸ்ட் 13 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரம். இன்றோடு 20 வருடங்கள் நிறைவடைகின்றன. யாழ்ப்பாண மாவட்டம், வேலணை தீவுக்கு அருகிலுள்ள அல்லைப்பிட்டி கிராமம். அங்குள்ள புனித அந்தோனியார் தேவாலயம். இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தினர் அல்லைப்பிட்டி பகுதியை நோக்கி பீரங்கி மற்றும் எறிகணை தாக்குதலை நடத்தினர். அந்த எறிகணைகளில் சில புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீதும், அதை சுற்றியுள்ள பொதுமக்கள் தங்கியிருந்த வீடுகள் மீதும் விழுந்தன. அந்த நேரத்தில் பல பொதுமக்கள் இடப்பெயர்வு காரணமாக தேவாலயத்திலும் அதை […]
செம்மணியில் புதிய பரிசோதனைக் குழிகள் தோண்டப்படவுள்ளன?

செம்மணி மனித புதைகுழியில் புதிய பரிசோதனைக் குழிகளை தோண்டுவது தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் இன்று(13.08.2026) மேற்கொள்ளப்பட்டன. அதாவது பரிசோதனைக் குழி -2 அமைந்துள்ள பகுதியிலிருந்து சித்துபாத்தி இந்து மயானத்தின் மதில்வரையான நீளம் மற்றும் அகலம் என்பன கணிப்பிடப்பட்டுள்ளன. அவற்றினை அடிப்படையாக கொண்டு நாளை மேலதிக பரிசோதனைக் குழிகளை தோண்டுவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும்.
பெக்கோ சமன் தாயார் படுகொலை, கணேமுல்ல சஞ்ஜீவ கொலையின் பழிவாங்கலா?

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டமையானது, கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பழிவாங்கும் செயலாக நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கரந்தெனிய சுத்தாவின் தரப்பினரால், கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் சந்தேகிக்கின்றனர். கெஹெல்பத்தர பத்மேவுடன் சேர்ந்து பெக்கோ சமனும் இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரும் கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் […]