திருடப்பட்ட ஈ-பைக் தொடர்பான கொள்ளை அழைப்புக்குச் சென்ற ரொறன்ரோ பொலிஸ் அதிகாரிமீது துப்பாக்கி சூடு

வியாழக்கிழமை அதிகாலை நகரத்தின் ‘சென். ஜேம்ஸ் டவுன்’ (St. James Town) பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பான அழைப்புக்குச் சென்ற ரொறன்ரோ பொலிஸ் அதிகாரி ஒருவர் சுடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, அதிகாலை 3:20 மணியளவில் திருடப்பட்ட ஈ-பைக் (e-bike) குறித்து விசாரிக்கப் பொலிஸார் அழைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ‘புளூர்’ (Bloor) மற்றும் ‘ஷெர்போர்ன்’ (Sherbourne) வீதிகள் சந்திக்கும் பகுதியில் சந்தேக நபரை அவர்கள் கண்டறிந்தனர். சந்தேக நபரால் அதிகாரி ஒருவர் சுடப்பட்டதாகவும், அவர் […]

மாற்றத்துக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்

தான் பெற்றுள்ள அதிகாரத்தை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். “எனது நிறைவேற்று அதிகாரத்தையோ அல்லது எங்களிடம் உள்ள அதிகாரத்தையோ அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு நாங்கள் பயன்படுத்த மாட்டோம். அடுத்ததாக உபுல் அவர்கள் குறிப்பிட்ட சவால், அதாவது இந்த அரசியலமைப்பு திருத்தங்கள் காரணமாக மற்றைய ஜனாதிபதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. உங்களுக்கும் […]

பல்வேறு நபர்களிடம் வீடு கட்டி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி

வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு நபர்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த நபரொருவர் மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மோசடி செய்த தொகை இரண்டுரை கோடி ரூபாய்க்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்கள் மூலம் வீடுகளைக் கட்டித் தருவதாகக் கூறி சந்தேகநபர் இந்த மோசடியைச் செய்துள்ளார். அவர் வீடுகளுக்கான பணத்தை தவணை முறையில் செலுத்த முடியும் எனக் கூறி இந்த மோசடியை செய்துள்ளமை முதற்கட்ட […]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 09 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்களும் படகொன்றும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். நேற்று (12) இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த 9 இந்திய மீனவர்களும் இவ்வாறு கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். குறித்த மீன்பிடிப் படகு சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, கடல் அடிவாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ‘அடிமடி வலை’ (Bottom Trawling) முறையைப் பயன்படுத்தி […]

இலங்கைப் பொருட்களுக்கு இந்தியாவில் வரி விலக்கு!

இலங்கையில் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளதாக தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் இலங்கையின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த வணிக விளக்கவுரை கூட்டம் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் […]

இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நீண்டகால திட்டமிடலை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் – ஆளுநர்!

நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களின் அடிப்படை நோக்கத்தையே பாதிக்கும் வகையிலான கருத்துக்களும் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறுகியகால தேவைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அல்லாது, அறிவியல் ஆதாரங்கள், நீண்டகால திட்டமிடல் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனை முன்னிறுத்திய பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் […]

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார். வாஷிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலகத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. புதிய தூதுவரை கொழும்பிற்கு வரவேற்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. அதன்படி, எரிக் மேயர் இலங்கைக்கான அமெரிக்கத்தூதராக கடமைகளை தொடங்க உள்ளார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்; விசேட கலந்துரையாடல்!

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சட்டத்தரணிகள் சங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளுக்கு இடையில் இன்று வியாழக்கிழமை (13) கொழும்பில் அமைந்துள்ள சட்டத்தரணிகள் சங்க காரியத்தில் நடைபெற்றது. தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் , முன்னிலை சோசலிசக் கட்சி, மக்கள் போராட்ட இயக்கம், சம உரிமை இயக்கம் உள்ளிட்ட வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

“அதிமுக போராட்டத்தில் பங்கேற்க முடியாது!” – எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிரடி கடிதம்! மீண்டும் வெடிக்கிறதா உள்கட்சி மோதல்?

சென்னை விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் மேகதாது விவகாரத்தில் த.வெ.க. அரசைக் கண்டித்து அதிமுக அறிவித்துள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், சொந்த மாவட்டத்தை விடுத்து வேறு மாவட்டங்களுக்குச் சென்று பங்கேற்க முடியாது என எஸ்.பி.வேலுமணி தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பதவி விவகாரத்தால் தொடரும் அதிருப்தி: சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கும் எஸ்.பி.வேலுமணி தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட உள்கட்சிப் பூசல் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பழைய பொறுப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என இரண்டு […]

ரூ.8 கோடியில் நேரு உள்விளையாட்டரங்கத்தில் புதிய செயற்கை இழை ஓடுதளம்! அமைச்சர் ஆதவ் அர்ஜூனா திறந்து வைத்தார்!

சென்னை சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்தில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளத்தைப் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று திறந்து வைத்தார். பன்னாட்டுத் தரத்தில் புதிய ஓடுதளம்: தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்குத் தேசிய மற்றும் பன்னாட்டுத் தரத்திற்கு இணையான பயிற்சி வசதிகள் கிடைக்கும் வகையில், இந்தத் தடகள ஓடுதளம் அதிநவீனச் செயற்கை இழை ஓடுதளமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் விரியும் விளையாட்டுத் திட்டங்கள்: விளையாட்டு உட்கட்டமைப்பை […]