தரவு பாதுகாப்பு அதிகாரசபையினால் புதிய சுற்றறிக்கை

தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஆயத்தங்களை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் புதிய சுற்றறிக்கை ஒன்றை தரவு பாதுகாப்பு அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அமைச்சகங்கள், அரசுத் துறைகள், மாகாண சபைகள், உள்ளாட்சி மன்றங்கள், அரசுப் கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரசு அதிகாரசபைகள் ஆகியவை இச்சட்டத்தை அமல்படுத்துவதற்குத் தயாராவதற்கான வழிகாட்டுதல்களை இச்சுற்றறிக்கை வழங்குகிறது. எதிர்வரும் காலத்தில் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்திற்கு இணங்குவதற்காக அரசுத் துறை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைப் […]
பேசாலை புதரில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, பேசாலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பேசாலை 8 ஆம் வட்டாரத்தில் உள்ள புதர் பகுதி ஒன்றிலிருந்து இன்று (7) மதியம் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள், உடனடியாக கிராம உத்தியோகத்தர் ஊடாக பேசாலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். தகவலறிந்த பேசாலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றியதுடன், மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் உயிரிழந்தவர் பேசாலை 8 ஆம் […]
இரத்மலானையில் வாள்கள், கத்திகள் மற்றும் கைக்குண்டுடன் 6 பேர் கைது

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைக்குண்டு ஆகியவற்றுடன் 6 சந்தேகநபர்களைக் கல்கிஸ்ஸ ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 8 கைப்பேசிகளும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. கல்கிஸ்ஸ பொலிஸாரின் விசேட மோட்டார் சைக்கிள் படையணியின் அதிகாரி ஒருவர் இரத்மலானை ஆதர் பிரதேச பகுதியில் 1,000 மில்லிகிராம் ‘ஐஸ்’ […]
மட்டக்களப்பு சிறைக்கும் பாதுகாப்பு

ட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே மோதல்கள் வெடித்துச் சிறைஉடைப்புச் சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவினர் சிறைச்சாலைச் சுற்றுவட்டார வீதிகளில் தொடர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சிறைஉடைப்புச் சம்பவத்தை அடுத்து, அங்கிருந்து கொண்டுவரப்பட்ட 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். […]
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது மாற்றம் : வர்த்தமானி அறிவிப்பு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டமூலத்தில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் (தலைமை நீதிபதி) 67 வயதை அடையும் நாளில் அல்லது அவர் பிரதம நீதியரசராகப் பதவியேற்ற நாளில் இருந்து 6 ஆண்டுகள் பூர்த்தியாகும் […]
கடந்த 6 நாட்களில் 3,175 டெங்கு நோயாளர்கள்

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்படி, இந்த ஆண்டில் இதுவரை 88,522 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போது வரை நாடு முழுவதும் டெங்கு நோயினால் 63 பேர் உயிரிழந்துள்ளதுடன், மரண வீதம் 0.07% ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மட்டும் 3,175 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. மொத்த நோயாளர்களில் 52.96% (46,885 பேர்) […]
நாட்டின் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்கு கொலை மிரட்டல் ; ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சிறைக்கைதிகள் நாட்டின் சட்டரீதியான பராமரிப்பில் உள்ளவர்கள் என்பதால், அவர்களின் பாதுகாப்புக்கு முழுமையான பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். அண்மைக் காலத்தில் நீர்கொழும்பு […]
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஏன் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை?
சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விசாரிக்கிறார்கள் ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஏன் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார். 27(2) நிலையியற் கட்டளையின் கீழ், இனப்படுகொலைகள், வலுக்கட்டாயக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் ஆயுத மோதல்களின் போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரிடம் இந்த கேள்விகளை அவர் […]
மூதூர் படுகொலைகள் நினைவுகூரலால் குறிக்கப்படும் மற்றொரு சம்பவமாக மாறிவிடக்கூடாது !

மூதூர் படுகொலைகளின் 20ஆவது ஆண்டு நிறைவு என்பது வெறுமனே நினைவுகூரலால் மாத்திரம் குறிக்கப்படும் மற்றொரு சம்பவமாக மாறிவிடக்கூடாது. மாறாக இது சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை என்பதையும், சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள் மற்றும் மிக மோசமான மனித உரிமைமீறல்களில் ஈடுபடுவோர் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியாது என்பதையும் இலங்கை அரசாங்கம் நிரூபிக்கும் சம்பவமாக அமையவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்திருந்த வேளையில், 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் […]