அமெரிக்காவில் மிரட்டிய பிரக்ஞானந்தா! செஸ் சாம்பியன் பட்டம் வென்றதற்கு முதலமைச்சர் விஜய் மாஸ் வாழ்த்து!

சென்னை அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் (2026 Saint Louis Rapid & Blitz) செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டின் இளம் செஸ் புயல் பிரக்ஞானந்தா! இந்த மாபெரும் வெற்றியைப் பாராட்டித் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது ‘எக்ஸ்’ (X) வலைத்தளப் பக்கத்தில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள தனது சிறப்பு வாழ்த்துப் பதிவில், “உலகின் முன்னணி செஸ் வீரர்கள் […]

நெசவாளர்களுக்கு முதலமைச்சர் விஜய்யின் மாஸ் அறிவிப்பு! “வெற்றித் தறி” மின்-வணிகத்தளம் அதிரடி தொடக்கம்!

சென்னை சென்னையில் நடைபெற்ற 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், நெசவாளர்களின் நலன் காக்கும் வகையில் மாபெரும் “வெற்றித் தறி” மின்-வணிகத்தளம் மற்றும் HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சியை அதிரடியாகத் தொடங்கி வைத்துள்ளார்! மேலும், சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கான விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்துள்ளார். HANDTEX 2026 மாபெரும் கைத்தறிக் கண்காட்சி: 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ல் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில், தேசிய கைத்தறி தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. […]

ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு கட்டாயம்! சார் பதிவாளர் அலுவலகம் செல்லத் தேவையில்லை: தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

சென்னை தமிழகத்தில் பத்திரப்பதிவுப் பணிகளைப் பொதுமக்களுக்கு மேலும் எளிமையாக்கும் வகையில் ‘ஸ்டார் 3.0’ (Star 3.0) என்ற புதிய அதிநவீன மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய திட்டங்களில் வீடு மற்றும் மனை வாங்குவோர், இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் அலைந்து திரியாமலேயே பத்திரப்பதிவு செய்து கொள்ளும் அதிரடி வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் கட்டுமான நிறுவனங்களுக்கு மிக முக்கியக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “புதிய திட்டங்களில் […]

சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக 15 நீதிபதிகள் அதிரடி நியமனம்! குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு!

சென்னை சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக 15 நீதிபதிகளை நியமித்துக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்! இதன் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாகக் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில், மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் 19 பேரின் பெயர்களைப் பரிந்துரை செய்திருந்தது. இதனை ஆய்வு செய்த உச்ச நீதிமன்ற கொலீஜியம், மத்திய சட்டத்துறைக்குப் பரிந்துரை செய்தது. […]

தமிழக மாணவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி! 700 எம்பிபிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்றம்! முழு விவரம்!

சென்னை தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறியுள்ளதால், மாநில மாணவர்களுக்கான 700 எம்பிபிஎஸ் (MBBS) இடங்கள் அதிரடியாக அகில இந்திய ஒதுக்கீட்டிற்குச் சென்றுள்ளது தமிழக கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் பிஎஸ்சி நர்சிங் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு அடிப்படையிலான முதல் சுற்றுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 04-ஆம் […]

“காவிரி இணைப்புத் திட்டத்திற்கு ரஜினி சொன்னதை நிச்சயம் செய்வார்!” – லதா ரஜினிகாந்த் அதிரடி உறுதி!

சென்னை காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் எந்த நிமிடத்தில் தொடங்கப்பட்டாலும், நடிகர் ரஜினிகாந்த் தான் ஏற்கனவே அறிவித்தபடி நிச்சயம் அதற்கான நிதியுதவியை வழங்குவார் என அவரது மனைவியும் ‘ஸ்ரீ தயா’ அறக்கட்டளையின் தலைவருமான லதா ரஜினிகாந்த் மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்! சென்னை சேத்துப்பட்டில் உள்ள மலையாளி கிளப்பில் ‘மக்கள் மேடை’ அமைப்பு சார்பில் ‘பாரத சேவா’ என்ற புதிய இணையதளத் தொடக்க விழா இன்று நடைபெற்றது. ஸ்ரீ தயா அறக்கட்டளையின் தலைவர் லதா ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற […]

தமிழ்நாட்டு ஐடிஐ மாணவர்களுக்கு ஜப்பானில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு! அதிரடி ஒப்பந்தம் கையெழுத்து!

சென்னை தமிழ்நாட்டில் ஐடிஐ (ITI) தொழிற்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜப்பான் நாட்டில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலான முத்தரப்பு ஒப்பந்தம் இன்று (ஆகஸ்ட் 7) சென்னை தலைமைச் செயலகத்தில் அதிரடியாகக் கையெழுத்தானது! இது தமிழக இளைஞர்களிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னிலையில், ஜப்பானின் பிரபல ‘எஹிமே நிசான்’ (Ehime Nissan) நிறுவனம், தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை […]

தாய்லாந்து துப்பாக்கிச் சட்டங்களில் திருத்தம்?

தாய்லாந்தில் துப்பாக்கிப் பயன்பாடு தொடர்பான சட்டங்களை திருத்துவது குறித்து அந்நாட்டு அரசு கவனம் செலுத்தியுள்ளது. பாடசாலை மாணவன் ஒருவன் 8 பேரைக் சுட்டுக் கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, தொடர்புடைய சட்டங்களை திருத்துவது குறித்து தாய்லாந்து பிரதமர் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, பொது இடங்களில் துப்பாக்கிகளைக் கொண்டு செல்வதைத் தடை செய்யவும், அரசாங்க பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மட்டுமே ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடிய வகையில் சட்டங்களைத் திருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தாய்லாந்து பிரதமர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். […]

நாட்டின் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து விசேட அறிக்கை

போதைப்பொருள் குற்றங்களுக்கு மேல் நீதிமன்றத்தின் மூலம் பிணை பெறுவதற்கான வாய்ப்பு மீண்டும் வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். பல சிறைச்சாலைகளில் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். போதைப்பொருளின் நிகர எடை 10 கிராமிற்கு மேல் அதிகமாக இருக்கும் பட்சத்தில், மேல்முறையீட்டு நீதிமன்றம் மூலம் பிணை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் உறவினர்களுக்கும் […]

தீவிர கண்காணிப்பில் பதுளை சிறைச்சாலை!

பொலிஸாரின் விசேட அதிரடிப்படையின் நேரடி மேற்பார்வையின் கீழ், பதுளைப் சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்புத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மோதல்கள் இடம்பெற்ற மஹர சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்ட 10 கைதிகளும் இச்சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலை வளாகத்தில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 24 மணி நேரமும் தொடர்ச்சியான தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.