இன்று அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மீள ஆரம்பம்

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் இன்று (3) முதல் மீண்டும் நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும் ஈரானுடனான உடன்பாட்டை எட்டுவதற்கான காலக்கெடு எதையும் அவர் நிர்ணயிக்கவில்லை. ஹோர்முஸ் நீரிணையை விரைவாக மீண்டும் திறப்பது மற்றும் தெஹ்ரானின் அணுசக்தித் திறன் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஆகியவற்றுக்கான உடன்பாட்டை எட்டும் நோக்கில், உடனடியாக மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதலைத் தாம் கைவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார். ஈரானும் ஏனைய மத்திய […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணி குறித்து முழுமையான விசாரணை அவசியம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒரு சிலரை மட்டும் இலக்கு வைக்காமல் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாட்டு மக்களுக்குப் பெரும் வேதனை நிகழ்கிறது. மிகத் தெளிவான எச்சரிக்கைகளும் முன்னறிவிப்புகளும் கிடைத்திருந்த போதிலும், […]
வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசி திருட்டு

அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனைப் பகுதியில், வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கல்முனை தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண், கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டில், தனது வீட்டில் 35,000 ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசியைச் சார்ஜ் போட்டுவிட்டுத் தனது தேவை நிமித்தம் வெளியே சென்று திரும்பியபோது, ஜன்னல் கண்ணாடி […]
உத்தகந்த பகுதியில் 282 கிலோகிராம் உலர் கஞ்சா மீட்பு

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு இணங்க, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புத்தல முகாமைச் சேர்ந்த அதிகாரிகளும் இலங்கை ராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து, கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உத்தகந்த பகுதியில் கடந்த 01 ஆம் திகதி மேற்கொண்ட திடீர் சோதனையின் போது 282 கிலோகிராம் உலர் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்த உலர் கஞ்சா தொகையின் சந்தைப் பெறுமதி ஒன்றரை கோடி ரூபாவாகும் (150 மில்லியன் ரூபாய்) என்பதுடன், கஞ்சா பாறையின் மீது காயவைக்கப்பட்டு […]
நிதி மோசடி: பெண் பொலிஸ் அதிகாரி கைது
இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு சேவைகளுக்காக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அப்பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் அம்பாறை பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடத்திய உள் தணிக்கையின் (Internal Audit) போதே இந்த நிதி முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒலிபெருக்கி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம் பொலிஸ் நிலையத்திற்குக் […]
பாகிஸ்தானுக்கெதிரான இ- 20 தொடரையும் கைப்பற்றிய இலங்கை

கிஸ்தான் பெண்கள் அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை ஏற்கெனவே கைப்பற்றியிருந்த இலங்கை பெண்கள் அணி, தற்போது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரையும் கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த இலங்கை, தம்புள்ளயில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் பெண்கள் அணியின் தலைவி முனீபா அலி, தமதணி […]
கனடாவில் தந்தையின் குரலைக் கேட்டு கருவில் புன்னகைத்த குழந்தை

கனடாவில், கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை முத்தமிட்டுத் தந்தை பேசியதைக் கேட்டு, கருவில் இருந்த குழந்தை புன்னகைத்த விசித்திரமான மற்றும் அழகான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒண்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த லியா ஒலிவேரா என்ற கர்ப்பிணிப் பெண், கடந்த ஜூலை 25 ஆம் திகதி அல்ட்ராசவுண்ட் (Ultrasound) ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவரது கணவர் லியாவின் வயிற்றை மென்மையாக முத்தமிட்டு, “காலை வணக்கம்” எனக் குழந்தையிடம் பேசினார். தந்தையின் குரல் கேட்ட அடுத்த […]
மண்சரிவு அபாயம்: பல பிரதேசங்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் நான்கு மாவட்டங்களிலுள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (02) இரவு 11.00 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள மற்றும் கங்கஇஹல கோரள பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட (Level 2) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் […]
உலகின் மிகப்பெரிய ஓர்கிட் மலர் பேராதனை தாவரவியல் பூங்காவில் பூத்தது

உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் தாவரமாகக் கருதப்படும் இராட்சத ஓர்க்கிட் பூக்கள் பேராதனைத் தாவரவியல் பூங்காவில் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. Grammatophyllum speciosum என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படும் இந்த இராட்சத ஓர்க்கிட் தாவரம், உலகின் மிகப்பெரிய அளவிலான ஓர்க்கிட் தாவரமாகப் பதிவாகியுள்ளதாகப் பேராதனைத் தாவரவியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாகப் பேராதனை அரச தாவரவியல் பூங்காவின் ஓர்க்கிட் பிரிவுத் தலைவி திருமதி இரோஷணி அந்த்ராதி தெரிவிக்கையில்: “இந்த இராட்சத ஓர்க்கிட் தாவரத்தின் பூக்களைப் பேராதனைத் தாவரவியல் […]
மயான துப்பாக்கிச் சூட்டின் துப்பாக்கிதாரி கைது
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ‘செண்டோ’ என்ற குற்றவாளியின் தந்தையை ‘நிசல செவன’ மயானத்தில் வைத்து சுட்டுக் கொல்ல முயன்ற துப்பாக்கிதாரி நேற்று(02) கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றவியல் பிரிவினரால் மிஹிந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் தலைமறைவாக இருந்தபோதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ‘கொஸ்மல்லி’ என்ற குற்றவாளியினால் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்காக சந்தேகநபருக்கு இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர் 2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று […]