வடமாகாணத்தில் நியமனம் இரத்துச் செய்யப்பட்ட 389 சுகாதர பணி உதவியாளர்கள்!

வடமாகாண சுகாதரபணி உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்ட 389 பேரினதுமான தகவல்களை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டுவரை தொண்டர் அடிப்படையில் பணியாற்றிய 389 சுகாதார பணியாளர்களுக்கு வடமாகாணத்தால் நடத்தப்பட்ட இரண்டு நேர்முகத் தேர்வுகளின் பின்னர் சுகாதார சேவை உதவிப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் நியமனக் […]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மக்கள் மனதில் சந்தேகம் தொடரும் – கபிர் ஹசீம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்கள் மற்றும் இதன் பின்னணியில் இருந்த பிரதான சூத்திரதாரி யார் என்பது குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். பிரதான சூத்திரதாரி யார் என்பது இனங்காணப்படும் வரை மக்கள் மனதில் பலவிதமான சந்தேகங்களும் எண்ணங்களும் எழுவது இயல்பானதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசீம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைவரும் […]

இந்த முறை எத்தனை உயிர்கள் பலியாகும்? – நாமல் வெளியிட்ட பதிவு

நாட்டில் மற்றொரு சிறைக் கலவரம், இந்த முறை எத்தனை உயிர்கள் பலியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் சற்று முன்னர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சில வாரங்களுக்குள் நடக்கும் இரண்டாவது பெரிய சிறைக் கலவரம் இது. இது இனி ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இது மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் பெரும் அழுத்தத்தில் இருக்கும் சிறை அமைப்பின் விளைவாகும். இது இனி ஒரு தனிப்பட்ட […]

6 தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித்தலைவரும் சந்திப்பு!  

தமிழ்பேசும் மக்களின் நலன்களை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை கடந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்த 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாளை திங்கட்கிழமை (3) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையும், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவையும் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளும் […]

சுற்றுலாப் பயணிகளின் பணப்பைகளை திருடிய நபர் கைது

இலங்கை வந்துள்ள மூன்று ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து வருகை தந்த தந்தை மற்றும் அவரது இரு மகள்கள் அருகம்பே, குடகல்ல கடற்கரைக்கு அருகிலுள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளனர். அவர்கள் தம்முடைய பயணப்பைகளை அறையில் வைத்துவிட்டு கடலில் நீராட சென்ற வேளையில், அதனைச் திருடிச் சென்றுள்ளார். அந்தப் பைகளில் 3,200 அமெரிக்க டொலர்கள் மற்றும் 1,620 யூரோக்கள் மற்றும் ஆவணங்களும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் பணப்பைகளை […]

முஸ்கோகாவில் படகு விபத்து: இருவர் உயிரிழப்பு

முஸ்கோகாவில் (Muskoka) இடம்பெற்ற படகு விபத்திற்குப் பிறகு தேடப்பட்டு வந்த இருவரின் உடல்களை  கண்டெடுத்துள்ளனர். உயிரிழந்த இருவரும் டொராண்டோவைச் சேர்ந்த 32 வயதுடைய ஆண் மற்றும் 30 வயதுடைய பெண் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு 10:40 மணிக்கு, பாக்கன்ரிக் பே (Backenrig Bay) அருகே ரோசோ ஏரியில் (Lake Rosseau) இடம்பெற்ற படகு விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் (OPP) தெரிவித்துள்ளனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, […]

வெறுப்புணர்வு தூண்டப்பட்ட மிரட்டல் சம்பவம்: டொராண்டோ நபர் கைது

வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில் டொராண்டோவைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாண்ட் வீதி (Bond Street) மற்றும் ஷூட்டர் வீதி (Shuter Street) பகுதியில் ஜூலை 19 அன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தங்களது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். எவ்வித தூண்டுதலுமின்றி, குற்றம் சாட்டப்பட்ட நபர் பாதிக்கப்பட்டவரை அணுகி, தொடர்ச்சியாக இஸ்லாமிய எதிர்ப்பு (anti-Muslim) கருத்துக்களைக் கூறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர் அங்கிருந்து நடந்து செல்ல முயன்றபோதிலும், குற்றம் சாட்டப்பட்ட […]

 வெஸ்ட்ஜெட் விமான ரத்து- பதில்களைத் தேடும் பயணிகள்

வெஸ்ட்ஜெட் (WestJet) நிறுவனத்திடமிருந்து பதில்களுக்காகக் காத்திருக்கும் பயணிகள், விரக்தியிலும் தவிப்பிலும் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். கமில் கரமாலி வழங்கும் அறிக்கை. டொராண்டோ – சனிக்கிழமை பிற்பகல் டொராண்டோவின் பீயர்சன் விமான நிலையத்தின் முனையம் 3 இன் புறப்பாடுப் பகுதியில், கவலை தோய்ந்த முகங்களுடன் பயணிகள் வெஸ்ட்ஜெட் ஊழியர்களிடம் கேள்விகளைக் கேட்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வெஸ்ட்ஜெட் ஊழியர்கள் சில பயணிகளுக்கு உதவிய பிறகு வரிசை குறைவது போல் தோன்றினாலும், மீண்டும் புதிய பயணிகள் வரிசையில் இணைந்து கொண்டே இருந்தனர். […]

5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை

2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இத்தடை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. இக்காலப்பகுதியில், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவதோ அல்லது விநியோகிப்பதோ கூடாது. மேலும், பரீட்சை வினாத்தாள்களுக்குரிய வினாக்கள் அல்லது அதற்கு […]

மஹர சிறைச்சாலை தற்போதைய நிலவரம்…

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மஹர சிறைச்சாலையினுள் பதற்றநிலை ஏற்பட்டது. இதில் 7 கைதிகள் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் கைதி ஒருவர் உயிரிழந்தார். நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். அத்துடன், ஏற்பட்ட பதற்றநிலையைக் கண்காணிப்பதற்காக விமானப்படையினால் பெல் 412 ரக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் […]