ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ட்ரம்ப் தீர்மானம்

ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியதாக ட்ரம்ப் தனது ‘டிரூத்’ சமூக வல​ைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் […]

சீனப் பிரஜை வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (1) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய சீனாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 59 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எனத் குறிப்பிடப்படுகின்றது. சந்தேகநபர் குறித்த சிகரெட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் பசுமைப் பாத​ை ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார். […]

பலாலி உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்புக்காக போராட்டம்

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கக் கோரி, வசாவிளான் மக்களால் இன்று (02)கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டம் இன்று காலை 10.00 மணியளவில் வசாவிளான் சந்தியில் ஆரம்பிக்கப்பட்டது. வசாவிளான் மீள்குடியேற்ற அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்தப் போராட்டத்தில், 36 ஆண்டுகளாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது பாரம்பரிய காணிகளை விடுவித்து, மீள்குடியேறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர். இதனுடன், பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் […]

குருநகரில் பட்டாசு வெடித்ததில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மடு மாதா ஆலய யாத்திரைக்காக புறப்படும் வேளையில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்கச் செய்வதற்கு குறித்த இளைஞர் முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் அதில் அவர் […]

ரொமான்டிக் திரில்லராக தயாராகும் ‘சிக்னல் அட் 11: 30’

‘சார்பட்டா பரம்பரை’, ‘அரண்மனை 4’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் சந்தோஷ் பிரதாப் கதையின் நாயகனாக – காதலிக்கும் இளைஞனாக- நடித்திருக்கும் ‘சிக்னல் அட் 11.30’ எனும் திரைப்படம் – ரொமான்டிக் திரில்லராக தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘திருவாளர் பஞ்சாங்கம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் மலர்விழி நடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயபிரகாஷ், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் […]

‘நிறம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் முகேன் ராவ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் பல்ராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம் ‘ திரைப்படத்தில் முகேன் ராவ், பிரீத்தி அஸ்ராணி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு, கஜராஜ், சினேகா குப்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சாண்டானியோ டெர்ஸியா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். […]

நடிகர் பிரஜின் நடிக்கும் ‘ஆலி’

தமிழ் சினிமாவின் நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடி வரும் நடிகர் பிரஜின் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆலி’ திரைப்படம்- மதங்களைக் கடந்த காதல் கதையாக உருவாகி உள்ளது என்றும், இத்திரைப்படம் எதிர்வரும் 14ஆம் திகதி தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாகும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் டொக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆலி ‘ திரைப்படத்தில் பிரஜின், டொக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன், கைலாஷ், கிருஷ்ண பிரசாத், லதா தாஸ், டொக்டர் ரஞ்சித் குமார், […]

‘ஜனநாயகன்’ படத்திற்கு புது சிக்கல்

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’ படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. காவிரி நதிநீர் பங்கிட்டு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்- எதிர்வரும் மூன்றாம் திகதி பெங்களூருவில் அம் மாநில முதல்வர் டி கே சிவக்குமாரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தார். இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு தினமும் 3500 கன அடி நீரை காவிரியில் திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. […]

பெருவில் விமான விபத்து – 13 பேர் பலி

பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. செஸ்னா கரவன் சி-208 ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானம், நேற்று (1) நாஸ்கா கோடுகள் தொல்பொருள் தளத்திற்கு மேல் பறந்துகொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானது. அதில் 11 சுற்றுலாப் பயணிகளும் 2 விமானிகளும் பயணித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த பயணிகளில் ஜெர்மனியைச் சேர்ந்த இருவர், ஸ்பெயினைச் சேர்ந்த இருவர் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த ஏழு சுற்றுலாப் […]

போக்குவரத்துச் சோதனை – 187 வழக்குகள் பதிவு

அக்கரைப்பற்று பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையின் போது 187 போக்குவரத்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், 23 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவின் வழிகாட்டலில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவான் தந்தநாராயணவின் நெறிப்படுத்தலிலும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் திசாநாயக்க ஒத்துழைப்பிலும் “போக்குவரத்துச் சட்டத்தை வலுப்படுத்தும் விசேட பணி” என்ற பெயரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மாலை 5.00 மணி முதல் […]