ரொறன்ரோவின் மேற்கு பகுதியில் அதிகாலை வேளையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் தீவிர சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரொறன்ரோவின் (Toronto) மேற்குப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதையடுத்து, நபர் ஒருவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் புளூர்கோர்ட் கிராமம் (Bloorcourt Village) பகுதிக்கு அருகில் உள்ள புளூர் ஸ்ட்ரீட் வெஸ்ட் (Bloor Street West) மற்றும் டூவர்கோர்ட் ரோடு (Dovercourt Road) சந்திப்பில் நடந்துள்ளது. ஒரு கட்டிடத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதிகாலை 5:15 மணிக்கு முன்னதாகவே அப்பகுதிக்கு விரைந்ததாக ரொறன்ரோ காவல்துறை […]
மடு திருத்தல ஆவணித் திருவிழாவிற்கு வந்த இளைஞர் விபத்தில் பலி

மன்னார் – மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று(01.08.2026) இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் 06ஆம் திகதி மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தற்போது மடு திருத்தலத்தில் வந்து தங்கியுள்ளனர். அந்த வகையில் மடு திருத்தலத்திற்கு வருகை தந்து தங்கியிருந்த முத்தரிப்புத்துறையை சேர்ந்த 18 வயதுடைய அந்தோனி ஜெரோம் என்ற இளைஞனே இவ்வாறு […]
மஹர மோதலுக்கு அதிக நெரிசலே காரணம் என குற்றச்சாட்டு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமைக்கு அங்குள்ள அதிக நெரிசலே காரணம் என கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்தார். சிறைச்சாலை அதிகாரிகள் அங்குள்ள உண்மை நிலைமையை மறைக்க முயற்சித்து வருவதாக அதன் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா சுட்டிக்காட்டினார். இச்சிறைச்சாலையில் 991 சந்தேகநபர்களை மட்டுமே தடுத்து வைக்க முடியும் என்ற போதிலும், தற்போது 4,447 பேர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்குத் தேவையான வசதிகள் போதுமானதாக இல்லை என்றும் […]
நாட்டில் பலத்த மழை
நாட்டில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று (02.08.2026) சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்பிளான் பகுதியில் இரட்டைச் சகோதரிகள் தமக்கு தாமே தீ மூட்டி உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வடக்கு குப்பிளான் பகுதியில் இரட்டைச் சகோதரிகள் தமக்கு தாமே தீ மூட்டி உயிரிழந்துள்ளனர். கடும் தீ காயங்களுக்கு உள்ளான குறித்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு குப்பிளான் பகுதியில் இந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு கடலில் காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவர் உயிரிழப்பு

நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்ததில் காணாமல்போயிருந்தத இரு மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. அனர்த்தத்திற்குள்ளான மற்றைய மீனவர் பாதுகாப்பாகக் கரை சேர்ந்ததையடுத்து மீட்கப்பட்டு, தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (01) பிற்பகல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்டுச் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தப் படகு விபத்துக்குள்ளாகியுள்ளமை முதன்முதலில் வேறொரு மீன்பிடிப் படகு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே தெரியவந்தது.
மோதலினால் மஹர சிறைச்சாலை வைத்தியசாலை முற்றாகச் சேதம்!

மஹர சிறைச்சாலையில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற மோதல் மற்றும் அமைதியின்மையின் போது சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருந்த வைத்தியசாலை கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹர சிறைச்சாலையை அண்மித்த 03 கிராம சேவகர் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்

மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அதனைச் சுற்றியுள்ள 03 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இராகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 246 கெண்டலியத்த வீதி மேற்கு பகுதி, 246 சி கெண்டலியத்த வீதி வடக்கு பகுதி, 181 ஜி — தம்புவ பகுதி ஆகிய 03 கிராம அலுவலர் பிரிவுகளிலேயே விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலைக்கு ஏற்பட்ட பாதிப்பு!

மஹர சிறைச்சாலையில் நேற்று (01) ஏற்பட்ட பதற்ற நிலைக்கு மத்தியில் கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டிருந்ததாக தகவல்கள் வௌியாகியுள்ளன. குறித்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த கைதிகள் குழு நேற்றிரவு முழுவதும் அங்கிருந்து தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டதுடன், பாதுகாப்புப் படையினரால் அவ்வாறான திட்டங்கள் பல சந்தர்ப்பங்களில் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவங்களின் போது அவர்களால் சிறைச்சாலையின் பல சொத்துக்களுக்குப்சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. […]
பொலிஸ் ஊரடங்கு நீக்கம்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக மறுஅறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நேற்று (1)பிறப்பிக்கப்பட்டது. இதற்கமைய, 246/கெந்தலியத்த பாலுவ – மேற்கு, 246/சீ கெந்தலியத்த பாலுவ – வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில், […]