ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது மக்களின் நற்பண்புகள்இ ஒழுக்கம் மற்றும் ஆன்மீகத்திலேயே தங்கியுள்ளது – பிரதமர்

பௌதிக வளர்ச்சி எவ்வளவு தூரம் இடம்பெற்றாலும், ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது மக்களின் நற்பண்புகள், ஒழுக்கம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியிலேயே அளவிடப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். களுத்துறை தெற்கு, ரெமுணகொட, கோன்கொட ஸ்ரீ கங்காராம புராண மகா விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட உலோக சமாதி புத்தர் சிலையைத் திறந்து வைக்கும் வைபவத்தில் இன்று (28) கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். தற்போதைய வேகமான மற்றும் சிக்கலான சமூகச் சூழலில் […]
ப்பான் நிலநடுக்கம் குறித்து…

ஜப்பானின் தெற்குப் பகுதியான குமமோட்டோவில் (Kumamoto) இன்று (28) ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான பலத்த நிலநடுக்கம் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வணிக வளாகம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், தீப்பற்றியுள்ளதாகவும், வரலாற்று சிறப்புமிக்க குமமோட்டோ கோட்டையின் சுவர்களும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, சுமார் 40,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், கைபேசி சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. அதிவேக ரயில்கள் உட்பட அனைத்து […]
சர்வதேச சகோதரிகள் தினம்

திய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி, எதிர்வரும் சர்வதேச சகோதரிகள் தினத்தை ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதியன்று கொண்டாடவுள்ளது. இந்நிகழ்வு நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பூண்டுலோயா விவேகானந்த மத்திய மகா வித்தியாலயத்தில், மகளிர் அணியின் தலைவி திருமதி சிவகெளரி (சுடரி) தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினில் பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் வழங்குதல், பெண் பிள்ளைகள் தங்கியிருக்கும் காப்பகங்களுக்கு உடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல் என்பன இடம்பெறவுள்ளன. இதில் விசேடமாக, நாடளாவிய ரீதியிலுள்ள மகளிர் அமைப்பைச் […]
கடற்கரை பகுதிகளில் புதிய வகை ஜெல்லி மீன்

பனந்துறை கடற்கரைப் பகுதியில் நீல போத்தல் ஜெல்லி மீன் (Physalia) எனப்படும் கடல் உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமை குறித்து, தேசிய நீரக வளங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகாமதரகம் (NARA) தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பொதுமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. கடற்கரைக்குச் சென்ற பலருக்கு ஜெல்லி மீன் தீண்டியதாகப் பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதியில் ஜெல்லி மீன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பனந்துறை மாநகரசபை அறிவித்ததை அடுத்து, இந்த விசாரணை தொடங்கப்பட்டது. நிலைமையை […]
தென் மாகாண முன்னாள் பிரதி பிரதம செயலாளர்கள் இருவருக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (28) கைது செய்யப்பட்ட தென் மாகாண சபையின் முன்னாள் பிரதி பிரதம செயலாளர்கள் இருவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் ஆளுநரின் அனுமதியின்றி மீண்டும் கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, காலியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து கைப்பிடிகளற்ற 408 பிளாஸ்டிக் நாற்காலிகளைப் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பிலேயே இவ்விரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். தென் மாகாண சபை பிரதம செயலாளர் அலுவலகத்தின் […]
மண்டைதீவு படுகொலை புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

மண்டைதீவு படுகொலையின் வழக்கு நேற்று(28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு புதைகுழி தொடர்பான வழக்கின் விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மேலதிக சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த வழக்கின் வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து கிருஸ்ரபெலினாவுடன் காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், […]
அவுஸ்திரேலியாவில் ஒருவரைத் தாக்கிய இலங்கை இளைஞருக்கு சிறை!

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஓடும் ரயிலில் தனியாகப் பயணம் செய்த நபர் ஒருவரை கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 22 வயதான இளைஞனுக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி கிளீவ்லேண்ட் வழித்தட ரயிலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, குறித்த இளைஞன் மற்றும் அவரது நண்பருடன் இணைந்து, ரயிலில் தனியாகப் பயணம் செய்த நபருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர் அவரை தாக்கியுள்ளனர். இதன்போது, இருவரும் […]
மக்களைக் குழப்புகின்ற செயல்பாடுகளை எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள் – கந்தசாமி பிரபு

கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களோடும் போதைக் கலாசாரத்தோடும் தொடர்புபட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக எங்களுக்கு ஆணைதந்திருந்தார்கள். ஆனால், ஆணையினை நாங்கள் நிறைவேற்றும்போது, இன்று மக்களைக் குழப்புகின்ற செயல்பாடுகளை எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்திசாமி பிரபு தெரிவித்தார். கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும் புனரமைப்பதற்குமான நிதி […]
சுரேஷ் சலேயின் ரிட் மனு பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக்கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்மனு நேற்று (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற […]
ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா முதலீடுகளுக்காக குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளதும், தற்போதைய ஜனாதிபதியின் பயன்பாட்டில் இல்லாததுமான பல ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலாத்துறையின் முதலீட்டுத் திட்டங்களுக்காக நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கடமைகள் மற்றும் தனிப்பட்ட ஓய்வு நேரங்களுக்காகப் பராமரிக்கப்பட்டு வரும் இந்த மாளிகைகள், தற்போது ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருவதோடு, அவற்றைப் பராமரித்தல், பாதுகாப்பு வழங்குதல் மற்றும் ஏனைய செலவுகளுக்காகப் பெருமளவிலான அரச பணம் செலவிடப்பட்டு வருகின்றது. மிகவும் உயர் கட்டிடக்கலை மற்றும் பொருளாதாரக் […]