ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up / தக்காளிச் சாஸ்) ஊற்றுவதைக் காட்டும் பாதுகாப்புக் கேமரா காட்சிகளை வெளியிட்டுள்ளனர். கடந்த ஏப்ரலில் முதியவர் ஒருவரைக் குறிவைத்து ஸ்கார்பரோவில் இடம்பெற்ற இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய, தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களைப் பொலிஸார் பகிர்ந்து வருகின்றனர். இச்சம்பவம் ஏப்ரல் 15 ஆம் திகதி பிற்பகல் 2:20 மணியளவில், எக்லிண்டன் அவெனியூ ஈஸ்ட் மற்றும் […]
மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில் படுகாயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை 4:45 மணிக்கு முன்னதாக, டைனவர் வீதி (Dynevor Road) மற்றும் ரோவன் அவென்யூ (Rowan Avenue) பகுதிக்கு அருகில் இச்சம்பவம் நடந்துள்ளது. அந்தச் சிறுவன் டைனவர் வீதியில் வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்துக்கான சூழல் குறித்து தெளிவான […]
இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்டு வரும் தீவிர விசாரணை குறித்து ‘சி.டி.வி நியூஸ் ரொறன்ரோ’ (CTV News Toronto) ஊடகத்தின் பெத் மெக்டொனல் செய்தி வெளியிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை யூதர்களுக்குச் சொந்தமான ‘கிவாஸ் பாகல் பார்’ (Kiva’s bagel bar) உணவகத்தின் இரண்டு வெவ்வேறு கிளைகள் இலக்கு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ரொறன்ரோ பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். இவற்றில் ஒரு கிளையின் […]
குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்
காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 58 வயதுடைய திருமணமாகாதவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றம் தொடர்பில் அருகில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கராப்பிட்டிய பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, பொலிஸார் குறித்த வீட்டில் பரிசோதனை மேற்கொண்டபோதே குளியலறையில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. […]
காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார் பரிந்துரைத்துள்ளனர். பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் செய்யப்பட்டுள்ள குறித்த பரிந்துரையை மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன, உத்பலவர்ண தேவாலய பஸ்நாயக்க நிலமேவுக்கு இன்று (26) அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேவேந்திர முனை தேவாலயத்தின் பெரஹர ஊர்வலம் இநாட்களில் நடைபெற்று வரும் நிலையில், காவடி நடன அங்கம் அடங்கிய பெரஹர எதிர்வரும் 28 ஆம் திகதி […]
இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்திருந்த பௌத்த பிக்குகள் சிலர், கிரிந்தி ஓயாவுக்கு நேற்று நீராடச் சென்றுள்ளனர். இவ்வாறு நீராடிக்கொண்டிருந்த போதே மேற்படி பிக்கு எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார். உடனடியாகப் பிரதேச மக்கள் அவரை மீட்டுத் தணமல்வில […]
மன்னாரில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட போராளிகளையும் பல்லாயிரக் கணக்கான பொது மக்களையும் நினைவு கூரும் வகையில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 43ஆம் ஆண்டு தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் நிகழ்வு நேற்று(26.07.2026) தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு, கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும், […]
விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் தொடர்பில் புதிய சட்டம்

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய விலங்கு நலச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2026 ஜூலை 17ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின் மூலம், விலங்குகள் மீது கருணை, தயவு மற்றும் சரியான கவனத்தைச் செலுத்துதல், அத்துடன் அவற்றின் பாதுகாப்பு,நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான புதிய சட்ட விதிகளை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. […]
ஹோர்முஸில் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் வெடிப்பு?

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கண்ணிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அங்கீகரித்த நீர்வழிப்பாதையை பின்பற்றாமையே இதற்கு காரணமாகும் என அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈரானிய அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு இன்றி பயணித்த போதே குறித்த எண்ணெய் தாங்கி கப்பல் வெடித்துச் சிதறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஈரான் அறிவித்த பாதையிலிருந்து கப்பல்கள் விலகிச் சென்றால், அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என இஸ்லாமிய குடியரசான ஈரான் இதற்கு […]
பாடசாலை மாணவி திடீர் மரணம்: பெற்றோர் சந்தேகம்
பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று ( 26.07.2026) பதிவாகியுள்ளது. இது குறித்து தெரிய வருகையில், பொகவந்தலாவை – மோரா பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி கடந்த 24ஆம் திகதி வீட்டில் இருந்த இரத்த அழுத்தத்திற்கு தேவையான மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார். இந்நிலையில், பாடசாலையில் வைத்து மாணவி மயக்கமடைந்த நிலையில் பொகவந்தலாவை […]