டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு

இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறைய​ை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியன இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் டெங்கு நோயைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் திறன்களை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். அமெரிக்கப் […]

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம் விவசாயிகளினாலேயே வீடு செல்லும்

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம், விவசாயிகளினாலேயே வீடு செல்லும் காலம் வரக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்டம், மிஹிந்தலை தேர்தல் தொகுதி, நாச்சியாதீவு பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இன்று நெற்செய்கை உள்ளிட்ட விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டு வருகின்றனர். பல சவால்கள் மற்றும் துயரங்களுக்கு மத்தியில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். பிள்ளைகளின் கல்விக்குக் கூட வலுவூட்ட […]

பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற பொலிஸ் அதிகாரி கைது

இரண்டு இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, மீகோட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபரான அந்த பிரதம ஆய்வாளர், நேற்று முன்தினம் இரவு (25) இரண்டு இடங்களில் இந்த விபத்துக்களை ஏற்படுத்தியதாகத் கூறப்படுகின்றது. பொலிஸ் தகவலின்படி, முதல் விபத்து ஹை லெவல் சாலையில் உள்ள மீகோட பெட்ரோல் நிலையம் அருகேயும், இரண்டாவது விபத்து வத்தரேக்க 20ஆவது தூண் பகுதியிலும் நிகழ்ந்துள்ளது. சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி, […]

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இரண்டு வாரங்களாக ஈரான் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடைநிறுத்தியுள்ளார். இதனால் மத்திய கிழக்கில் மோதலைக் குறைக்கக்கூடிய ஒரு தூதரகத் தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையை அடுத்து மசகு எண்ணெய் விலையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி பிரெண்ட் ரக பீப்பாய் கச்சா எண்ணெய் இன்று அதிகாலை 5.77 சதவீதம் வீழ்ச்சியடைந்து 92.02 அமெரிக்க டொலருக்கு விற்பனை […]